பெலீசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பெலிசு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
பெலீசு
கொடி சின்னம்
குறிக்கோள்: [Sub Umbra Floreo] error: {{lang}}: text has italic markup (உதவி)  (இலத்தீன்)
"நிழலில் நான் செழிக்கிறேன்"
நாட்டுப்பண்: "Land of the Free"
அரச வணக்கம்"கடவுள் அரசியைக் காக்க"
(God Save the Queen)"
தலைநகரம்பெல்மோப்பான்
17°15′N 88°46′W / 17.250°N 88.767°W / 17.250; -88.767
பெரிய நகர் பெலீசு நகரம்
ஆட்சி மொழி(கள்) ஆங்கிலம்[1]
மக்கள் பெலீசியன், பெலீசிய
அரசாங்கம் நாடாளுமன்ற மக்களாட்சி
 •  மன்னர் (Monarch) எலிசபத் II
 •  தலைமை ஆளுநர் (அல்)
கவர்னர்
சர் கோல்வில் யங்
 •  தலைமை அமைச்சர் செம்மாண்பு சாயீது மூசா
விடுதலை ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து
 •  நாள் செப்டம்பர் 21, 1981 
பரப்பு
 •  மொத்தம் 22,966 கிமீ2 (150 ஆவது)
8,867 சதுர மைல்
 •  நீர் (%) 0.7
மக்கள் தொகை
 •  (ஜூலை 2007 தோராய மதிப்பீடு.) கணக்கெடுப்பு 297,651 (174 ஆவது2)
மொ.உ.உ (கொஆச) 2005 கணக்கெடுப்பு
 •  மொத்தம் $2.098 பில்லியன் (163 ஆவது)
 •  தலைவிகிதம் $7,832 (77 ஆவது)
மமேசு (2003)0.753
உயர் · 91 ஆவது
நாணயம் டாலர் (BZD)
நேர வலயம் (ஒ.அ.நே-6)
அழைப்புக்குறி 501
இணையக் குறி .bz
1. கணிசமானவர்கள் எசுப்பானிய மொழி மற்றும் பெலீசிய கிரியோல் (கலப்பு மொழி) பேசுகின்றனர். எசுப்பானிய மொழியை அரசஏற்பு மொழியாக ஆக்கப் பரிந்துரைக்கப்பட்டது, ஆனால் இம்முயற்சி குழப்பம் ஏற்படும் என்று கூறி கைவிடப்பட்டது.
2. இவ்வரிசை எண்கள் 2005 ஆம் ஆண்டுக்கானவை.

பெலீசு (IPA: [bəˈliːz]), முன்னர் அறியப்பட்ட பெயர்: பிரிட்டிஷ் ஹாண்டுராஸ்), நடு அமெரிக்காவில் ஆங்கிலம் பேசும் ஒரே நாடு ஆகும். பெலீசு, 100 ஆண்டுகளுக்கும் மேலாக, ஐக்கிய இராச்சியத்தின் குடிக்கீழ் இருந்த பகுதியாகும். 1973 ஆம் ஆண்டுவரை இந்நாடு பிரிட்டிஷ் ஹாண்டுராஸ் என அறியப்பட்டது. இந்நாடு 1981ல் விடுதலை பெற்று காமன்வெல்த் கூட்டுநாடுகளுக்குள் ஒன்றாகவுள்ளது. பெலீசு கரீபிய குமுகாயம் (CARICOM) என்னும் குழுவையும் நடு அமெரிக்கக் கூட்டு (Sistema de Integración Centroamericana (SICA)) என்னும் இயக்கத்தையும் சேர்ந்த நாடு. இந்நாடு தம் மக்களில் பழக்க வழக்கங்களாலும் பண்பாட்டாலும் தன்னை கரீபிய இன நாடு மற்றும் நடு அமெரிக்க நாடு என்று கருதுகின்றது. 22, 960 சதுர கி.மீ (8,867 சதுர மைல்) பரப்பளவு கொண்ட இந்நாட்டில் 294,385 மக்களே வாழ்கின்றனர் (பெலீசிய 2007 ஆம் ஆண்டு இடைக்கால கனக்குப்படி). மக்கள் அடர்த்தி, நடு அமெரிக்காவிலேயே மிகக்குறைவானது. ஆனால் இந்நாட்டின் மக்கள் பெருக்க வளர்ச்சி வீதம் 3.5% ஆகும் (2006 தோராய மதிப்பீட்டின் படி).

வெளி இணைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. http://www.travelbelize.org/faq.html
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெலீசு&oldid=3452107" இருந்து மீள்விக்கப்பட்டது