மார்ட்டின் லூதர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மார்ட்டின் லூதர்
Martin Luther
1529இல் லூதர், லூக்காஸ் கிரனாச்
பிறப்பு நவம்பர் 10, 1483(1483-11-10)
எயிஸ்லபென், புனித ரோமப் பேரரசு
இறப்பு பெப்ரவரி 18, 1546(1546-02-18) (அகவை 62)
எயிஸ்லபென், புனித ரோமப் பேரரசு
பணி துறவி, மதகுரு, இறையியலாளர்
சமயம் லூதரனியம்; முதலில் கத்தோலிக்கத் திருச்சபை
பெற்றோர் ஹான்ஸ் லூதர் (15ஆம் நூற்றாண்டு); மார்கரட் லூதர்
வாழ்க்கைத் துணை கத்தரீனா ஃபோன் போரா
பிள்ளைகள் ஹான்சு, எலிசபெத், மகதலேனா, மார்ட்டின், பவுல், மார்கரட்
கையொப்பம்

மார்ட்டின் லூதர் (Martin Luther, நவம்பர் 10, 1483பெப்ரவரி 18, 1546) ஒரு கிறித்தவத் துறவியும் செருமனிய மதகுருவும், இறையியலாளரும், பல்கலைக்கழகப் பேராசிரியரும், புரட்டஸ்தாந்தத்தின் தந்தையும், திருச்சபைச் சீர்திருத்தவாதியும் ஆவார். இவரது கருத்துக்கள் புரட்டஸ்தாந்தச் சீர்திருத்தத்தில் செல்வாக்குச் செலுத்தி மேனாட்டு நாகரிகத்தின் போக்கையே மாற்றியது.

லூதருடைய இறையியல், மதஞ்சார்ந்த அதிகாரம் விவிலியம் மட்டுமே என்னும் அடிப்படையில், திருத்தந்தையின் அதிகாரத்துக்குச் சவால் விடுத்தது.

இவர் அப்போதிருந்த பணம் பெற்றுக் கொண்டு பாவ மன்னிப்பு வழங்கும் முறையைக் கடுமையாக எதிர்த்தார். தமது புரட்சிகரமான கருத்துக்களால் அப்போதிருந்த போப் (Pope Leo X) ஆலும், சக்கரவர்த்தி சார்லஸ் (Holy Roman Emperor Charles V) ஆலும் எதிர்க்கப்பட்டார். [1]

விவிலிய மொழிபெயர்ப்பு[தொகு]

1522ஆம் ஆண்டு முதன்முதலாக புதிய ஏற்பாட்டைச் இடாய்ச்சு மொழியில் வெளியிட்டார். அவரும் அவரின் கூட்டணியாளரும் சேர்ந்து 1534ஆம் ஆண்டு பழைய ஏற்பாட்டை மொழிபெயர்த்து வெளியிட்டனர். லூதர் இம்மொழிப்பெயர்ப்புகளைத் தன் சித்தாந்தங்களுக்கு ஒத்துப்போகும்படி மாற்றி அமைத்தார். "மட்டும்" என்னும் சொல்லை "நம்பிக்கை" என்னும் சொல்லுக்குப் பின் சேர்த்து, உரோமையர் 3:28ஐ "நம்பிக்கையின் வாயிலாக மட்டுமே எவரும் கடவுளுக்கு ஏற்புடையவராக முடியும்" என மொழிபெயர்த்தார்.[2]

இடாய்ச்சு மொழிப் பற்று அதிகமாய் இருந்த காலத்தில் இம்மொழிபெயர்ப்பு வெளிவந்ததாலும், பாமர மக்களும் புரிந்து கொள்ளும் அளவுக்கு இருந்ததாலும் இது பலராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

குறிப்புகள்[தொகு]

  1. http://www.reformation.org/luther.html
  2. Mullett, 148.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மார்ட்டின்_லூதர்&oldid=2222714" இருந்து மீள்விக்கப்பட்டது