திக் நியாட் ஹன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திக் நியாட் ஹன்
பாரீசில் நியாட் ஹன் (2006)
மற்ற பெயர்கள்Thầy (ஆசான்)
பட்டம்Thiền Sư
(Zen master)
சமயம்Thiền பௌத்தம்

திக் நியாட் ஹன் (பி. 11 அக்டோபர் 1926 - இ. 22 சனவரி 2022[1]) ஜென் ஆசான்களுள் குறிப்பிடத்தக்கவர். இவர் உலக அமைதிக்காகவும் மனித உரிமைகளுக்காகவும் போராடியவர் ஆவார்; குறிப்பாக, வியட்நாம் போருக்கு எதிராகக் குரல் கொடுத்தார். சமூக ஈடுபாடுள்ள பவுத்தம் என்ற புத்தமதப் பிரிவு உருவாகக் காரணமாக இருந்தவர்களுள் ஒருவர்[2]. அவரது மாணவர்களால், தே (ஆசான் என்று பொருள்) என்று அழைக்கப்பட்ட ஹன், விழிப்புணர்வு இயக்கத்தின் தந்தை என்றும் குறிப்பிடப்படுகின்றார்[3].

பிறப்பு[தொகு]

1926 ஆம் ஆண்டு மத்திய வியட்நாமில் பிறந்த நியாட் ஹன் பதினாறாவது வயதில் துறவு மேற்கொண்டார்.

சமூக நலப்பணிகளுக்கான இளைஞர் பள்ளி[தொகு]

1960- ஆம் ஆண்டில் சைகானில் சமூக நலப்பணிகளுக்கான இளைஞர் பள்ளியைத் (School of Youth for Social Services (SYSS)) தொடங்கினார்.

இப்பள்ளியின் பணிகள்[தொகு]

  • குண்டுத் தாக்குதலுக்குள்ளான கிராமங்களைச் சீரமைத்தல்
  • பள்ளிகள் தொடங்கல்
  • மருத்துவமனைகள் தொடங்கல்
  • வியட்நாம் போரில் வீடிழந்த குடும்பங்களை மீள் குடியமர்த்துதல்.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=திக்_நியாட்_ஹன்&oldid=3379672" இருந்து மீள்விக்கப்பட்டது