திருத்தூதர்களை தேர்ந்தெடுத்தல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Commissioning the Twelve Apostles depicted by Domenico Ghirlandaio, 1481.

திருத்தூதர்களை தேர்ந்தெடுத்தல் அல்லது பன்னிருவரை அழைத்தல் என்பது இயேசுவின் வாழ்வில் நடந்ததாக விவிலியத்தின் ஒத்தமை நற்செய்தி நூல்களில்[1][2][3] விவரிக்கப்படும் நிகழ்வாகும். இந்த நிகழ்வு யோவான் நற்செய்தியில் குறிக்கப்படவில்லை. இது தனது முதல் சீடர்களான பன்னிரு திருத்தூதர்களை இயேசு தேர்ந்தெடுத்தலை விவரிக்கும் நிகழ்வாகும்.[4][5]

லூக்கா நற்செய்தியில் இந்த நிகழ்வு பின்வருமாறு விவரிக்கப்படுகின்றது:

அந்நாள்களில் அவர் (இயேசு) வேண்டுவதற்காக ஒரு மலைக்குப் போனார். அங்குக் கடவுளிடம் வேண்டுதல் செய்வதில் இரவெல்லாம் செலவிட்டார். விடிந்ததும் அவர் தம் சீடர்களைத் தம்மிடம் கூப்பிட்டு அவர்களுள் பன்னிருவரைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்குத் திருத்தூதர் என்று பெயரிட்டார். அவர்கள் முறையே பேதுரு என்று அவர் பெயரிட்ட சீமோன், அவருடைய சகோதரர் அந்திரேயா, யாக்கோபு, யோவான் பிலிப்பு, பர்த்தலமேயு, மத்தேயு, தோமா, அல்பேயுவின் மகன் யாக்கோபு, தீவிரவாதி எனப்பட்ட சீமோன், யாக்கோபின் மகன் யூதா, துரோகியாக மாறிய யூதாசு இஸ்காரியோத்து என்பவர்களே.

மத்தேயு நற்செய்தியில் இந்த நிகழ்வு கை சூம்பியவர் நலமடைதல் புதுமைக்கு முன்னும் மாற்கு மற்றும் லூக்கா நற்செய்தியில் அதே புதுமைக்கு பின்பும் நிகழ்வதாக குறிக்கப்பட்டுள்ளது.[6]

இயேசுவின் சாவுக்கு முன் நிகழுகம் இவ்வழைத்தல் நிகழ்வு உயிர்த்தெழுதலுக்கு பின்பு நிகழும் பெரும் அழைத்தலிலிருந்து வேறானது ஆகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Matthew 10:1-4
  2. Mark 3:13-19
  3. Luke 6:12-16
  4. The first gospel by Harold Riley, 1992 ISBN 0-86554-409-3 page 47
  5. Mercer dictionary of the Bible by Watson E. Mills, Roger Aubrey Bullard 1998 ISBN 0-86554-373-9 page 48
  6. The life of Jesus by David Friedrich Strauss, 1860 published by Calvin Blanchard, page 340