ராபியேல் சான்சியோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ராபியேலோ சான்சியோ
ராபேல் தன்னைத் தானே வரைந்தது, இரண்டாம் உலகப் போருக்குப் பின் காணப்படவில்லை.
தேசியம் இத்தாலியர்
கல்வி பெருஜினோ
அறியப்படுவது ஓவியம், கட்டிடக்கலை
குறிப்பிடத்தக்க படைப்புகள் ஆதென்ஸ் பாடசாலை
அரசியல் இயக்கம் மறுமலர்ச்சி

பெரும்பாலும் ராபியேல் என அழைக்கப்படும் ராபியேல் சான்சியோ ஒரு இத்தாலிய ஓவியரும், கட்டிடக்கலைஞரும் ஆவார். மேல் மறுமலர்ச்சிக் காலத்தைச் சேர்ந்த இவர், கச்சிதமானதும், அழகு நிறைந்ததுமான ஓவியங்களுக்குப் பெயர் பெற்றவர். மைக்கலாஞ்சலோ, லியொனார்டோ டா வின்சி ஆகியோருடன், இவரும் சேர்ந்து ஓவியத்துறையின் மும்மூர்த்திகள் எனப்பட்டார். ராபியேல் பெருமளவான உற்பத்தித் திறன் கொண்டவர். வழமைக்கு மாறான பெரிய வேலைத்தலம் ஒன்றை நிறுவி நடத்தி வந்தார். இவர் மிக இளம் வயதான 37 வயதிலேயே இறந்துவிட்டாலும், இவரது ஓவியங்கள் பெருமளவில் உள்ளன. வாட்டிகனின் உள்ள ராபியேல் கூடங்களிலுள்ள சுவரோவியங்களே இவரது மிகப்பெரிய ஓவியங்களாகும். எனினும் இவ்வோவியங்கள் நிறைவடையும் முன்பே ராபேல் இறந்துவிட்டார்.

ரோமில் இவர் இருந்த சில காலங்களுக்குப் பின் இவருக்குக் கிடைத்த பல வேலைகளை இவரது வரைபடங்களை வைத்து வேலைத்தலத்தில் இருந்த பிறரே நிறைவு செய்தனர் இதனால் இவ்வாறான ஓவியங்களின் தரத்தில் குறைவு காணப்பட்டது. இவரது வாழ்நாளில் இவர் பெரும் செல்வாக்கு உள்ளவராக விளங்கினார். எனினும் ரோமுக்கு வெளியே இவர் பெரும்பாலும், மற்றவர்களுடன் சேர்ந்து செய்த அச்சுருவாக்கப் பணிகள் மூலமே அறியப்பட்டிருந்தார். இவரது இறப்புக்குப் பின் இவரது போட்டியாளரான மைக்கலாஞ்சலோவின் புகழ் 18 ஆம், 19 ஆம் நூற்றாண்டுகளில் கூடுதலாகப் பரவியிருந்தது. இதன் பின்னர், ராபியேலின் ஓவியங்களின் தனித்துவமான இயல்புகளால் அவை மிக உயர்ந்த மாதிரிகளாகப் போற்றப்பட்டன.

இவரது தொழில் வாழ்வை மூன்று கட்டங்களாகவும் மூன்று பாணிகளாகவும் பிரிப்பது உண்டு. முதற் கட்டம் இவர் உம்பிரியாவில் இருந்த காலம். அடுத்தது 1504 முதல் 1508 வரையான காலம். ராபியேல் புளோரன்சின் கலை மரபை உள்வாங்கிக் கொண்ட காலம். இறுதியாக இவர் பாப்பரசர்களுக்கும், அவர்களுடன் நெருங்கியோருக்குமான வேலைகளைச் செய்துகொண்டு, ரோமில் மிகவும் வெற்றிகரமாக விளங்கிய 12 ஆண்டுக் காலம்.

உர்பினோ[தொகு]

ராபியேல், இத்தாலியின் மார்ச்சேப் பகுதியில் இருந்த உர்பினோ என்னும் சிறிய, ஆனால் கலை அடிப்படையில் குறிப்பிடத்தக்க ஊரில் பிறந்தார். ராபியேலின் தந்தையார், ஜியோவன்னி சான்டி அங்கிருந்த டியூக்கின் அவையில் ஓவியராக இருந்தார். உர்பினோ ஆட்சி அவையின் நற்பெயர் பெடரிகோ டா மொன்டெபெல்ட்ரோ (Federigo da Montefeltro) என்பவரால் ஏற்பட்டது. ஒப்பந்தக் கூலிப் படைத் தலைவரான பெடரிகோ பாப்பரசரினால் உர்பினோவின் டியூக் ஆக்கப்பட்டவர். உர்பினோ பாப்பக நாடுகளில் (Papal States) ஒன்றாக விளங்கிய பெடரிகோவின் அவையில் கலைத்துறையிலும் இலக்கியத்துக்கே கூடுதல் கவனம் இருந்தது.

