மகாகாசியபர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மகாகாசியபர்
சுய தரவுகள்
Occupationபிக்கு
பதவிகள்
Teacherகௌதம புத்தர்


சீன மரபிலான மகாகாசியபரின் மர அச்சில் ஆன சிற்பம்
மகாகாசியபர் தங்கியிருந்த ராஜகிரக நகரத்தின் பிப்பாலி குகை

மகாகாசியபர் (Mahākāśyapa) (சமசுகிருதம்; பாலி: Mahākassapa; ஜப்பான்: 摩訶迦葉 Maha Kasho or Makakasho or Kāśyapa) புத்தரின் பத்து முதன்மை சீடர்களில் ஒருவர். இவரே புத்த சங்கத்தின் பிக்குகளின் முதல் பேரவையை கூட்டியவர். வட இந்தியாவின் மகத நாட்டைச் சேர்ந்தவர்.

தொன்ம வரலாறு[தொகு]

வேதிய சமூகத்தைச் சார்ந்த துறவியான மகாகாசியபர், புத்தர் ஞானம் பெற்றவுடன், புத்தரின் முதல் சீடராகி சாரநாத்தில் மக்கள் முன்னிலையில் புத்தர் ஆற்றிய முதல் சொற்பொழிவில் கலந்து கொண்டவர். இவரும் புத்தரின் வேறு முதன்மை சீடரான ஆனந்தருடன் அறியப்படுபவர்.

தாமரை சூத்திரம்[தொகு]

தாமரை சூத்திரம் (Lotus Sutra) அத்தியாயம் ஆறில் மகாகாசியபர், மௌத்கல்யாயனர், காத்தியாயனர் போன்ற புத்தரின் முதன்மைச் சீடர்கள் ஞானம் பெற்ற நிகழ்வு கூறப்படுகிறது.

ஜென் புத்த சமயப் பிரிவு[தொகு]

போதி தருமன் துவக்கியதாக கருதப்படும் ஜென் பௌத்த மரபு[1] கௌதம புத்தரிடமிருந்து முதலில் ஞானத்தை பெற்றவர் மகாகாசியபர் கூறுகிறது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. Suzuki, Daisetz (1961). Essays in Zen Buddhism. Grove Press. பக். 60. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0802151183. https://archive.org/details/essaysinzenbuddh0000suzu_h1c7. 
  2. "Dharma Transmission". Sweeping Zen. Archived from the original on செப்டம்பர் 29, 2013. பார்க்கப்பட்ட நாள் June 7, 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)

வெளி இணப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மகாகாசியபர்&oldid=3580710" இலிருந்து மீள்விக்கப்பட்டது