உள்ளடக்கத்துக்குச் செல்

பிரம்மகுமாரிகள் உலக ஆன்மீகப் பல்கலைக்கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிரம்மகுமாரிகள் உலக ஆன்மீகப் பல்கலைக்கழகம்
துவங்கியது1937
வகைஆன்மீக அமைப்பு
தலைமையகம்அபு மலை, ராஜஸ்தான், இந்தியா
அலுவல் மொழிகள்இந்தி, ஆங்கிலம்
தொடங்குனர்தாதா லேக்ராஜ் (1876–1969), "பிரம்மபாபா" என அழைக்கப்பட்டார்
முக்கிய நபர்கள்தாதி ஜானகி, தாதி இருதயமோகினி
வலைத்தளம்பன்னாட்டு , இந்தியா

பிரம்மகுமாரிகள் உலக ஆன்மீகப் பல்கலைக்கழகம் 1937-களில் பிரித்தானிய இந்தியாவில் தொடக்கப்பட்ட ஆன்மீக இயக்கமாகும்.[1][2][3] பிரம்ம குமாரிகள் இயக்கம் தாதா லேக்ராஜ் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டது.[4][5] பின்னாளில் இவரை பிரம்ம பாபா என அழைத்தனர்

இந்த அமைப்பு இராஜ யோக தியானம், ஆத்மா மற்றும் பரமாத்மாவைப் (சீவ-பரமாத்மா) பற்றி போதிக்கின்றது. இது அனைத்து ஆத்மாக்களும் உயர்வான நிலையையும் நல்ல பண்புகளையும் கொண்டதாக வலியுறுத்துகின்றது.[6]

தொடக்க வரலாறு

[தொகு]
ராதே போகர்தாஸ் ராஜ்வானி (1916 - 1965), ஓம் மண்டலியின் தலைவி (ஏறாக்குறைய 1964-ம் ஆண்டு வாக்கில்)

பிரம்ம குமாரிகள் அமைப்பு ஆரம்பகாலத்தில் "ஓம் மண்டலி" என்ற பெயருடன் இந்தியாவின், அன்றைய சிந்து மாகாணத்தில் உள்ள ஐதராபாத்தில் ஆரம்பிக்கப்பட்டது.[7] இப்பெயர் இதன் பின்பற்றுனர்கள் தமது ஒவ்வொரு ஆன்மீக வெளிப்படுத்தலின் போதும் "ஓம் சாந்தி" என சங்கல்பம் எடுத்துக் கொள்வதால் ஏற்பட்டது. இது பகவத் கீதையுடன் தொடர்புபட்ட சங்கல்பமாகும்.[5] இதை தொடங்கின தாதா லேக்ராஜ் (ஓம் பாபா என அழைக்கப்பட்டவர்), நகை வணிகத்தில் ஈடுபட்ட சமூகத்தில் பெரிதும் மதிக்கப்பட்ட ஒருவராவார்.[8]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Summary of movement. censamm.org
  2. What Does Brahma Kumaris Mean? brahmakumaris.org
  3. Monier-Williams, Monier (1899) Sanskrit Dictionary. Clarendon Press, Oxford. p. 292
  4. Melton, J. Gordon, ed. (2002). Religions of the world: a comprehensive encyclopedia of beliefs and practices. Santa Barbara, Calif.: ABC-CLIO. ISBN 978-1-57607-223-3.
  5. 5.0 5.1 Tomlinson, Matt; Smith, Wendy; Manderson, Lenore (2012). "4. Brahma Kumaris: Purity and the Globalization of Faith". Flows of Faith: Religious Reach and Community in Asia and Pacific. Springer. ISBN 978-94-007-2931-5.
  6. Religions of the World. A Comprehensive Encyclopedia of Beliefs and Practices. J Gordon Melton and Martin Baumann. Facts on File Inc, 2007, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8160-5458-4
  7. Matt Tomlinson; Wendy Smith; Lenore Manderson (2012). "4. Brahma Kumaris: Purity and the Globalization of Faith". Flows of Faith: Religious Reach and Community in Asia and Pacific. Springer Science + Business Media. p. 51. ISBN 978-94-007-2931-5. {{cite book}}: Missing |author1= (help)
  8. Matt Tomlinson; Wendy Smith; Lenore Manderson (2012). "4. Brahma Kumaris: Purity and the Globalization of Faith". Flows of Faith: Religious Reach and Community in Asia and Pacific. Springer Science + Business Media. p. 52. ISBN 978-94-007-2931-5. {{cite book}}: Missing |author1= (help)