உள்ளடக்கத்துக்குச் செல்

மலைச் சொற்பொழிவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(மலைப்பொழிவு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
மலைப் பிரசங்கம்கால் என்ரிக் புலொக்கின் ஓவியம், 1890.

மலைப்பொழிவு அல்லது மலைப் பிரசங்கம் (Sermon on the Mount) மத்தேயு நற்செய்தி 5-7 இன் படி நாசரேத்தூர் இயேசுவினால் (சுமார் கி.பி. 30 இல்) இன்றைய வடக்கு இசுரேலின் மலைப்பாங்கான பகுதியில் தமது சீடருக்கும் அங்கிருந்த பொதுமக்களுக்கும் கொடுக்கப்பட்ட ஒரு சொற்பொழிவாகும். இப்பிரசங்கத்தின் ஆரம்பம் ஆசீர்வாதங்களைக் கொண்டுள்ளது, மேலும் இது கிறிஸ்து கற்பித்த செபத்தையும், அகிம்சை, "அடுத்த கன்னத்தையும் காட்டு" போன்ற இயேசுவின் முக்கிய படிப்பினைகளைக் கொண்டுள்ளது. பல கிறித்தவர்கள் மலைப்பிரசங்கத்தை பத்துக்கட்டளைகளிற்கான இயேசுவின் விளக்கமெனக் கருதுகின்றனர். மலைப்பிரசங்கம் கிறித்தவத்தின் மையக் கருத்துக்களைக் கொண்டிருந்தது.காந்தி, டால்ஸ்ட்டாய் போன்றோர் அதனைப் பின்பற்றினார்கள்.

மலைப்பொழிவின் அமைப்பு

[தொகு]
  • முன்னுரை (மத்தேயு 5:1-2)
  • பேறுபெற்றோர் (மத்தேயு 5:3-12)
  • உப்பும் ஒளியும் (மத்தேயு 5:13-16)
  • திருச்சட்டம் நிறைவேறுதல் (மத்தேயு 5:17-48)
  • அறச்செயல்கள் (மத்தேயு 6)
  • தீர்ப்பு அளித்தல் (மத்தேயு 7:1-6)
  • புனிதம் பற்றி (மத்தேயு 7:7-29)

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]
மலைப்பொழிவு/சமவெளிப் பொழிவு
இயேசுவின் வாழ்வும் பணிகளும்
முன்னர்
திருத்தூதுப் பொழிவு
  புதிய ஏற்பாட்டு 
நிகழ்வு
பின்னர்
நயீன் ஊர்க்
கைம்பெண் மகன் உயிர்பெறுதல்
(லூக்கா நற்செய்தி 7:11-17 )

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மலைச்_சொற்பொழிவு&oldid=3135038" இலிருந்து மீள்விக்கப்பட்டது