பழைய நகர் (யெரூசலம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பழைய நகர் (யெரூசலம்)[1]*
யுனெசுக்கோ உலகப் பாரம்பரியக் களம்
Old City (Jerusalem).jpg
Map of Jerusalem - the old city - EN.png
நாடு நாட்டின் பெயர் யுனெஸ்கோவினால் குறிப்பிடப்படவில்லை[2]
இடம் யோர்தானினால் முன்மொழியப்பட்டது
வகை கலாச்சாரம்
ஒப்பளவு ii, iii, vi
மேற்கோள் 148
பகுதி அரபு நாடுகள்
பொறிப்பு வரலாறு
பொறிப்பு 1981  (5வது அமர்வு)
ஆபத்தில் உள்ளவை 1982–தற்போதும்
* பெயர் உலக பாரம்பரியப் பட்டியலில் குறித்துள்ளபடி.
பகுதி, யுனெஸ்கோவினால் வகைப்படுத்தப்பட்டபடி.

பழைய நகர் தற்போதைய யெரூசலம் நகரினுள் மதிலால் சூழப்பட்டு 0.9 சதுர கி.மி (0.35 சதுர மைல்) பரப்பளவில் அமைந்துள்ளது.[3]1860 இல் சமாதான குடியிருப்பு எனும் கட்டம் எருசலேமில் யூதரால் அமைக்கப்பட்டது. பழைய நகர் சமயங்களுக்கு ஓர் முக்கிய இடமாகவுள்ளது. கோவில் மலையும் மேற்குச் சுவரும் யூதர்களுக்கும்; புனித கல்லறைத் தேவாலயம் கிறிஸ்தவர்களுக்கும்; பாறைக் குவிமாடமும் அல் அக்சா பள்ளிவாசலும் இசுலாமியர்களுக்கும் முக்கிய இடங்களாகும்.

பழைய நகர் நான்கு பகுதிகளாக சமமற்று பிரிக்கப்பட்டு காணப்பட்டது. இப்போதுள்ள பகுதிகளின் பிரிப்பு 19ம் நூற்றாண்டில் அறிமுகமாகியது.[4] இன்று கிறிஸ்தவப் பகுதி, யூதப் பகுதி, ஆர்மேனியப் பகுதி, இசுலாமியப் பகுதி என்று தோராயமாய் பிரிக்கப்பட்டுள்ளன. 1948 அரபு-இசுரேல் போரைத் தொடர்ந்து பழைய நகர் யோர்தானால் கைப்பற்றப்பட்டு, யூதர்கள் வெளியேற்றப்பட்டனர். 1967 ஆறு நாள் போரில் இசுரேல் பழைய நகரையும் கிழக்கு எருசலேமையும் கைப்பற்றியது. இன்று, இசுரேல் முழு பகுதியையும் கட்டுப்பாட்டில் வைத்து, தேசிய தலைநகராக்கியுள்ளது

1980 இல் பழைய நகர் யுனெசுக்கோ உலகப் பாரம்பரியக் களத்தின் பட்டியலில் குறிக்கப்பட வேண்டும் என யோர்தானால் முன்மொழியப்பட்டது.[5] 1981 இல் இது பட்டியலில் சேர்க்கப்பட்டது.[6] 1982 இல் ஆபத்தான உலகப் பாரம்பரிய பட்டியலில் சேர்க்கப்பட வேண்டும் என யோர்தான் விண்ணப்பித்தது.[7] யுனெசுக்கோ உலகப் பாரம்பரியக் களம் கிழக்கு எருசலேம் பாலஸ்தீன அதிகாரத்தின் கீழ் இருக்க வேண்டுமெனவும், எருசலேமின் அந்தஸ்து பேச்சுவார்த்தை மூலம் நிரந்தர அந்தஸ்தாக தீர்க்கப்பட வேண்டுமென அறிக்கை வெளியிட்டது.[8]

2010 இல் பழைய நகரின் மதில்களுக்கு வெளியே புராதன எழுத்துக்களின் உடைந்த துண்டுகள் கண்டு பிடிக்கப்பட்டன.[9]


மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புக்கள்[தொகு]

கணனியூடான சுற்றுலா[தொகு]

ஆள்கூறுகள்: 31°46′36″N 35°14′03″E / 31.77667°N 35.23417°E / 31.77667; 35.23417

"https://ta.wikipedia.org/w/index.php?title=பழைய_நகர்_(யெரூசலம்)&oldid=1750231" இருந்து மீள்விக்கப்பட்டது