தாமச குணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தமோ குணம் அல்லது தமஸ் (Tamas) (சமசுகிருதம்: तमस् "darkness") சாங்கியர்களின் கருத்துப்படி, ஒரு மனிதனிடம் அமைந்துள்ள குணங்களான காமம், வெகுளி, மயக்கம், கலக்கம், கோபம், பேராசை, பொய் பேசுதல், இம்சை செய்தல், இரத்தல், சிரமம், கலகம், வருத்தம், மோகம், கவலை, தாழ்மை உணர்வு, உறக்கம், அச்சம், சோம்பல், காரணமில்லாமல் பிறரிடம் பொருட்களை எதிர்பார்த்தல் மற்றும் பிறர்க்குக் கேடு விளைவிக்கும் செயல்கள் செய்தல், பகட்டுக்காகச் செய்யப்படும் செயல்கள் ஆகியவற்றைக் குறிக்கும். பிற இரண்டு குணங்கள் சத்துவ குணம் மற்றும் இராட்சத குணம் ஆகும்.[1]

தாமச குண பலன்கள்[தொகு]

தமோ குணத்திலிருந்து, சோம்பல் உண்டாகிறது. தமோ குணப்பெருக்கினால் இராட்சசத் தன்மையும், மோகமும் அதிகரிக்கின்றது. தமோ குணத்தினால் உறக்கநிலையும் உண்டாகிறது. தமோ குணத்தால் மறுபிறவியில் விலங்கு, மரம், செடி, கொடி போன்ற தாழ்வான நிலை பிறப்பு உண்டாகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. http://www.hinduism.co.za/sattwa,.htm
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாமச_குணம்&oldid=3296105" இருந்து மீள்விக்கப்பட்டது