சொர்க்கம்
Jump to navigation
Jump to search
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
சொர்க்கம் என்பது நல்லது செய்தவர் இறந்தபின் செல்லும் ஒரு இன்ப இடமாக பல சமயங்களில் நம்பப்படுகிறது. இதற்கு இணையாக கிறிஸ்தவ சமயத்தினர் பயன்படுத்தும் சொல் விண்ணகம் என்பதாகும்.
இந்து சமயத்தில் சொர்க்கம்[தொகு]
சொர்க்க லோகம் என்பது இந்திரனால் ஆட்சி செய்யப்படும் தேவ உலகம் . பூமியில் மனிதர்கள் வாழும் போது செய்த புண்ணியத்தால், இறந்த பின் அடையப்படும் இடம். முடிவற்ற இன்பம், சுதந்திரம் அதுவே சொர்க்கம். கன்னிப் பெண்கள், தேவதைகள், தேவர்கள், சுவைமிகு உணவு, தொடர் களிப்பூட்டல் இருக்கும் இடமாக சொர்க்கம் பல இடங்களில் வருணிக்கப்படுகிறது. இது நல்ல வழிகளில் சென்றவர்களுக்கு இறைவனால் வழங்கப்படும் தீர்ப்பு என்று நம்பப்படுகிறது. சொர்க்க லோகம் குறித்து இந்து சமய வேதங்களில் மற்றும் சாத்திரங்களில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது.