மேற்கத்திய கிறித்தவம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மேற்கத்திய கிறித்தவம் அல்லது மேற்கு கிறித்தவம் என்பது கத்தோலிக்க திருச்சபையின் இலத்தீன் வழிபாட்டு முறைபிரிவுகளையும் வரலாற்றில் அதிலிருந்து பிரிந்து சென்ற பிற சபைகளான ஆங்கிலிக்க ஒன்றியம், லூதரனியம், மெதடிசம் மற்றும் பிற சீர்திருத்தத் திருச்சபை மரபுகளையும் குறிக்கும். இப்பதம் கிழக்கத்திய கிறித்தவத்திலிருந்து இவற்றை பிரித்துக்காட்ட பயன்படுத்தப்படுகின்றது.

மேற்கத்திய கிறித்துவம் மேற்கு, வடக்கு, மத்திய, தெற்கு மற்றும் கிழக்கு ஐரோப்பாவின் சிலப்பகுதிகள், பண்டைய வட ஆப்பிரிக்கா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் மேற்கு அரைக்கோளம் ஆகிய பகுதிகளில் வளர்ந்து ஆதிக்கம் செலுத்துவதாக இருந்து வந்தது. 16 ஆம் நூற்றாண்டு முதல் வரலாற்று கண்ணோட்டத்தில் காணும் போது, 'மேற்கத்திய கிறித்துவம்' என்பது கத்தோலிக்க திருச்சபை மற்றும் சீர்திருத்தத் திருச்சபையின் கூட்டாகவே பார்கப்படுகின்றது. இது ஒரு தனி கிறித்தவ உட்பிரிவு அல்ல. மாறாக இவை இரண்டுக்கும் இடையே உள்ள சடங்குகள், கோட்பாட்டு, வரலாற்று மற்றும் அரசியல் ஒற்றுமையின் வெளிப்பாடாகவே இப்பதம் பயன்படுகின்றது.

இன்று, மேற்கு மற்றும் கிழக்கு கிறித்துவத்துகிடையேயான புவியியல் எல்லைகள், குறிப்பாக மறைபணியாளர்களின் பரவலுக்குப்பின், கிட்டத்தட்ட இல்லாமல் போய்விட்டது.