பிரான்சிசு டி சேலசு
புனித பிரான்சிசு டி சேலசு C.O., T.O.M., க. ச | |
---|---|
Bishop of Geneva | |
Native name | François de Sales |
மறைமாவட்டம் | ஜெனீவா |
ஆட்சி பீடம் | ஜெனீவா |
நியமனம் | 15 ஜூலை 1602 (இணை ஆயர்) |
ஆட்சி துவக்கம் | 8 டிசம்பர் 1602 |
ஆட்சி முடிவு | 28 டிசம்பர் 1622 |
முன்னிருந்தவர் | கிலோட் தே கிரானிர் |
பின்வந்தவர் | ஜீன்-பிரான்சிசு தெ சேலசு |
பிற தகவல்கள் | |
பிறப்பு | சாய்து தே சேலசு, சவோய் | 21 ஆகத்து 1567
இறப்பு | 28 திசம்பர் 1622 லியோன், பிரான்சு | (அகவை 55)
சமயம் | கத்தோலிக்க திருச்சபை |
வகித்த பதவிகள் | Titular Bishop of Nicopolis ad Iaterum (1602) |
குறிக்கோளுரை | non excidet |
புனிதர் பட்டமளிப்பு | |
திருவிழா |
|
ஏற்கும் சபை | |
பகுப்பு | ஆயர், மறைவல்லுநர் |
முத்திப்பேறு | 8 ஜனவரி 1661 உரோமை நகரம் திருத்தந்தை ஏழாம் அலெக்சாண்டர்-ஆல் |
புனிதர் பட்டம் | 8 ஏப்ரல் 1665 உரோமை நகரம் திருத்தந்தை ஏழாம் அலெக்சாண்டர்-ஆல் |
சித்தரிப்பு வகை | இயேசுவின் தூய இருதயம், முள் முடி |
பாதுகாவல் | பேக்கர், ஓரிகன்; சின்சினாட்டி; எழுத்தாளர்கள்; செய்தியாளர்கள்; கொலம்பஸ் (ஒகையோ); காது கேட்காதவர்கள்; கல்வியாளர்; அபிங்டன், தென் ஆப்பிரிக்கா; வில்மிங்டன், டெலவெயர்; எழுத்தாளர்; செய்தியாளர்; the Institute of Christ the King Sovereign Priest |
திருத்தலங்கள் | அன்னசி, பிரான்சு |
பிரான்சிசு டி சேலசு (பிரெஞ்சு மொழி: Saint François de Sales, ஆகஸ்ட் 21, 1567 - டிசம்பர் 28, 1622) ஜெனீவா நகரின் முன்னாள் ஆயரும், உரோமன் கத்தோலிக்க திருச்சபையின் புனிதரும் ஆவார். இவர் சீர்திருத்தத் திருச்சபையினரை மீண்டும் கத்தோலிக்க திருச்சபையோடு சேர்க்க அரும்பாடுபட்டார். இவர் ஒரு சிறந்த மறை சொற்பொழிவாளர். இவரின் புத்தகங்கள், குறிப்பாக Introduction to the Devout Life மற்றும் Treatise on the Love of God ஆன்மீக உருவாக்கம் மற்றும் ஆன்மீக வழிகாட்டலுக்கு பெரிதும் பயன்படுகின்றன. இயேசுவின் திரு இருதயம், கன்னி மரியின் மாசற்ற இதயம் குறித்தான இவரின் படைப்புகள் ஜீன் யூட்ஸை இயேசு மற்றும் மரியாயின் இதயங்களுக்கான பக்தியை துவக்க காரணியாயிருந்தது.[1]
வாழ்க்கைக் குறிப்புகள்
[தொகு]இளமைக் காலம்
[தொகு]21 ஆகஸ்டு 1597-இல் , பிரான்சு நாட்டில் உள்ள சாவாய் குடும்பத்தில் இவர் பிறந்தார். இவரின் தந்தை பிரான்சிசு டி பையோசி, தாய் பிரான்சிசு சியோன்ஸ். ஆறு பிள்ளைகளுள் தலைப் பேறு ஆனதால், இவருக்கு உயர்தர கல்வி இயேசு சபையினரின் மேற்பார்வையில் அளிக்கப்பட இவரின் தந்தை ஏற்பாடு செய்தார். 1583-இல் பாரிஸ் நகரில் உள்ள காலேஜ் தே கிலமோண்டில் மேற்கல்வி கற்க சென்ற போது, அங்கே மனிதனின் முடிவைக்குறித்த விவாதத்தில் ஈடுபட்டார். அப்போது தான் கண்டிப்பாக நரகத்திற்கு செல்வது உறுதி என எண்ணி மிகவும் வருந்தினார். அதனால் ஏற்பட்ட துக்கத்தினால் டிசம்பர் 1586-இல் உடல் நலம் குன்றியது. 1587 சனவரியில் தெற்கு பிரான்சில் உள்ள ஆலயம் ஒன்றிற்கு திருப்பயணம் மேற்கொண்டார். அங்கே கடவுளுக்கு தன் வாழ்வினை அர்ப்பணிக்க முடிவு செய்து, கடவுள் அன்பாய் இருகின்றார் என விவிலியம் கூறுகின்றது, ஆதலினால், அவரிடம் முழு நம்பிக்கை வைத்து அவர் காட்டும் பாதையில் செல்ல தீர்மானித்தார்.
