சத்துவ குணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சாத்விக குணம் அல்லது சத்வம் (சமசுகிருதம் sattva / सत्त्व "purity") முக்குணங்களில் முதன்மையான சத்துவ குணத்திலிருந்து தோன்றும் இயல்புகள்; நற்காரியங்களில் மனதைச் செலுத்தும் குணம், மன அடக்கம் (சமம்), புலன் அடக்கம் (தமம்), துன்பங்களைப் பொறுத்துக் கொள்ளும் இயல்பு (சகிப்புத் தன்மை), விவேகம், வைராக்கியம், தவம், வாய்மை, கருணை, அகிம்சை, மகிழ்ச்சி, நம்பிக்கை, பாவம் செய்வதில் கூச்சப்படுதல் (லஜ்ஜை), மனத்திருப்தி, மனத்தூய்மை, தன்னிலேயே மகிழ்ந்திருத்தல் (ஆத்மரதி), பணிவு மற்றும் எளிமைத் தன்மை ஆகும்.[1]

மற்ற இரண்டு குணங்கள் தாமச குணம் மற்றும் இராட்சத குணம் ஆகும்.

சத்துவ குண பலன்கள்[தொகு]

தர்மச்செயல்கள்; தன் செயல்களை பகவானுக்கு அர்ப்பணம் செய்து விடுவது; பலனில் ஆசையில்லாமல் செயல்கள் செய்வது சத்துவ குணத்தின் பலன்கள் ஆகும். சத்துவ குணமுடையோன் தெய்வத்தன்மையும், பற்றற்ற நிலையும்; விழிப்பு நிலையும் மற்றும் இறப்பிற்குப் பின் மேலுலகங்களையும் அடைகிறான்.

மேற்கோள்கள்[தொகு]

  1. http://www.hinduism.co.za/sattwa,.htm
"https://ta.wikipedia.org/w/index.php?title=சத்துவ_குணம்&oldid=3913671" இலிருந்து மீள்விக்கப்பட்டது