உள்ளடக்கத்துக்குச் செல்

உடன்படிக்கைப் பெட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உடன்படிக்கை பெட்டியை வணங்கும் மோசஸ் மற்றும் ஜேசுவா
உடன்படிக்கைப் பெட்டியின் மாதிரி

உடன்படிக்கைப் பெட்டி அல்லது உடன்படிக்கைப் பேழை என்பது விடுதலைப் பயணம்[1] விபரிக்கும் ஓர் பெட்டியாகும். சாட்சிப் பெட்டி எனவும் அழைக்கப்படும் இது பத்துக் கட்டளைகள் பொறிக்கப்பட்ட கற்பலகைகளைக் கொண்டது. விடுதலைப் பயணம் (நூல்)[2], எண்ணிக்கை (நூல்)[3], எபிரேயருக்கு எழுதிய நிருபம்[4], ஆகியவற்றின் கருத்துக்களின்படி, அதனுள் ஆரோனின் கோலும், குவளையில் மன்னா மற்றும் மோசே எழுதிய முதல் தோரா சுருள் என்பன இருந்ததாக கருதப்படுகிறது.[5] ஆயினும் 1 அரசர்களின் படி சாலமோனின் காலத்தில் உடன்படிக்கைப் பெட்டியினுள் கட்டளைகளின் இரு கற்பலகைகள் மாத்திரம் இருந்தது எனக் கூறுகின்றது.[6] விடுதலைப் பயணத்தின்படி, மோசேக்கு சீனாய் மலையில் வைத்து கடவுளால் கொடுக்கப்பட்ட அறிவுறுத்தலுக்கு ஏற்பவே உடன்படிக்கைப் பெட்டி உருவாக்கப்பட்டது.[7] உடன்படிக்கைப் பெட்டியை மூடியுள்ள தேவதூதர்களின் மத்தியிலிருந்து தன்னுடன் பேசுமாறு மேசேக்கு கடவுள் கூறியிருந்தார்.[8]

உசாத்துணை

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=உடன்படிக்கைப்_பெட்டி&oldid=2653983" இலிருந்து மீள்விக்கப்பட்டது