உள்ளடக்கத்துக்குச் செல்

பாசியான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாசியான்
Fǎxiǎn
சுய தரவுகள்
பிறப்பு337
வுயாங், சீனா
இறப்புகிபி 422
சமயம்பௌத்தம்
குறிப்பிடத்தக்க ஆக்கம்ஃபோகோஜி அல்லது பௌத்த நாடுகளின் விபரங்கள்.

பா சியான் அல்லது பாஹியான் (Fa Xian, Fa-Hien அல்லது Fa-hsien, கிபி 337 – கி. 422) என்பவர் சீனாவைச் சேர்ந்த பௌத்தத் துறவி. இவர் கிபி 399 - 412 காலப்பகுதியில் பௌத்த நூல்களைத் தேடி நேபாளம், இந்தியா, மற்றும் இலங்கைக்கு இந்தியப் பெருங்கடல் வழியாகப் பயணம் மேற்கொண்டமைக்காக அறியப்படுகிறார். புத்தரின் பிறப்பிடமான லும்பினிக்கு சென்றமைக்காகவும் இவர் அறியப்படுகிறார்.

இரண்டு ஆண்டுகள் இலங்கையில் சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு சீனா திரும்பும் வழியில் பெரும் சூறாவளியில் சிக்கி தீவு ஒன்றில் ஜாவா எனக் கருதப்படுகிறது) கரையொதுங்கினார். பின்னர் சீனாவின் லாவோஷாங் நகரில் தங்கி தான் சேகரித்து வந்த பல பௌத்த நூல்களை மொழிபெயர்த்தார்.

தனது பயணத்தைப் பற்றி அவர் எழுதிய நூலில் ஆரம்பகால பௌத்தம், மற்றும் ஐந்தாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் பட்டுப் பாதை வழியே காணப்பட்ட பல நாடுகளின் புவியியல், வரலாறு ஆகியவற்றை எழுதினார்.

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாசியான்&oldid=3360230" இலிருந்து மீள்விக்கப்பட்டது