ஜனுவாரியுஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
புனித ஜனுவாரியுஸ்
புனித ஜனுவாரியுஸ்
ஆயர் மற்றும் மறைசாட்சி
பிறப்புஅண். 3ம் நூற்றாண்டு
பெனவென்டோ அல்லது நாபொலி, Campania, உரோமைப் பேரரசு
இறப்புஅண். 305
Pozzuoli, Campania
ஏற்கும் சபை/சமயம்கத்தோலிக்க திருச்சபை and கிழக்கு மரபுவழி திருச்சபை
முக்கிய திருத்தலங்கள்நாபொலி மறைமாவட்டப்பேராலயம், இத்தாலி
திருவிழாசெப்டம்பர் 19 (மேற்கத்திய கிறித்தவம்)
ஏப்ரல் 21 (கிழக்கத்திய கிறித்தவம்)
சித்தரிக்கப்படும் வகைகுருதி நிறைந்த கிண்ணம், கை
பாதுகாவல்இரத்த வங்கிகள்; நாபொலி; எரிமலை வெடிப்புகள்[1]


ஜனுவாரியுஸ் (இத்தாலியம்: San Gennaro) என்பவர் நேபில்ஸ் நகரின் ஆயராக இருந்தவர் ஆவார். இவரை மறைசாட்சி எனவும் புனிதர் எனவும் கத்தோலிக்க மற்றும் கிழக்கு மரபுவழி திருச்சபைகள் ஏற்கின்றன. இவரின் வாழ்வைக்குறித்த சமகாலத்து குறிப்புகள் ஏதுமில்லை எனினும் பிற்காலத்தயக்குறிப்புகள் இவர் தயோக்கிளீசிய துன்புறுத்துதலின் போது கொல்லப்பட்டார் என்பர்.

இவர் நாபொலி நகரின் பாதுகாவலராவார். இவரின் குருதி என கத்தோலிக்கரால் நம்பப்படும் திண்மம் (திடப்பொருள்) நாபொலி மறைமாவட்டப்பேராலயத்தில் ஒரு வெள்ளிப் பெட்டிக்குள் ஏறக்குறைய 12 செ.மீ. அகலமுடைய இரண்டு பளிங்குக் கண்ணாடிக் குப்பிகளுக்குள் பாதுகாக்கப்பட்டு வருகிறது. ஒவ்வோரு ஆண்டும் மூன்று முறை, இது நீர்மமாக (திரவமாக) மாறும் காட்சியினைக்காண மக்கள் பலர் கூடுகின்றனர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Star Quest Production Network: Saint Januarius
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜனுவாரியுஸ்&oldid=2249505" இருந்து மீள்விக்கப்பட்டது