சாங்கியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சாங்கியம் இந்தியத் தத்துவங்களில் சிறப்பானதும் முன்னோடியான தத்துவம் ஆகும். கடவுள் வெளியே இல்லை உனக்குள்ளே இருக்கிறான் எனும் தத்துவக்கொள்கை.


பிரகிருதி (இயற்கை), புருடன் (அறிவுள்ள பொருள்) ஆகிய இரு பொருட்கள் பற்றி மட்டுமே பேசுகின்ற சடவாத தரிசனமாகும். பரம்பொருள் (இறைவன்) குறித்து எதுவும் கூறப்படவில்லை. உலகத் தோற்றம் (படைப்பு) படைப்பு குறித்தான கருத்துக்களை மட்டும் அத்வைத வேதாந்திகள் ஏற்றுக்கொள்கின்றனர்.

புருடன் அறிவுள்ள பொருள் என்றும் பிரகிருதி அறிவற்ற சடப்பொருள் என்றும் கூறுகின்றது. உலகமானது முக்குணங்களின் சேர்க்கையினால் உருவானது என்பது இதன் கருத்து. இந்நூலில் தத்துவ விசாரணை அதிகம் உண்டு.

நாம் ஆதியில் பிரகிருதி, பிறகு மகத்துவம், பிறகு அகங்காரம், ஐந்து தன் மாத்திரைகள், ஐந்து ஞானேந்திரியங்கள், ஐந்து கர்மேந்திரியங்கள், மனம், ஐந்து ஸ்தூல பஞ்சபூதங்கள், ஐந்து சூக்கும பஞ்சபூதங்கள், இறுதியில் புருடன் எனும் 28 சாங்கியத் தத்துவத்தில் படைப்பு பற்றி விளக்கமாக கூறுகிறது.

மேலும் ”மூலத்திற்கு மூலம் இல்லையாதலால், அதற்கு `அமூலம்` எனப்பெயர்” பஞ்ச அங்க யோகத்தால் ஞானம் தோன்றும். அது சுகத்தின் ஞானம்.

சாங்கிய தத்துவத்தை நிறுவியவர்[தொகு]

சாங்கிய தத்துவத்தை நிறுவிய கபிலர் (சாங்கியம்) விஷ்ணுவின் அம்ச அவதாரமாக வைணவர்கள் போற்றுகின்றனர். இந்து மற்றும் பௌத்த மதத்தில் கபிலரின் சாங்கியச் சிந்தனைகள் அதிகம் இடம்பெற்றுள்ளன.

சாங்கியம் கூறும் 28 (3+9+11+5) தத்துவங்கள்[தொகு]

சத்துவ குணம், இராட்சத குணம், தாமச குணம் எனும் முக்குணங்கள் சேர்ந்த மூன்று தத்துவங்கள்.

புருஷன் (அறிவுள்ள வஸ்து), பிரகிருதி (இயற்கை), மஹத் தத்துவம், அகங்காரம் மற்றும் பஞ்சபூதங்கள் எனும் ஆகாயம், காற்று, அக்னி, நீர், பூமி எனும் ஒன்பது தத்துவங்கள்.

ஐந்து ஞானேந்திரியங்களான, காது, தோல், கண், மூக்கு, நாக்கு, எனும் ஐந்துடன், ஐந்து கர்மேந்திரியங்களான, வாக்கு, கை, கால், மலத்துவாரம், சிறுநீர் குழாய் எனும் ஐந்து கர்மேந்திரியங்கள், இவற்றுடன் ’மனம்’ (மனதை ஞானேந்திரியமாகவும் அல்லது கர்மேந்திரியமாகவும் கொள்ளலாம்) சேர்த்தால் பதினொரு தத்துவங்கள்.

சப்தம் (கேட்கும் சக்தி), ஸ்பர்சம் (தொடு உணர்வு), ரூபம் (பார்க்கும் திறன்), இரஸம் (சுவைக்கும் உணர்வு), கந்தம் (வாசனை அறியும் சக்தி) எனும் ஞானேந்திரியங்களின் ஐந்து விசேஷ சேர்க்கைக் சேர்த்தால் ஐந்து தத்துவங்கள்.

உபநிடதம் மற்றும் பகவத் கீதையில் சாங்கிய சிந்தனைகள்[தொகு]

உலக படைப்பு மற்றும் சீவராசிகளின் தோற்றம் குறித்தான சாங்கிய சிந்தனைகள் உபநிடதம் மற்றும் பகவத் கீதையில் அதிகமாக கையாளப்பட்டுள்ளன. பகவத் கீதையில் சாங்கியம் என்பதற்கு ஞான யோகம் என்று பொருள்.

உசாத்துணை[தொகு]

வெளி இணைப்பு[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சாங்கியம்&oldid=2655801" இருந்து மீள்விக்கப்பட்டது