கல்வி
[தொகு]1592-இல் சட்டம் மற்றும் இறையியல் துறைகளில் முனைவர் பட்டத்தை பதுவா பல்கலைக்கழகத்தில் பெற்றார். இங்கே தான் தனக்கு இறை அழைத்தல் இருப்பதாக முதன் முதலில் உணர்ந்தார். படிப்பு முடிந்ததும், உடணே வீடு திரும்பாமல், லார்த்தோ, இத்தாலியில் உள்ள மரிஅன்னை திருத்தளத்திற்கு திருப்பயணம் சென்றார்.
மனித நேயம், சொல்லாட்சிக் கலை, இறையியல், மற்றும் சட்டம் படித்தப் பின்னர், தன் தந்தை பார்த்து வைத்திருந்த செல்வந்தக் குடும்பப்பெண்ணை மணக்காமல் குருவாக தீர்மானித்தார். அப்போதய ஜெனீவா நகர ஆயரின் அழைப்பை ஏற்று, குருமடத்தில் சேர்ந்து, குருவாகி, அம்மறை மாவட்ட கத்தீடிரலில் 1593-இல் பணிபுரிந்தார்.
ஆயராக
[தொகு]1517-இல் கிறித்தவச் சீர்திருத்த இயக்கம் ஆரம்பமானதிலிருந்து, சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனீவா நகரின் கத்தோலிக்க ஆயர்கள் பிரான்சில் உள்ள அன்னெசி என்னும் இடத்தில் தங்கியிருந்தனர், பிரான்சிசு கதிடிரலில் பணிசெய்து கொண்டுருந்ததால், சவாய் நகரில் இருந்த சீர்திருத்தத் திருச்சபையினரிடம் மறை பரப்பலானார், இவரின் முயர்ச்சியால் பலரும் கத்தோலிக்கத்திற்கு திரும்பலாயினர்.
இவர் உரோமை நகரம் மற்றும் பாரிஸ் நகருக்கு பயணம் செய்து திருத்தந்தை எட்டாம் கிளமெண்ட் மற்றும் பிரெஞ்சு அரசன் ஆறாம் ஹென்றியும் உடன்பாடு செய்ய வைத்தார்.
1602-இல் ஜெனீவா ஆயரின் இறப்புக்குப் பின், பிரான்சிசு டி சேலசு புதிய ஆயராக அருட்பொழிவு செய்யப்பட்டார். இவரின் ஆயத்துவ பணியின் போது, எல்லோரும் இவரை சிறந்த மறையுரையாளராகவும், ஏழை எளியவரின் நண்பராகவும் கண்டனர். இவரின் புத்தகங்களில் இவரின் பிரெஞ்சு மொழி, இத்தாலிய மொழி மற்றும் இலத்தீன் மொழியின் ஆற்றல் வெளிப்பட்டது.
6 ஜூன், 1610-இல் புனித ஜேன் பிரான்சிஸ் டி சன்டாலேடு சேர்ந்து, மாதா மிணவுதல் சபை என்னும் பெயரில், பெண்களுக்கான துறவர சபையினை துவக்கினார்.
