உள்ளடக்கத்துக்குச் செல்

அடித்தளக் கல்

ஆள்கூறுகள்: 31°46′41″N 35°14′07″E / 31.7780°N 35.2354°E / 31.7780; 35.2354
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாறைக் குவிமாடம் நிலத்தில் அடித்தளக் கல். மேலே இடப்பக்கத்தில் உள்ள வட்டமான துளை காணப்படுகிறது. கீழே குகைக்குச் செல்வதற்கான படிக்கட்டுகள் உள்ளன.

அடித்தளக் கல் (Foundation Stone; எபிரேயம்: אבן השתייה, எழுத்துப்பெயர்ப்பு: Even haShetiya) அல்லது பாறை (அரபு: صخرة எழுத்துப்பெயர்ப்பு: Sakhrah, எபிரேயம்: סלע எழுத்துப்பெயர்ப்பு: Sela) என்பது எருசலேமின் பாறைக் குவிமாடத்தில் இதயப்பகுதியில் அமைந்துள்ள பாறையின் பெயர் ஆகும். இது குத்தப்பட்ட கல் எனவும், பாறையின் கீழே செல்ல அக்கல்லின் தென்கிழக்கு மூலையில் அமைந்துள்ள சிறிய துவாரத்தின் நிமித்தம் அழைக்கப்படுகிறது. இது யூதப் புனித இடமும், யூதப் பாரம்பரியத்தின்படி சொர்க்கத்திற்கும் பூமிக்கும் இடையிலான ஆன்மீக இணைப்பாகப் பார்க்கப்படுகிறது. பாரம்பரியமாக யூதர்கள் இதன் பக்கமாக இருந்தபடியே செபம் செய்வர்கள். ஏனென்றால் எருசலேம் கோவிலின் மகா பரிசுத்த இடம் இருந்த இடமாக இது நம்பப்படுகிறது.

இடம்

[தொகு]

தற்கால யூத கல்வியலாளர்கள் அடித்தளக் கல் நான்கு சாத்தியமான இடங்களைப் பட்டியலிட்டுள்ளனர்:[1]

  1. இப்போதுள்ள பாறைக் குவிமாடத்திற்குக் கீழே உடன்படிக்கைப் பெட்டியின் கீழே அமைந்திருந்தது.[2]
  2. இப்போதுள்ள பாறைக் குவிமாடத்திற்குக் கீழே பீடத்தின் கீழே அமைந்திருந்தது.[3]
  3. இப்போதுள்ள பாறைக் குவிமாடத்தின் தெற்கில் எல் காஸ் நீரூற்றுக்கு அருகில் உடன்படிக்கைப் பெட்டிக்குக் கீழே அமைந்திருந்தது.[4]
  4. இப்போதுள்ள பாறைக் குவிமாடத்தின் வடக்கில் உள்ள ஆவிகள் குவிமாடத்தினுள் உடன்படிக்கைப் பெட்டிக்குக் கீழே அமைந்திருந்தது.[5]

உசாத்துணை

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Foundation Stone (Temple Mount)
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
  1. "The Hidden Secrets of the Temple Mount". Templemount.org. பார்க்கப்பட்ட நாள் 13 October 2014.
  2. "Fig 4 The Middle System (124 K)". Templemount.org. பார்க்கப்பட்ட நாள் 13 October 2014.
  3. "Fig. 3. The Central System (42 K)". Templemount.org. பார்க்கப்பட்ட நாள் 13 October 2014.
  4. "Fig. 6. The Southern System (237 K)". Templemount.org. பார்க்கப்பட்ட நாள் 13 October 2014.
  5. "Fig. 5. The Northern System (63K)". Templemount.org. பார்க்கப்பட்ட நாள் 13 October 2014.


"https://ta.wikipedia.org/w/index.php?title=அடித்தளக்_கல்&oldid=1982852" இலிருந்து மீள்விக்கப்பட்டது