தாதி ஜானகி
தாதி ஜானகி | |
---|---|
பிறப்பு | ஜானகி 1916 கராச்சி, சிந்து மாகாணம், பாகிஸ்தான் |
இறப்பு | மார்ச்சு 27, 2020 அபு மலை |
தேசியம் | இந்தியர் |
மற்ற பெயர்கள் | இராஜ யோகினி தாதி ஜானகி ஜீ |
பணி | ஆன்மீகம் |
செயற்பாட்டுக் காலம் | 1937 முதல் 2020 முடிய |
அறியப்படுவது | அகில உலகத் தலைவர், பிரம்ம குமாரிகள் அமைப்பு |
இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அபு மலையில் உள்ள பிரம்மகுமாரிகள் உலக ஆன்மீகத் தலைவரான இராஜ யோகினி தாதி ஜானகி, 1916-ஆன்டில் பிறந்த இவர் பிரம்ம குமாரிகள் அமைப்பின் பன்னாட்டுத் தலைவராக 2007-ஆம் ஆண்டு முதல் 27 மார்ச் 2020 வரை பதவி வகித்தார். வயது மூப்பு காரணமாக தமது 104-வது வயதில் 27 மார்ச் 2020 அன்று மறைந்தார். [1][2][3] [4]
வரலாறு[தொகு]
1916-ஆம் ஆண்டில் தற்போதைய பாகிஸ்தான் நாட்டின் சிந்து மாகாணத்தின் பிறந்த ஜானகி தமது 21-ஆம் அகவையில், 1937-இல் பிரம்ம குமாரிகள் அமைப்பில் இணைந்தார். 1970-ஆம் ஆண்டில் இலண்டன் சென்று மேற்கத்திய நாடுகளில் இந்தியத் தத்துவம் மற்றும் இராஜ யோக தியானத்தை பரப்பி, 140 நாடுகளில் பிரம்ம குமாரிகள் அமைப்பின் கிளைகளை நிறுவியுள்ளார். தூய்மை மற்றும் பொது சுகாதாரத்தில் சிறப்பாக பங்காற்றியதற்காக, தூய்மை இந்தியா இயக்கத்தின் தூதுவராக இவரை இந்திய அரசு நியமித்தது.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ பிரம்ம குமாரிகள் தலைவர் மரணம்
- ↑ பிரம்மா குமாரிகள் இயக்க தலைமை நிர்வாகி ராஜயோகினி தாதி ஜானகி முக்தி அடைந்தார்
- ↑ பிரம்ம குமாரிகள் அமைப்பின் தலைமை நிர்வாகி தாதி ஜானகி காலமானார்
- ↑ பிரம்ம குமாரிகள் இயக்கத்தின் தலைவி தாதி ஜானகி ஜி மறைவு
வெளி இணைப்புகள்[தொகு]
- Rajyogini Dadi Janaki பரணிடப்பட்டது 2020-03-28 at the வந்தவழி இயந்திரம்
- Dadi Janaki Life History