துன்பப் பாதை

இயேசு சிலுவை சுமத்தல், ராபியேல், 1516
நற்செய்திகளின்படி |
இயேசுவின் வாழ்வு |
---|
![]() |
![]() |
துன்பப் பாதை அல்லது பாடுகளின் பாதை (இலத்தீன்: "Via Dolorosa", "வயா டொலோரோசா") என்பது இயேசு சிலுவையில் அறையப்பட, சிலுவையினை சுமந்து சென்ற, எருசலேம் பழைய நகரிலுள்ள ஓர் இருபக்க வீதியாகும். அந்தோனியா கோட்டையிலிருந்து மேற்கே திருக்கல்லறைத் தேவாலயத்திற்கு வளைந்து செல்லும் பாதை 600 மீட்டர்களைக் (2,000 அடிகள்) கொண்டது. இங்கு கிறிஸ்தவ யாத்திரீகர்கள் கொண்டாடும் இடமாகும். இப்போதுள்ள பாதை முன்பிருந்த பாதைகளை விலக்கி, 18ம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டதாகும்.[1] இது இன்று ஒன்பது சிலுவைப் பாதைகள் கொண்டு காணப்படுகின்றது. 15ம் நூற்றாண்டிலிருந்து பதினான்கு சிலுவைப் பாதைகள் கொண்டு காணப்பட்டது[1] மீதி ஐந்தும் திருக்கல்லறைத் தேவாலயத்திற்குள் காணப்படுகின்றன.
குறிப்புக்கள்[தொகு]
- ↑ 1.0 1.1 Jerome Murphy-O'Connor, The Holy Land, (2008), page 37
ஆள்கூறுகள்: 31°46′45.84″N 35°13′55.46″E / 31.7794000°N 35.2320722°E