உள்ளடக்கத்துக்குச் செல்

அஸ்வகோசர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அஸ்வகோசர்
மகாயான பௌத்தத்தை வளர்த்த அஸ்வகோசர்
மகாயான பௌத்தத்தை வளர்த்த அஸ்வகோசர்
தொழில்கவிஞர், நாடக ஆசிரியர், தத்துவ ஆசிரியர்
மொழிசமசுகிருதம்
காலம்ஏறத்தாழ கிபி முதல் நூற்றான்டு
வகைசமஸ்கிருத நாடகம், காவியங்கள்
கருப்பொருள்சர்வாஸ்திவாதம் அல்லது மகா சங்க பௌத்தம்
குறிப்பிடத்தக்க படைப்புகள்புத்தசரிதம், சௌந்தரானந்தா, சூத்திர அலங்காரம்

அஸ்வகோசர் (Aśvaghoṣa) (தேவநாகரி: अश्वघोष) (கி பி 80 – 150)வட இந்தியாவின் சாகேதம் எனும் ஊரில், அந்தண குலத்தில் பிறந்த இந்தியத் தத்துவவாதியும், சமசுகிருத கவிஞரும், தருக்கவாதியும் ஆவார்.[1] இந்துவாகப் பிறந்து பின்னர் பௌத்த பிக்குவாக மாறியவர். குசானப் பேரரசர் கனிஷ்கரின் அரசவையில் அஷ்வகோசர் பௌத்த ஆன்மீகத் தலைவராக இருந்தவர்.[2]அஸ்வகோசர் மகாயான பௌத்தத்தை வளர்த்தவர்.

காளிதாசருக்கு முன்னர் சமசுகிருத மொழியின் முதல் நாடக ஆசிரியரும், மகா கவி எனப் போற்றப்படுபவர் அஷ்வகோசர் ஆகும். பௌத்த எழுத்தாளரான அஸ்வகோசரின் இலக்கியப் படைப்புகள் புத்தசரிதம், சௌந்தரானந்தா மற்றும் சூத்திர அலங்காரம் ஆகும்.[3] அஸ்வகோசர் காலத்திற்கு முன்னர் கலப்பட சமசுகிருத மொழியில் இருந்த பௌத்த இலக்கியங்களை, பௌத்த சமயத்திற்கு மாறிய அஸ்வகோசர், செம்மைப்படுத்தப்பட்ட சமசுகிருத மொழியில் மொழிபெயர்த்து எழுதினார்.[4]

பெயர்க்காரணம்

[தொகு]

அஸ்வம் + கோஷம் = அஸ்வகோஷர் எனும் சமசுகிருத மொழிச் சொல்லிற்கு குதிரையின் சப்தம் என்று பொருளாகும்.

துறவு வாழ்க்கை

[தொகு]

அஸ்வகோச சரித்தரம் எனும் நூலில் கூறியவாறு,[5][6], சமணர்களையும், பௌத்தர்களையும் தருக்கத்தில் வென்று விரட்டிய அஸ்வகோசருக்கு, பார்ஸ்வா எனும் பௌத்த ஞானி அஸ்வகோசருக்கு பௌத்த தத்துவங்களை உபதேசித்தார். பின்னர் பௌத்த சமயத்திற்கு மாறிய அஸ்வகோசர் வட இந்தியா முழுவதும் சுற்றிச் வந்து மகாயான பௌத்ததை வட இந்தியாவில் பரப்பியவர். .

படைப்புகள்

[தொகு]
  • அஸ்வகோசரின் படைப்புகளில் மிகவும் சிறந்த புத்தசரிதம் எனும் நூல், சமசுகிருத மொழியில் எழுதப்பட்ட காவியக் கவிதைத் தொகுப்பாகும்.[7][8]
  • இவரது மற்றொரு படைப்பான சௌந்தரானாந்தா எனும் காவியக் கவிதை நூல், புத்தரின் ஒன்று விட்ட சகோதரனான நந்தன் என்பவன் பௌத்த பிக்குவாக மாறி விடுதலை அடைந்த வரலாற்றை விளக்குகிறது.[9][10]
  • மகா அலங்காரம் (Mahalankara) எனும் நூலின் ஆசிரியராக அஸ்வகோசர் கருதப்படுகிறார்.

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Olivelle, Patrick; Olivelle, Suman, eds. (2005). Manu's Code of Law. Oxford University Press. p. 24. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-517146-4.
  2. Ashvaghosha
  3. Randall Collins, The Sociology of Philosophies: A Global Theory of Intellectual Change. Harvard University Press, 2000, page 220.
  4. Coulson, Michael (1992). Sanskrit. Lincolnwood: NTC Pub. Group. p. xviii. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8442-3825-8.
  5. Li Rongxi (2002). The Life of Asvaghosa Bodhisattva; in: The Lives of Great Monks and Nuns, Berkeley CA: Numata Center for Translation and Research, pp. 9–16
  6. Stuart H. Young (trans.), Biography of the Bodhisattva Aśvaghoṣa, Maming pusa zhuan 馬鳴菩薩傳, T.50.2046.183a, translated by Tripiṭaka Master Kumārajīva.
  7. E. B. Cowell (trans): Buddhist Mahâyâna Texts, "The Buddha-karita of Asvaghosha", Sacred Books of the East, Clarendon Press, Oxford 1894. Available online
  8. Willemen, Charles, transl. (2009), Buddhacarita: In Praise of Buddha's Acts, Berkeley, Numata Center for Buddhist Translation and Research. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1886439-42-9
  9. Yoshichika Honda. 'Indian Buddhism and the kāvya literature: Asvaghosa's Saundaranandakavya.' Hiroshima Daigaku Daigakuin Bungaku Kenkyuuka ronshuu, vol. 64, pp. 17–26, 2004. [1] (Japanese)
  10. Johnston, E. H. (1928). Saundarananda (PDF). Lahore: University of Panjab.

ஆதார நூற்பட்டியல்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அஸ்வகோசர்&oldid=4058720" இலிருந்து மீள்விக்கப்பட்டது