இந்திய மெய்யியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(இந்தியத் தத்துவம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இந்தியத் தத்துவ மரபுகள்
சமண சமயத்தை பரப்பிய தீர்த்தங்கரர்களான பார்சுவநாதர் (கிமு 872 – 772) மற்றும் மகாவீரர்(கிமு 549–477).
பௌத்தம்

இந்தியாவின் நீண்ட கால வரலாற்றில், அது பல்வேறுபட்ட தத்துவஞான மரபுகளுக்கு நிலைக்களனாகத் திகழ்ந்துள்ளது. இந்திய தத்துவஞானம் அதன் வேறுபட்ட பிரிவுகள், வேதம் தொடர்பாகக் கொண்டுள்ள நிலைப்பாடுகளின் அடிப்படையில் இரண்டு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்படலாம். அவை,

 1. வேதத்தை ஏற்கும் பிரிவுகள்
 2. வேத மறுப்புப் பிரிவுகள்[1][2][3]

என்பனவாகும். முதல் வகைப்பிரிவுகள் ஆத்திகப் பிரிவுகள் என்றும், மற்றவை நாத்திகப் பிரிவுகள் என்றும் அழைக்கப்படுவதுண்டு. வேதத்தை ஏற்கும் தத்துவப் பிரிவுகளில் ஆறு வகையான பிரிவுகள் முக்கியமானவை இவை,

வேதத்தை ஏற்கும் பிரிவுகள்[தொகு]

 1. நியாயம்,
 2. வைசேடிகம்
 3. சாங்கியம்
 4. யோகம்
 5. மீமாம்சை
 6. வேதாந்தம்
 7. சைவ சித்தாந்தம்

பிரம்ம சூத்திரத்தை அடிப்படையாக கொண்ட பிரிவுகள்[தொகு]

பிரம்ம சூத்திரத்துக்கு எழுதப்பட்ட வெவ்வேறு விரிவுரைகளை அடிப்படையாகக் கொண்டவை:

 1. அத்வைதம்
 2. விசிட்டாத்துவைதம்
 3. துவைதம்

வேத மறுப்பு பிரிவுகள்[தொகு]

வேதத்தை மற்றும் இறைவனை ஏற்காத பிரிவுகள்

 1. சர்வாகம்
 2. சமணம்
 3. பௌத்தம்
 4. ஆசீவகம்

என்பன வேதங்களை மறுக்கும் தத்துவங்களாகும்.

பௌத்தப் பிரிவுகள்[தொகு]

பௌத்தம் நான்கு உட்பிரிவுகளைக் கொண்டது.

வைபாசிகம்[தொகு]

உலகமாகிய பொருள், உலகின் இருப்பைப் பற்றிய அறிவு இரண்டும் உண்மை. இதில் உலகின் இருப்பைப் பற்றிய அறிவை நாம் நேரடியாக (பிரத்யட்சம்) அறிகிறோம்.

சௌத்திராந்திகம்[தொகு]

உலகமாகிய பொருள், உலகின் இருப்பைப் பற்றிய அறிவு இரண்டும் உண்மை. இதில் உலகின் இருப்பைப் பற்றிய அறிவை நாம் ஊகித்து (அனுமானம்) அறியலாம்.

யோகாசாரம்[தொகு]

உலகமாகிய பொருள் உண்மையில் கிடையாது. ஆனால் உலகின் இருப்பைப் பற்றிய அறிவு உண்மை.

மாத்திமியகம்[தொகு]

உலகமாகிய பொருள், உலகின் இருப்பைப் பற்றிய அறிவு இரண்டும் பொய்.

இவற்றையும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்திய_மெய்யியல்&oldid=3848591" இலிருந்து மீள்விக்கப்பட்டது