இயேசுவின் பணிவாழ்வு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இயேசு திருத்தூதர்களை அழைத்தல்

இயேசுவின் பணிவாழ்வு அல்லது இயேசுவின் மறைபணி என்பது யோர்தான் ஆற்றில் இயேசு கிறித்து திருமுழுக்கு பெறுவதில் தொடங்கி அவரின் இறுதி இராவுணவு முடிய உள்ள அவரின் வாழ்க்கைப் பகுதியினைக் குறிக்கும்.[1] லூக்கா நற்செய்தி (3:23) இயேசு தம் பணியைத் தொடங்கியபோது, அவருக்கு வயது ஏறக்குறைய முப்பது எனக்குறிக்கின்றது.[2][3] வரலாற்றாசிரியர்களின் படி இயேசுவின் பணிவாழ்வு கி.பி 27-29 இல் துவங்கி கி.பி 30-36 இல் முடிவடைந்திருக்கலாம்.[2][3][4]

கலிலேயாவில் தொடக்கப் பணிவாழ்வு இயேசுவின் திருமுழுக்கிற்குப் பிறகு சோதனைக்காக கலிலேயாவுக்குத் திரும்பி வருவதிலும்.[5] கலிலேயாவில் பணியாற்றி தனது முதல் சீடர்களை தேர்வுசெய்வதிலும் அடங்குகின்றது.[1][6] கலிலேயாவில் பணிவாழ்வில் திருத்தூதர்களைத் தேர்வு செய்வதிலும், இயேசுவின் பணிவாழ்வின் பெரும் பகுதியுமாக அமைகின்றது.[7][8] கலிலேயாவில் இறுதி பணிவாழ்வு திருமுழுக்கு யோவானின் இறப்பில் தொடங்கி எருசலேம் செல்ல இயேசு ஆயத்தமாவதற்கு முன் முடிவடைகின்றது.[9][10] யூதேயாவில் இயேசுவின் பணிவாழ்வில் யூதேயாவழியாக எருசலேம் செல்ல இயேசு ஆயத்தமாகின்றார்.[11][12][13][14][13][14] இக்காலத்தில் அவர் தான் முன்னர் திருமுழுக்கு பெற்ற யோர்தார் ஆற்றங்கரைப்பகுதிகளில் பணியாற்றினார்.[15][16][17]

இயேசுவின் பணிவாழ்வின் இறுதி வாரம் எருசலேமில் நிகழ்ந்தது. இது திருப்பாடுகளின் வாரம் எனவும் அழைக்கப்படுகின்றது. இது இயேசு வெற்றி ஆர்ப்பரிப்போடு எருசலேமில் நுழைதலில் தொடங்குகின்றது.[18] எல்லா நற்செய்தி நூல்களும் இயேசுவின் பணிவாழ்வின் பிற கட்டங்களைவிட இதனையே அதிகம் (மூன்றில் ஒரு பங்கு) விவரிக்கின்றன.[19]

மேற்கோள்கள்[தொகு]

 1. 1.0 1.1 Christianity: an introduction by Alister E. McGrath 2006 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4051-0901-7 pages 16-22
 2. 2.0 2.1 The Cradle, the Cross, and the Crown: An Introduction to the New Testament by Andreas J. Köstenberger, L. Scott Kellum 2009 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8054-4365-3 page 140
 3. 3.0 3.1 Paul L. Maier "The Date of the Nativity and Chronology of Jesus" in Chronos, kairos, Christos: nativity and chronological studies by Jerry Vardaman, Edwin M. Yamauchi 1989 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-931464-50-1 pages 113-129
 4. Jesus & the Rise of Early Christianity: A History of New Testament Times by Paul Barnett 2002 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8308-2699-8 pages 19-21
 5. The Gospel according to Matthew by Leon Morris பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-85111-338-9 page 71
 6. The Life and Ministry of Jesus: The Gospels by Douglas Redford 2007 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7847-1900-4 pages 117-130
 7. A theology of the New Testament by George Eldon Ladd 1993ISBN page 324
 8. The Life and Ministry of Jesus: The Gospels by Douglas Redford 2007 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7847-1900-4 pages 143-160
 9. Steven L. Cox, Kendell H Easley, 2007 Harmony of the Gospels பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8054-9444-8 pages 97-110
 10. The Life and Ministry of Jesus: The Gospels by Douglas Redford 2007 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7847-1900-4 pages 165-180
 11. The Christology of Mark's Gospel by Jack Dean Kingsbury 1983 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8006-2337-1 pages 91-95
 12. The Cambridge companion to the Gospels by Stephen C. Barton பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-521-00261-3 pages 132-133
 13. 13.0 13.1 Steven L. Cox, Kendell H Easley, 2007 Harmony of the Gospels பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8054-9444-8 pages 121-135
 14. 14.0 14.1 The Life and Ministry of Jesus: The Gospels by Douglas Redford 2007 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7847-1900-4 pages 189-207
 15. Steven L. Cox, Kendell H Easley, 2007 Harmony of the Gospels பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8054-9444-8 page 137
 16. The Life and Ministry of Jesus: The Gospels by Douglas Redford 2007 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7847-1900-4 pages 211-229
 17. Mercer dictionary of the Bible by Watson E. Mills, Roger Aubrey Bullard 1998 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-86554-373-9 page 929
 18. Steven L. Cox, Kendell H Easley, 2007 Harmony of the Gospels பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8054-9444-8 pages 155-170
 19. Matthew by David L. Turner 2008 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8010-2684-9 page 613
"https://ta.wikipedia.org/w/index.php?title=இயேசுவின்_பணிவாழ்வு&oldid=2696023" இலிருந்து மீள்விக்கப்பட்டது