உலக பாரம்பரியக் களங்களின் பட்டியல் - ஆபத்தான நிலையிலுள்ளவை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உலக பாரம்பரியக் களங்களின் பட்டியல் - ஆபத்தான நிலையிலுள்ளவை என்று ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் (யுனெசுகோ) உலகப் பாரம்பரியக் களங்களில் "உதவி நாடப்படும்" பாதுகாப்புக்குறைவு உள்ள களங்களை பட்டியலிட்டு வெளியிடுகின்றது.[1] உலக பாரம்பரியக் களங்களை பராமரிக்கும் பணியை 1972ஆம் ஆண்டில் உருவான உலக பாரம்பரிய மரபொழுங்கு[nb 1] யுனெசுகோவிடம் அளித்துள்ளது. இந்த மரபொழுங்கின் 11.4வது விதியின்படி யுனெசுகோ உருவாக்கிய உலக பாரம்பரியக் குழு இந்தக் களங்களை அழியாது பாதுகாக்க கூடுதல் முயற்சிகள் தேவைப்படுகின்ற இடங்களை இந்தப் பட்டியலில் வெளியிடுகிறது. இத்தகைய அச்சுறுத்தல்கள் எதிர்நோக்கும் ஆபத்துகளாகவோ அல்லது அந்தக் களத்தின் தன்மையை மாற்றக்கூடிய வாய்ப்புள்ள ஆபத்துகளாகவோ இருக்கலாம்.

இயற்கை சார்ந்த களங்களில் எதிர்நோக்கும் ஆபத்துக்களாக தீவாய்ப்புள்ள அல்லது மதிப்புமிக்க இனங்களின் தொகை அருகுதல், இயற்கை அழகு சிதைதல், அல்லது மனித வினைகளால் மதிப்பிழத்தல் ஆகியன உள்ளடங்கும். பண்பாட்டுக் களங்களில் எதிர்நோக்கும் ஆபத்துகளாக கட்டிடப் பொருட்கள், கட்டமைப்பு, சிதைவேலைகள் மற்றும் கட்டிட வடிவமைப்பின் சீரொழுங்கு இவற்றில் ஏற்படும் சிதைவுகளும் வரலாற்று அல்லது பண்பாட்டுச் சின்னங்களாக இருப்பதற்குரிய நம்பகத்தன்மை குறைதலும் ஆகும்.

இருவகை களங்களிலுமே தீவாய்ப்புள்ள ஆபத்துகளாக மேம்பாட்டுத் திட்டங்கள், ஆயுதச் சண்டைகள், மேலாண்மை அமைப்புக் குறைபாடுகள், மற்றும் சட்டபூர்வ தகுநிலை மாற்றங்கள் உள்ளன. பண்பாட்டுக் களங்களில் புவியியல், வானியல் மற்றும் சுற்றுச்சூழல் மாற்றங்களும் தீவாய்ப்புள்ள ஆபத்துகளாகக் கருதப்படுகின்றன.[2] 2012இல், 38 களங்கள் (17 இயற்கை, 21 பண்பாடு) ஆபத்தான நிலையிலுள்ளவையாகப் பட்டியலிடப்பட்டுள்ளன.[3] இவற்றில் பெரும்பான்மையானவை வளரும் நாடுகளில் உள்ளன; ஆபிரிக்காவில் 15உம் ஆசியாவில் 10உம்[nb 2], வட,தென் அமெரிக்காக்களில் ஏழும் ஐரோப்பாவில் மூன்றும் உள்ளன.[nb 3][4] பெரும்பாலான தீவாய்ப்புள்ள இயற்கை களங்கள் (12) ஆபிரிக்காவில் உள்ளன.[5]

இந்தப் பட்டியல் உருவாக்கத்தில் அரசியல் உள்நோக்கங்கள் இருப்பதாக குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன.[6][7]

நிலுவையிலுள்ள பட்டியல்[தொகு]

ஆப்கானித்தான்[தொகு]

பெலிசு[தொகு]

 • பெலிசு பவளத்திட்டு வைப்புகள் (2009)

சிலி[தொகு]

 • சிலி அம்பர்சுடோன் மற்றும் சான்டா லோரா (2005)

கொலம்பியா[தொகு]

 • லோசு கேடியோசு தேசியப் பூங்கா (2009)

ஐவரி கோஸ்ட்[தொகு]

 • நிம்பா மலை தீவிர இயற்கை உய்வகம் (1992) ( site borders with the 'கினி'யுடன் எல்லையைப் பகிர்கிறது) - இரண்டு காரணங்கள்: பன்னாட்டுக் குழுமமொன்றால் இரும்பு தாது சுரங்கம் அமைக்கத் திட்டம், கினியாவின் மலைப்பகுதிகளில் ஏராளமான அகதிகள்.

கொங்கோ ஜனநாயகக் குடியரசு[தொகு]

 • விருங்கா தேசியப் பூங்கா (1994)
 • கரம்பா தேசியப் பூங்கா (1996)
 • ககுசி-பீகா தேசியப் பூங்கா (1980)
 • சலோங்கா தேசியப் பூங்கா (1984)
 • ஓகாபி வனவிலங்குச் சரணாலயம் (1996)

எகிப்து[தொகு]

 • அபு மெனா (2001)
 • போர்ட் சான் லோரென்சோ கோட்டை மற்றும் போர்டோபெலோ

ஐக்கிய அமெரிக்கா[தொகு]

எத்தியோப்பியா[தொகு]

 • சிமியன் தேசியப் பூங்கா (1996)

ஜோர்ஜியா[தொகு]

 • மிக்கேட்டா வரலாற்றுச் சின்னங்கள் (2009)
 • பாக்ரதி தேவாலயம் மற்றும் கெலடி மடங்கள் (2010)

கினி[தொகு]

 • நிம்பா மலை இயற்கை உய்வகம் (1992) ( 'ஐவரி கோஸ்ட்டுடன்' எல்லையைப் பகிர்கிறது)

ஹொண்டுராஸ்[தொகு]

ஏமன்[தொகு]

இந்தோனேசியா[தொகு]

ஈரான்[தொகு]

ஈராக்[தொகு]

ஜெருசலேம்[தொகு]

நைஜர்[தொகு]

பெரு[தொகு]

ஐக்கிய இராச்சியம்[தொகு]

மத்திய ஆபிரிக்கக் குடியரசு[தொகு]

செனகல்[தொகு]

செர்பியா[தொகு]

தான்ஸானியா[தொகு]

உகாண்டா[தொகு]

வெனிசுலா[தொகு]

குறிப்புகள்[தொகு]

 1. Full title: Convention concerning the protection of the World Cultural and Natural Heritage
 2. Includes the Jerusalem site
 3. Includes two sites in Georgia

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]