பிரகிருதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பிரகிருதி[1] (Prakriti) (சமசுகிருதம்|प्रकृति) என்பது "அசல் அல்லது முதன்மையான பொருளின் அசல் அல்லது இயற்கை வடிவம் அல்லது நிலை"யைக் குறிக்கும்.[2]சமசுகிருத மொழியில் பிர எனில் முன்னர் என்றும்; கிருதி எனில் படைப்பு (உருவாக்கம்) என்று பொருள். இது சாங்கிய தத்துவத்தில் இயற்கை அல்லது பொருளைக் குறிக்கிறது. சாங்கியத்தில் பிரகிருதி புருஷ வாதம் என்றும்; பிரகிருதி பரிணாம வாதம் என்றும் அழைக்கப்படுகிறது. புருஷன் எனப்படும் அறிவோனையும், அதனால் அறிந்து கொள்ளப்படுகிற பேரியற்கையான பிரகிருதியையும் பற்றிக் கூறப்படுகின்ற கோட்பாடு என்பதால் பிரகிருதி புருஷ வாதம் என்று பெயர். பிரகிருதியிலிருந்து மஹத் உள்ளிட்ட 25 விஷயங்கள் பரிமாணம் அடைவதை, அதாவது மாற்றமடைந்து வெளிப்படுவதைக் கூறுவதால் பிரகிருகிதி பரிணாம வாதம் என்று இதற்கு பெயர்.

பரிணாமம் என்றால் முந்தைய நிலையிலிலிருந்து படிப்படையாக அடைகின்ற முன்னேற்றம் அல்லது வளர்ச்சி நிலை என்று பொருள். டார்வின் கூறும் பரிமாண வளர்ச்சி அல்ல; இது பேரண்டப் பரிமாணத்தைக் குறிக்கிறது. பிரகிருதி எனும் சொல்லை ஆங்கிலத்தில் புரோகிரியேட் (Procreate) என்பர். இதன் பொருள் பிரகிருதி என்பதே. அதாவது பிரசவிப்பதற்கான நிலை அல்லது படைப்பதற்கான நிலை என்பதே இதன் பொருள். பிரகிருதியே பேரண்டத் தொடக்கத்திற்கு மூல காரணம். இந்த பிரகிருதியிலிருந்து மஹத் தொடங்கி மண் ஈறாக 24 படைப்புகள் வெளிப்படுகிறது. இந்த 24 தத்துவங்களோடு புருடன் எனும் தத்துவத்தைச் சேர்த்தால் 25 தத்துவங்களாகும். [3]

பிரகிருதி[தொகு]

மூலப் பிரகிருதி அல்லது பிரதானம் எனப்படும் வெளிப்படா பேரியற்கையின் வெளிப்பட்ட தோற்றமே பிரகிருதி ஆகும். பிரதானத்திற்கு தோற்றுவாய் இல்லை. அதுவே தோற்றுவாயாக உள்ளது. இயற்கை என்பது இயல்பாக உள்ளது, இருப்பது என்று பொருள்படும். ஆகையால் பிரகிருதி இல்லாமல் இருந்து திடீரென தோன்றவில்லை. அது ஏற்கனவே இருக்கிறது. ஒரு பிரளயத்தின் போது ஒடுங்கியிருந்து மீண்டும் வெளிப்படுகிறது. இவ்வாறான மூலப்பிரகிருதி எனப்படும் இருப்பே உலகின் தோற்றத்திற்கு காரணம் எனச்சாங்கிய தத்துவம் கூறுவதால் இதனை தத்துவாதிகள் சத்காரியவாதம் என்று அழைப்பர்.

உலகின் தோற்றமும் மற்றும் ஒடுக்கமும் மாறி மாறி நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. ஒடுங்கியிருக்கும் பேரியற்கை மூலப்பிரகிருதி அல்லது பிரதானம் எனப்படுகிறது. அது வெளிப்படுகையில், பிரகிருதி அதாவது பிரசவிக்கை நிலையைப் பெறுகிறது. சுயம்பு அல்லது தான்தோன்றியாக உள்ள இந்தப் பிரகிருதி தான் தோற்றுவாயாக இருந்து மஹத் உள்ளிற்றவைத் தோற்றுவிக்கிறது.

