வார்ப்புரு பேச்சு:பழைய நகர் (எருசலேம்)

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


இங்குள்ள மொழிபெயர்ப்புக்களை சரிபார்த்து உதவவும். நன்றி! --Anton (பேச்சு) 06:50, 23 மார்ச் 2012 (UTC)

herod's gate என்பதை "ஹெரோடின்” வாசல் என மாற்றியுள்ளேன். அதே போல ”lions" gate என்பது சிங்கங்களின் வாசல் என பன்மையில் வர வேண்டுமென நினைக்கிறேன். பவுலிடம் உறுதி படுத்திக்கொள்ளுங்கள்.--சோடாபாட்டில்உரையாடுக 03:50, 24 மார்ச் 2012 (UTC)
நன்றி! உண்மையில் Lion's Gate என்பதற்கே மொழிமாற்றம் தேவை :) --Anton (பேச்சு) 03:58, 24 மார்ச் 2012 (UTC)
שער האריות‎ எபிரேயப் பெயருக்கு கூகுள் மொழிபெயர்ப்பு lions' gate என்று பன்மையில் மொழிபெயர்ப்பு காட்டுகிறதே?.--சோடாபாட்டில்உரையாடுக 04:10, 24 மார்ச் 2012 (UTC)
நீங்கள் கூறிப்பிட்டது உண்மைதான்! வாயிலில் கூட இரண்டு சிங்கங்களின் வடிவங்கள் காணப்படுகின்றன. ஆனால் தமிழ் வழக்கில் சிங்க வாயில் எனக் கேட்டதாக ஞாபகம். பன்மையிலேயே பாவிக்கலாம் என நினைக்கிறேன். --Anton (பேச்சு) 04:22, 24 மார்ச் 2012 (UTC)

எருசலேம் நகரின் வாயில்கள்[தொகு]

Anton, சோடாபாட்டில், எருசலேம் நகரின் வாயில்கள் பலவும் விவிலியத்திலேயே குறிக்கப்பட்டுள்ளன. அக்குறிப்புகளின் அடிப்படையில் கீழ்வருமாறு பெயர்களை அமைக்கலாம்:
1) New Gate - புது வாயில்
2) Damascus Gate - தமஸ்கு வாயில்
3) Herod's Gate - ஏரோது வாயில்
4) Lions' Gate - சிங்க வாயில்
5) Golden Gate - தங்க வாயில்
6) Dung Gate - குப்பைமேட்டு வாயில்
7) Zion Gate - சீயோன் வாயில்
8) Jaffa Gate - யோப்பா வாயில்


மேற்கூறியவற்றுள் தமஸ்கு, சீயோன், யோப்பா வாயில்கள் அந்த நகர்களை நோக்கியன. பிற பெயர்கள் சில நிகழ்வுகளின் அடிப்படையில் பிறந்தன. எ.டு.: "குப்பைமேட்டு வாயில்" - நெகேமியா 3:13-14. இவ்வாறே வார்ப்புருவில் திருத்தங்களைச் செய்கிறேன்.

"எலி வாயில்" படத்தில் காட்டப்படவில்லை என்பதால் அதை விட்டுவிடலாம். ஆங்கிலம் தவிர்த்த பிற மொழி விக்கிகளில் "எலி வாயில்" இப்படத்தில் இல்லை.

மேலும் "எருசலேம்" என்பதே தமிழ் பொதுவிவிலிய வழக்கம். அதையே முதன்மை இடுகையாகக் கொண்டால் நல்லது. வழிமாற்றாகக் கொடுக்கிறேன்.--பவுல்-Paul (பேச்சு) 05:29, 24 மார்ச் 2012 (UTC)

தங்களின் உதவிக்கு மிக்க நன்றி! --Anton (பேச்சு) 05:56, 24 மார்ச் 2012 (UTC)