ஜியோவன்னி சான்டி, ராபியேலின் தந்தை; இரண்டு தேவதைகளால் தாங்கப்படும் கிறிஸ்து, c.1490

ஜியோவன்னி சான்டி ஒவியர் மட்டும் அல்லாது ஒரு கவிஞராகவும் இருந்தார். இவர் பெடரிகோவின் வரலாற்றைச் செய்யுள் வடிவில் எழுதியுள்ளார். இவர் டியூக்கின் குடும்பத்துடன் நெருக்கமாக இருந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. ராபியேல் பிறப்பதற்கு முதல் ஆண்டில் பெடரிகோ, காலமானபோது ஆட்சியாளராக அவரது மகனான கிடோபால்டோ டா மொன்டெபெல்ட்டோ பதவியேற்றார். அவர் மந்துவாவின் (Mantua) ஆட்சியாளரின் மகளை மணம் முடித்தார். மந்துவாவின் அவை இசை, காட்சிக் கலைகள் போன்றவற்றுக்குப் பெயர் பெற்றது. இத்தகைய பின்னணி கொண்ட சூழலில் வளர்ந்த ராபியேலுக்கு சிறப்பான பழக்க வழக்கங்களும், சமுதாயத் திறமைகளும் வாய்க்கப் பெற்றன. இக் காலத்துக்குச் சற்றுப் பின்னர் உர்பினோவின் ஆட்சிச் சபை பால்டாசாரே காஸ்டிக்லியன் எழுதிய நூலில் கூறப்பட்ட இத்தாலிய மனித நோக்கு சார்ந்த ஒழுக்கங்களுக்கான ஒரு மாதிரி அவையாகத் திகழ்ந்தது. காஸ்டிக்லியன் 1504 ஆம் ஆண்டில் உர்பினோவில் குடியேறினார். அவ்வேளையில் ராபியேல் உர்பினோவை விட்டுச் சென்றுவிட்டார் எனினும் அங்கு அடிக்கடி வந்து போய்க்கொண்டு இருந்தார். இதனால் காஸ்டிக்லியனும், ராபியேலும் நண்பர்களாயினர். ஆட்சிச் சபைக்கு அடிக்கடி வருபவர்களும், பிற்காலத்தில் கர்தினால்களாக ஆனவர்களுமான பியெட்ரோ பிபியேனா, பியெட்ரோ பெம்போ ஆகியோரும் ராபியேலுக்கு நண்பர்கள் ஆயினர். ராபியேல் ரோமில் தங்கியிருந்த காலத்தில் எழுத்தாளர்களாகப் பிரபலமாகிக் கொண்டு இருந்த இவர்களும் ரோமிலேயே இருந்தனர். மேல் தட்டு மக்களுடன் கலந்து பழகுவதில் ராபியேலுக்கு எவ்வித பிரச்சினையும் இருந்ததில்லை. இதனாலேயே இவருக்கு இவரது தொழிலில் எதையும் இலகுவாக அடையக்கூடியதாக இருந்தது. எனினும் ராபியேல் மனித நோக்கு சார்ந்த கல்வியைப் பெற்றிருக்கவில்லை.

ஆரம்ப வாழ்க்கை மற்றும் பணி[தொகு]

பதின்ம வயதில் ராபேலே வரைந்து கொண்ட சுய ஓவியம்

ராபேல் தனது பதின்ம வயதிலேயே சுய உருவங்களை வரயத்தொடங்கினார். 1941-ல் ராபேலின் எட்டாம் வயதில் அவரது தாய் இறந்தார்.பின் மறுமணம் செய்த அவரது தந்தையும் ஆகத்து 1,1494 இல் மரணம் அடைந்தார். தனது பதினொன்றாம் அகவையிலேயே ராபேல் அனாதை ஆனார்.பின் பர்தலோமியோ எனும் மாமா ராபேலின் பாதுகாவலரானார்.பின் தனது வளர்ப்பு தாயுடனேயே சென்று விட்டார் ராபேல்.தனது வளர்ப்பு தாயிற்காக தந்தையின் பணிகளை கவணித்து வந்தார். அப்போது ராபேலுக்கு , பவுலோயுசெல்லா எனும் முன்னால் நீதிமன்ற ஓவியரின் நட்பு கிடைத்தது.பின் 1502 இல் சியன்னாவிற்கு சென்றார்.சியன்னா கத்ரீட்டலில் உள்ள நூலகத்தில் கார்ட்டூன் மற்றும் ஓவியங்களை வரைந்தார். இதுவே ராபேலின் ஓவிய வாழ்க்கைக்கு தொடக்கமாக அமைந்தது.

இத்தாலியில் ராபேல்[தொகு]

ரபேல் வடக்கு இத்தாலியில் உள்ள பல்வேறு மையங்களில் வேலை செய்தார்.ஆனால் அவர் அங்கு ஒரு "நாடோடி" வாழ்க்கை தான் மேற்கொண்டார். 1504-8 வரை அவர் இத்தாலி,ஃப்ளாரென்சில் வசித்தார்.ஆனால் ப்ளோரன்ஸில் அவர் வாழ்ந்த காலம் பற்றி பாரம்பரிய குறிப்புகள் ஏதும் இல்லை என்றாலும், அவர் அங்கு குடியுரிமை பெற்று வாழ்ந்து வந்தார் என குறிப்புகள் கூறுகின்றது.

ரோமில் ராபேல்[தொகு]

1508 இல் ராபேல் தனது வாழ்நாள் முழுவதும் வசித்த ரோமிற்குச் சென்றார். புதிய போப் இரண்டாம் ஜுலியஸ் அழைக்க போப்பின் வாட்டிகன் அரண்மனையில் உள்ள நூலகத்தில் சுவரொவியம் வரைந்தார். இதற்கு முன் அவர் இது போன்ற பெரிய குழுக்களில் பணியாற்றியது இல்லை. அதனால் அந்தச் சந்தர்பத்தை மிக பெரிய வாய்ப்பாக அவர் கருதினார்.ஆனால் அவர் அங்கு ஒரு ஓவியம் மட்டுமே வரைந்தார்.பின் சிஸ்டன் சேப்பலில் கோபுர ஓவியங்களையும் வரைந்தார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ராபியேல்_சான்சியோ&oldid=2209648" இருந்து மீள்விக்கப்பட்டது