முக்குணங்கள்[தொகு]

இந்த பிரகிருதியானது சத்துவம், ரஜஸ் மற்றும் தமஸ் எனும் முக்குணங்களின் கூட்டாகும். புருஷன் (பிரம்மம் அல்லது ஆன்மா) எனப்படும் பிரக்ஹையின் (அறிவு) சேர்க்கையால் இந்தப் பிரகிருதி சலனமடைந்து, அதன் ஆற்றல் உலகமாக உருவெடுக்கிறது. இதுவே படைப்பாகும். பிரகிருதி என்பது புருஷனின் அனுபவத்திற்கான ஒரு களமாக உள்ளது. அதேநேரத்தில் அனுபவத்திற்காக பிரகிருதியுடன் இணையும் புருஷன் (ஆன்மா), பின்னர் அந்தப் பிரகிருதியுடன் துணை கொண்டே முக்தி (விடுதலை) பெறுகிறது.

சாங்கிய தத்துவத்தில் பிரகிருதி, புருஷ வாதம் என்றும்; பிரகிருதி பரிணாம வாதம் என்றும் அழைக்கப்படுகிறது. புருஷன் எனப்படும் அறிவோனையும், அதனால் அறிந்து கொள்ளப்படுகிற பேரியற்கையான பிரகிருதியையும் பற்றிக் கூறப்படுகின்ற கோட்பாடு என்பதால் பிரகிருதி புருஷ வாதம் என்று பெயர். பிரகிருதியிலிருந்து மஹத் உள்ளிட்ட 25 விஷயங்கள் பரிமாணம் அடைவதை, அதாவது மாற்றமடைந்து வெளிப்படுவதைக் கூறுவதால் பிரகிருகிதி பரிணாம வாதம் என்று இதற்கு பெயர். பரிணாமம் என்றால் முந்தைய நிலையிலிலிருந்து படிப்படையாக அடைகின்ற முன்னேற்றம் அல்லது வளர்ச்சி நிலை என்று பொருள். டார்வின் கூறும் பரிமாண வளர்ச்சி அல்ல; இது பேரண்டப் பரிமாணத்தைக் குறிக்கிறது.

சாங்கியத்தின் 25 தன்மாத்திரைகள்[தொகு]

சாங்கிய தத்துவத்தின் 25 தன்மாத்திரைகள்

சாங்கியம் கூறும் 25 தன்மாத்திரைகளில் புருடன் (அறிவுள்ள வஸ்து), பிரகிருதி (இயற்கை), மஹத், முக்குணங்கள் (3), பஞ்சபூதங்கள் (5), ஞானேந்திரியங்கள் (5), கர்மேந்திரியங்கள் (5), இவற்றுடன் மனம், புத்தி, சித்தம், அகங்காரம் ஆகிய 25 அடங்கும்.

இந்து சமயத்தில் பிரகிருதி தத்துவம்[தொகு]

இந்து சமயத்தில் பிரகிருதியை மாயையுடன் ஒப்பிடப்படுகிறது.[4] இந்து சமயத்தில் புருஷ தத்துவத்தை அறிவுப் பொருளான பிரம்மத்துடனும், பிரகிருதியை பிரபஞ்சம் போன்ற இயற்கைப் பொருட்களுடன் ஒப்பிடப்படுகிறது. பகவத் கீதையின் அத்தியாயம் 14ல் பிரகிருதியின் (ஜட இயற்கை) முக்குணங்கள் குறித்து கிருஷ்ணர், அருச்சுனனுக்கு விரிவாக உபதேசித்துள்ளார்.[5]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரகிருதி&oldid=3761072" இருந்து மீள்விக்கப்பட்டது