உள்ளடக்கத்துக்குச் செல்

மந்தன மிஸ்ரர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மந்தன மிஸ்ரர்
பிறப்புஏழாம் நூற்றாண்டு
மிதிலை
இயற்பெயர்பிகார்
தத்துவம்மீமாஞ்சம்
இந்திய மெய்யிலாளர்

மந்தன மிஸ்ரர், (Maṇḍana Miśra), இந்தியாவின் பிகார் மாநிலத்தில், மிதிலை எனும் மகிஷ்மதி நகரத்தில் கி. பி. ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். இந்து மெய்யியல் அறிஞர். பூர்வ மீமாம்சை தத்துவ அறிஞரான குமரிலபட்டரின் சீடராக இருந்தவர். பூர்வ மீமாஞ்சம் மற்றும் அத்வைத சித்தாந்தங்களுக்கு விரிவான விளக்க உரை எழுதியவர். ஆதிசங்கரர் காலத்தில் வாழ்ந்தவர். ஆதிசங்கரின் சீடராக மாறிய மந்தன மிஸ்ரர், தன் பெயரை சுரேஷ்வரர்என மாற்றிக் கொண்டு அத்வைத சந்நியாச நெறியில் வாழ்ந்து, அத்வைத பிரம்ம சித்தி எனும் நூலை இயற்றிவர். அத்வைத சித்தாந்ததைப் பரப்ப தென்னிந்தியாவில், சிருங்கேரி சாரதா பீடத்தை நிறுவி அதன் முதல் பீடாதிபதியாக விளங்கியவர்.

படைப்புகள்

[தொகு]
  • பிரகதாரண்யக உபநிடத விளக்க உரை (ஆதிசங்கரரின் பிரகதாரண்யக உபநிட பாஷ்யத்திற்கு விரிவான விளக்க உரை நூல்)
  • நைய்ஷ்கர்மியசித்தி (Naiṣkarmya-siddhi )
  • சம்பந்த வார்த்திகம் (ஆதிசங்கரரின் பிரகதாரண்யக உபநிடத பாஷ்ய அறிமுகத்திற்கு விளக்க உரை நூல்)
  • தைத்திரிய வார்த்திகம் (சங்கரரின் தைத்திரிய உபநிடத பாஷ்யத்திற்கு விரிவான விளக்க உரை நூல்)
  • மனசொல்லசா (Manasollasa) (சங்கரரின் தட்சிணாமூர்த்தி தோத்திர பாஷ்யத்திற்கு விளக்க உரை நூல்)
  • பஞ்சீகரணம் வார்திகம் (சங்கர்ரின் பஞ்சீகரண நூலுக்கு விளக்க உரை நூல்)

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]

ஆதார நூற்பட்டியல்

[தொகு]
Printed sources
  • John Grimes, "Sureśvara" (in Robert L. Arrington [ed.]. A Companion to the Philosophers. Oxford: Blackwell, 2001. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-631-22967-1)
  • King, Richard (2002), Orientalism and Religion: Post-Colonial Theory, India and "The Mystic East", Routledge
  • Kuppuswami Sastri, S. (1984), Brahmasiddhi, by Maṇḍanamiśra, with commentary by Śankhapāṇī. 2nd ed., Delhi, India: Sri Satguru Publications
  • Sarvepalli Radhakrishnan, et al. [edd], History of Philosophy Eastern and Western: Volume One (George Allen & Unwin, 1952)
  • Roodurmum, Pulasth Soobah (2002), Bhāmatī and Vivaraṇa Schools of Advaita Vedānta: A Critical Approach, Delhi: Motilal Banarsidass Publishers Private Limited
  • Vidyaranya, Madhava (1996), Sankara Digvijaya: The Traditional Life of Sri Sankaracharya: Translated by Swami Tapasyananda, Chennai: Sri Ramakrishna Math
Web-sources

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மந்தன_மிஸ்ரர்&oldid=4055175" இலிருந்து மீள்விக்கப்பட்டது