நாசரேத்துக்குத் திரும்பிச் செல்லுதல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நாசரேத்தில் இயேசுவின் குழந்தைப் பருவம்

நாசரேத்துக்குத் திரும்பிச் செல்லுதல் திருவிவிலியத்தின் புதிய ஏற்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ள இயேசுவின் வாழ்க்கைக் காட்சி. அதன் படி யோசேப்பும், மரியாவும், குழந்தை இயேசுவுடன் எகிப்திலிருந்து நாசரேத்துக்கு வந்தனர் என லூக்கா நற்செய்தி குறிப்பிடுகிறது. அதன் பின் அவர்கள் நாசரேத்துவிலே வாழ்ந்து வந்தனர். இதனாலே இயேசு நசரேயன் எனவும் அழைக்கப்பட்டார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

விவிலிய குறிப்பு[தொகு]

இந்த காட்சியை லூக்கா நற்செய்தியும், மத்தேயு நற்செய்தியும் விவரிக்கின்றன. ஏரோது இறந்த பின், அவர்கள் இஸ்ரயேல் நாட்டுக்குச் செல்லுமாறு தூதர் பணித்தார். ஆனால் யூதேயாவில் அர்க்கெலா தன் தந்தைக்குப்பின் அரசாளுவதாகக் கேள்விப்பட்டு அங்கே போக யோசேப்பு அஞ்சியதால், கனவில் எச்சரிக்கப்பட்டுக் கலிலேயப் பகுதிகளுக்குப் புறப்பட்டுச் சென்றார். அங்கு அவர் நாசரேத்து எனப்படும் ஊருக்குச் சென்று அங்குக் குடியிருந்தார் எனவும், இவ்வாறு, "நசரேயன்" என அழைக்கப்படுவார் என்று இறைவாக்கினர்கள் உரைத்தது நிறைவேறியது எனவும் நற்செய்திகள் குறிப்பிடுகின்றன(மத்தேயு 2:19-23),(லூக்கா:2:39-40).

ஆதாரங்கள்[தொகு]