கோவில் மலை
கோவில் மலை | |
---|---|
הַר הַבַּיִת, Har haBáyith الحرم الشريف, al-Haram ash-Sharīf | |
உயர்ந்த புள்ளி | |
உயரம் | 743 m (2,438 அடி) |
புவியியல் | |
அமைவிடம் | யெரூசலம் |
மூலத் தொடர் | யூதேய மலைத்தொடர் |
நிலவியல் | |
மலையின் வகை | சுண்ணாம்புக் கல்[1] |
கோவில் மலை (Har haBáyith (எபிரேயம்: הַר הַבַּיִת), Haram Ash-Sharif (அரபு: الحرم القدسي الشريف) பழைய யெரூசலேம் நகரிலுள்ள மிக முக்கிய சமய ஸ்தலங்களில் ஒன்று. ஆயிரம் வருடங்களாக இது ஒரு சமய ஸ்தலமாக பாவிக்கப்பட்டு வருகின்றது. குறைந்தது நான்கு சமயங்கள் (யூதம், உரோம பாகால், கிறிஸ்தவம், இசுலாம்) இந்த இடத்தைப் பாவித்துள்ளன.
வேதாகமம் அடையாளத் தெளிவற்றுக் கூறிப்பிடும் இரண்டு மலைகளைக வேதாகம ஆய்வாளர்கள் அடையாளம் கண்டுள்ளனர். அவை மொரியா மலையும் சீயோன் மலையும் ஆகும்.
கடவுள் தன் தெய்வீக பிரசன்னத்திற்கான இடமாக கோவில் மலையை தேர்ந்தெடுத்தார் என யூதம் குறிப்பிடுகிறது. யூதர்களின் முக்கிய நூலாகிய தல்மூத், இந்த இடத்தில்தான் கடவுள் முதன் மனிதன் ஆதாமை உருவாக்கினார் எனக் கூறுகிறது. இந்த இடத்தில்தான் ஆபிரகாம் தன் மகன் ஈசாக்கை பலி கொடுக்க முனைந்தார். இங்கேதான் இரு யூத ஆலயங்களும் அமைந்திருந்தன. வேதாகமத்தின்படி இந்த இடம் எல்லா உயிர்களுக்கும் மத்தியமானதும் - அரச, நிதி, சமய நிலையமாக இருக்கும்.
இரண்டாம் கோவில் காலத்தில் இவ்விடம் பொருளாதார நிலையமாக செயற்பட்டது. யூத பாரம்பரியத்தின்படி, முதல் கோவில் சாலமோனால் கி.மு. 957 இல் கட்டப்பட்டு, பாபிலோனியரால் கி.மு. 586 இல் அழிக்கப்பட்டது. இரண்டாம் கோவில் கி.மு. 516 இல் செரூபாலினால் கட்டப்பட்டு, உரோம பேரரசால் கி.பி. 70 இல் அழிக்கப்பட்டது. யூத பாரம்பரியம் இங்கு மூன்றாவதும் இறுதியுமான கோவில் கட்டப்படுமென நம்புகிறது. யூதர்களுக்கு இந்த இடம் மிக புனிதமும், அவர்கள் செபம் செய்யும்போது இப்பக்கத்தை நோக்கியே செபம் செய்வர். சில யூதர்கள் இந்த இடத்தில் நடக்க மாட்டர்கள். மகா பரிசுத்த இடத்தில் தற்செயலாக நுழைவதை தவிர்க்கவே இந்த முன்னெச்சரிக்கை. யூத போதர்களின் சட்டப்படி, இவ்விடத்தில் கடவுளின் தெய்வீக பிரசன்னம் தற்போதும் உள்ளதென்கின்றனர்.[2]
இசுலாத்தில் மூன்றாவது புனித இடமாக இந்த இடம் சுன்னி இசுலாமியரால் நோக்கப்படுகிறது. உயர் புகலிடமாகவும், முகம்மது சொர்க்கத்திற்கு சென்ற இடமாகவும் இவ்விடம் கருதப்படுகிறது. கி.பி 637 இல் இசுலாமியர் எருசலேமை வெற்றி கொண்டதும் உமையா கலீபா அல் அக்சா பள்ளிவாசல் மற்றும் பாறைக் குவிமாடம் என்பவற்றை கட்ட உத்தரவிட்டார். பாறைக் குவிமாடம் கி.பி. 692 இல் கட்டி முடிக்கப்பட்டது. இக்கட்டடம் உலகத்திலுள்ள பழைய இசுலாமிய கட்டிடக் கலையாக காஃபாவிற்கு அடுத்ததாகத் திகழ்கிறது. அல் அக்சா பள்ளிவாசலானது பாறையின் தெற்குப்பக்கத்தில் மக்காவை நோக்கியவாறு கட்டப்பட்டுள்ளது. பாறைக் குவிமாடம் மத்திய பகுதியில் யூத ஆலயம் கட்டப்படாதவாறு உள்ளது.[3]
யூதம் மற்றும் இசுலாமிய உரிமை கோரலில், இந்த இடம் உலகிலுள்ள அதி போட்டியான சமய இடமாகக் காணப்படுகிறது. சிலுவைப் போர் காலத்தில், எருசலேம் இசுலாமிய சமூகம் இடையூ இன்றி இப் பகுதியை பாரமரித்தனர்.[4] 1967 இலிருந்து இசுரேல் கட்டுப்பாட்டுக்குள் உள்ள இப்பகுதி மீது இசுரேலும் பாலஸ்தீன அதிகாரமும் தத்தமக்கே இப்பகுதியில் அதிகாரம் உள்ளதென்கின்றனர். அரபு-இசுரேல் முரண்பாட்டில் இதுவே மிக முக்கிய காரணியும் ஆகும்.[5] இசுரேலிய அரசு இப்பகுதியில் இசுலாமியர் அல்லாதோர் செபிப்பதை தடை செய்துள்ளது.
அகலப்பரப்புக் காட்சி
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ New Jerusalem Finds Point to the Temple Mount
- ↑ Maimonides, Mishneh Torah, Avoda (Divine Service): The laws of the Temple in Jerusalem, chapter 14, rule 16
- ↑ Rizwi Faizer (1998). "The Shape of the Holy: Early Islamic Jerusalem". Rizwi's Bibliography for Medieval Islam. Archived from the original on 2002-02-10. பார்க்கப்பட்ட நாள் 2012-04-07.
- ↑ Haram al-Sharif பரணிடப்பட்டது 2011-09-24 at the வந்தவழி இயந்திரம், ArchNet
- ↑ "Israeli Police Storm Disputed Jerusalem Holy Site". Archived from the original on 2009-10-28. பார்க்கப்பட்ட நாள் 2009-10-28.
வெளி இணைப்புக்கள்
[தொகு]- New Evidence of the Royal Stoa and Roman Flames பரணிடப்பட்டது 2012-02-29 at the வந்தவழி இயந்திரம் வேமதாக தொல்பொருளியல் மீளாய்வு - ஆங்கிலம்