உள்ளடக்கத்துக்குச் செல்

தமாஸ்கஸ் நகர யோவான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தமாஸ்கஸ் நகர புனித யோவான்
தமாஸ்கஸ் நகர புனித யோவான் (அரேபிய திருஓவியம்)
மறைவல்லுநர்
பிறப்புசுமார் 676 கி.பி.
தமாஸ்கு
இறப்பு(749-12-04)திசம்பர் 4, 749
மார் சாபா, எருசலேம்
வணங்கும் திருஅவைகள்கிழக்கு மரபுவழி திருச்சபை
கத்தோலிக்க திருச்சபை
கிழக்கு கத்தோலிக்க திருச்சபைகள்
லூதரனியம்
ஆங்கிலிக்க ஒன்றியம்
திருவிழாதிசம்பர் 4

தமாஸ்கஸ் நகர புனித யோவான் (அரபு மொழி: يوحنا الدمشقي Yuḥannā Al Demashqi; கிரேக்க மொழி: Ιωάννης Δαμασκήνος Iōannēs Damaskēnos; இலத்தீன்: Iohannes Damascenus; also known as John Damascene, Χρυσορρόας/கிறிஸ்சோறோஸ், "streaming with gold"i.e., "the golden speaker") (c. 676 4 திசம்பர் 749) ஒரு சிரியன் கிறித்தவ துறவியும் குருவும் ஆவார். தமாஸ்கு நகரின் பிறந்த இவர், எருசலேம் நகருக்கு அருகில் உள்ள மார் சாபா என்னும் மடத்தில் மரித்தார்.[1]

பல்துறை வல்லுநர்

[தொகு]

பல்துறை வல்லுநராகிய இவர், சட்டம், இறையியல், மெய்யியல், இசை முதலியவற்றில் வல்லுனராக திகழ்ந்தார். இவர் தமாஸ்கு நகரின் காலிபாவிடம் தலைமை பொறுப்பாளராகப் முதலில் பணியாற்றினார். பின்னர் அவ்வேலையை விடுத்து துறவியானார். இவர் கிறித்தவ இறையியல் குறித்த பல நூல்களை இயற்றி உள்ளார். திருவோவியங்களைப் பயன்படுத்துவதை நியாயப்படுத்தி இவர் மூன்று நூல்களை எழுதினார். இவர் இயற்றிய பாடல்கள் பலவும் இன்றளவும் கிழக்கு திருச்சபையினரால் உலகம் முழுவதும் பயன்படுத்தப்படுகின்றன.

இவர் கத்தோலிக்க திருச்சபையின் மறைவல்லுநர்களுல் ஒருவர். இவர் மரியாவின் விண்ணேற்பை குறித்து விரிவாக எழுதியதால் இவர் விண்ணேற்பின் மறைவல்லுநர் (Doctor of the Assumption) எனப்படுகின்றார்.[2] இவருடைய திருவிழா நாள் திசம்பர் 4 ஆகும்.

இவர் கிரேக்கம் தவிர அரபு மொழியிலும் புலமை பெற்றிருந்தார் எனத் தெரிகிறது. மேலும், இசுலாமிய கலீபக ஆளுநரின் அவையில் புனித யோவானின் தந்தை பணிபுரிந்ததால் யோவானும் சிறிதுகாலம் அங்கு பணியாற்றியிருக்கலாம் என்று சிலர் கருதுகின்றனர்.

கடைசி திருச்சபைத் தந்தை

[தொகு]

சில உரோமன் கத்தோலிக்க அறிஞர்கள் கருத்துப்படி, புனித தமாஸ்கஸ் யோவான் திருச்சபைத் தந்தையர் வரிசையில் காலத்தால் இறுதியில் வந்தவர்.

திருவோவியங்களுக்கு வணக்கம் பற்றி

[தொகு]

திருவோவியங்களுக்கு வணக்கம் செலுத்துவது முறையல்ல என்று பிசான்சிய மன்னர் அறிவித்ததைத் தொடர்ந்து, தமாஸ்கஸ் யோவான் அந்த அரசு கட்டளைக்குக் கடினமான எதிர்ப்புத் தெரிவித்து நூல்கள் எழுதினார். அவர் எழுதிய நூல்கள் பின்னர் நிகழ்ந்த இரண்டாம் நீசேன் பொதுச்சங்கத்தின்போது திருவோவிய வணக்கம் பற்றிய சர்ச்சைக்குத் தீர்வு காண்பதற்கு முக்கிய ஆதாரமாகப் பயன்பட்டன.

ஆதாரங்கள்

[தொகு]
  1. M. Walsh, ed. Butler's Lives of the Saints(HarperCollins Publishers: New York, 1991), pp. 403.
  2. Christopher Rengers The 33 Doctors Of The Church Tan Books & Publishers, 200, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0895554402

மேலும் காண்க

[தொகு]
Ioannis Damasceni Opera, 1603
  • Brown, Peter Robert Lamont (2003). The rise of Western Christendom: triumph and diversity, A.D. 200-1000 (2nd, illustrated ed.). Wiley-Blackwell. ISBN 0631221387.
  • Butler, Alban; Jones, Kathleen; Burns, Paul (2000). Butler's lives of the saints: Volume 12 of Butler's Lives of the Saints Series (Revised ed.). Continuum International Publishing Group. ISBN 0860122611.
  • Jameson (2008). Legends of the Madonna. BiblioBazaar, LLC. ISBN 0554334135.
  • Louth, Andrew (2002). St. John Damascene: tradition and originality in Byzantine theology (Illustrated ed.). Oxford University Press. ISBN 0199252386.
  • McEnhill, Peter; Newlands, G. M. (2004). Fifty key Christian thinkers. Routledge. ISBN 0415170494.
  • Sahas, Daniel J. (1972). John of Damascus on Islam. BRILL. ISBN 9004034951.
  • Vila, David (2000). Richard Valantasis (ed.). Religions of late antiquity in practice (Illustrated ed.). Princeton University Press. ISBN 0691057516.
  • The Works of St. John Damascene. Martis Publishing House, Moscow. 1997.

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=தமாஸ்கஸ்_நகர_யோவான்&oldid=4350831" இலிருந்து மீள்விக்கப்பட்டது