அதிசர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அதிசர்
Atisha.jpg
கையில் ஏட்டுச் சுவடியுடன் அதிசரின் ஓவியம் [1]
தாய்மொழியில் பெயர் অতীশ দীপংকর শ্রীজ্ঞান
அதிசா தீபம்கர சிறீஞானம்
பிறப்பு 980
விக்கிரம்பூர், பாலப் பேரரசு
(முன்சிகஞ்ச், வங்காளதேசம்)
இறப்பு 1054
நயாதாங், திபெத்
பணி பௌத்த குரு
அறியப்படுவது திபெத்தில் சர்மா பௌத்த குருகுல மரபை தோற்றுவித்தவர்
அதிசரின் சுவர் ஓவியம், ராலுங் மடாலயம், திபெத், 1993

அதிசர் (கிபி 982 - 1054) இந்தியாவின் வங்காள பௌத்த சமய பிக்கு ஆவார்.[2] வங்காள பாலப் பேரரசில் (தற்கால வங்காளதேசம், முன்சிகஞ்ச் மாவட்டம்) விக்கிரம்பூரில் பிறந்தவர். பிக்குவாக துறவறம் ஏற்று, நாலந்தா பல்கலைக்கழகத்தில் பௌத்த சாத்திரங்களை பயின்றவர். [3] [4]

அதிசர் கிபி 11ம் நூற்றாண்டில் மகாயானம் மற்றும் வஜ்ஜிராயன பௌத்த தத்துவங்களை திபெத் முதல் சுமத்திரா வரையிலான அசிய நாடுகளில் பரப்புவதில் முன்னிலை வகித்தவர். திபெத்தில் சர்மா பௌத்த குருகுல மரபை தோற்றுவித்தவர்.[5] [6]

கிபி 1013ல் சிறீவிஜயம் எனப்படும் தற்கால மலேசியா மற்றும் இந்தோனேசியா பகுதிகளில் 12 ஆண்டுகள் தங்கி, பௌத்த சமயத்தை அப்பகுதிகளில் பரப்பியவர். நவீன பௌத்த சமயத்தின் புகழ் பெற்றவராக கருதப்படும் அசிதரின் மாணவரான திரோம்டன் என்பவர் திபெத்தில் கதம் பௌத்த தத்துவத்தை நிறுவியவர் ஆவார். [7]

நாகார்ச்சுனர், சந்திரகீர்த்தி அசங்கர் மற்றும் வசுபந்து போன்ற பௌத்த அறிஞர்கள் வழியில் வந்தவர் அதிசர். [8] அதிசரின் குருமார்களில் முக்கியமாகக் கருதப்படுபவர் தர்மகீர்த்திசிறீ ஆவார்.[9]

படைப்புகள்[தொகு]

 • போதிபாதபிரதீபம்
 • போதிபாத பிரதீபகஞ்ஜிகா நாமா
 • சர்யாசம்கிரகபிரதீபம்
 • சத்தியத்வ அவதாரம்:
 • போதிசத்துவமன்யாவளி
 • மத்தியாமக ரத்தினாபிரதீபம்
 • மகாயானபாத சாதனா சங்கிரகம்
 • சிக்ஷா சமுச்சய அபிசமயம்
 • பிரக்ஞான பரமிதாபிந்தார்த்த பிரதீபம்
 • ஏகவீரசாதனா
 • விமலரத்தின லேகா

மேற்கோள்கள்[தொகு]

 1. "Portrait of Atiśa [Tibet (a Kadampa monastery) (1993.479)]". Timeline of Art History. New York: The Metropolitan Museum of Art, 2000– (October 2006). பார்த்த நாள் 2008-01-11.
 2. "Reincarnation". The Dalai Lama. பார்த்த நாள் 20 May 2015.
 3. Atiśa Dīpaṃkara
 4. [1]
 5. Atiśa Dīpaṃkara
 6. [2]
 7. POV. "Tibetan Buddhism from A to Z - My Reincarnation - POV - PBS".
 8. Great Kagyu Masters: The Golden Lineage Treasury by Khenpo Konchog Gyaltsen, Snow Lion Publications, pages 154-186
 9. Buswell 2014, பக். 247.

ஆதார நூல்கள்[தொகு]

 • Robert Buswell Jr. (2014). Princeton Dictionary of Buddhism. Princeton, NJ: Princeton University Press. ISBN 9780691157863. 
 • Khenpo Konchog Gyaltsen, Great Kagyu Masters: The Golden Lineage Treasury, Snow Lion Publications
 • Geshe Sonam Rinchen, Atiśa's Lamp for the Path to Enlightenment, Snow Lion Publications
 • Dilgo Khyentse (1993). 'Enlightened Courage. Ithaca, New York: Snow Lion Publications. ISBN 1-55939-023-9. 
 • Tulku, Ringu; Helm, Ann (2006). The Ri-Me Philosophy of Jamgon Kongtrul the Great: A Study of the Buddhist Lineages of Tibet. Boston: Shambhala Publications. ISBN 1-59030-286-9. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அதிசர்&oldid=2656707" இருந்து மீள்விக்கப்பட்டது