அவர் 28 டிசம்பர் 1622 - இல் லியோன், பிரான்சில் இறந்தார், அப்போது சவாயின் பிரபு முதலாம் சார்லஸ் இம்மானுவலோடு பயணித்துக்கொண்டிருந்தார்.
இறப்புக்குப் பின்
[தொகு]திருத்தந்தை ஏழாம் அலெக்சாண்டர், பிரான்சிசு டி சேல்சுக்கு 1661-இல் அருளாளர் பட்டமும், மூன்று வருடத்துக்கு பின் புனிதர் பட்டமும் அளித்தார். 1877-இல் திருத்தந்தை ஒன்பதாம் பயஸ் இவருக்கு மறைவல்லுநர் பட்டம் வழங்கினார்.[2]
அன்னெசி நகரில் உள்ள மரியாள் எலிசபெத்தை சந்தித்ததன் நினைவாக உள்ள பேராலயத்தில் இவரின் கல்லறை உள்ளது. பல புதுமைகள் அங்கே நிகழ்வதாக கூறப்படுகின்றது. இவரின் விழா நாள் சனவரி 24 ஆகும்.
பாதுகாவல்
[தொகு]1923-இல் திருத்தந்தை ஒன்பதாம் பயஸ் இவரை எழுத்தாளர்களுக்கும், செய்தியாளர்களுக்கும் பாதுகாவலராக அறிவித்தார்.
இவர் செவிடருக்கு மறைக்கல்வி போதிக்கும் வழிவகைகளை கண்டுபிடித்ததினால் இவரை செவிடருக்கு பாதுகாவலராக கொள்வர்.
புனித தொன் போஸ்கோ 1859-இல் துவங்கிய சபையை இவரின் பாதுகாவலில் வைத்து, சலேசியர்கள் எனப் பெயர் சூட்டினார்.
குறிப்புகள்
[தொகு]- ↑ Mary's Immaculate Heart by John F. Murphy 2007 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1406734098 page 24
- ↑ John J. Crawley. "St. Francis de Sales, Bishop, Doctor of the Church". Lives of Saints. EWTN. Archived from the original on 2019-07-05. பார்க்கப்பட்ட நாள் 2008-01-14.
இந்தக் கட்டுரை தற்போது பொது உரிமைப் பரப்பில் உள்ள வெளியீடு ஒன்றின் பகுதிகளைக் கொண்டுள்ளது: "St. Francis de Sales". Catholic Encyclopedia. (1913). நியூயோர்க்: இராபர்ட் ஆப்பில்டன்.
நூல்கள்
[தொகு]- Introduction to the Devout Life (Translated and Edited by John K. Ryan), Doubleday, 1972. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-385-03009-0
- Introduction to the Devout Life, TAN Books, 2010. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0895552280
- Treatise on the Love of God, TAN Books, 1997. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780895555267
- The Catholic Controversy: St. Francis de Sales' Defense of the Faith, TAN Books, 1989. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780895553874
- Set Your Heart Free (Edited by John Kirvan), Ave Maria Press, 2008. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-59471-153-4
- Sermons of St. Francis de Sales On Prayer, TAN Books, 1985. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780895552587
- Sermons of St. Francis de Sales on Our Lady, TAN Books, 1985. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0895552594
- Sermons of St. Francis de Sales For Lent, TAN Books, 2009. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0895552600
- Sermons of St. Francis de Sales for Advent and Christmas, TAN Books, 1987. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780895552617
வெளி இணைப்புகள்
[தொகு]- "St. Francis de Sales". கத்தோலிக்க கலைக்களஞ்சியம் (ஆங்கிலம்). (1913).
- International Commission on Salesian Studies All about St. Francis de Sales worldwide
- Founder Statue in St Peter's Basilica
- Francis de Sales bio at Catholic.org
படைப்புகள்
[தொகு]- Introduction to the Devout Life Christian Classics Ethereal Library
- Introduction to the Devout Life Internet Archive
- Set Your Heart Free Readings from De Sales
- Spiritual Conferences பரணிடப்பட்டது 2010-01-22 at the வந்தவழி இயந்திரம்.
- The Catholic Controversy பரணிடப்பட்டது 2007-09-27 at the வந்தவழி இயந்திரம்.
- Treatise on the Love of God.