உள்ளடக்கத்துக்குச் செல்

யோகக் கலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பதஞ்சலி முனிவரும் வியாக்ரபாத முனிவரும் நடராசரை வணங்கி நிற்கும் காட்சி
பத்மாசன நிலையில் யோக தியானம் புரியும் சிவனின் சிலை.

யோகக் கலை, அல்லது யோகா (ஆங்கிலம்: yóga, சமஸ்கிருதம், பாலி: योग|योग), என்பது உடல், மனம், அறிவு, உணர்வு மற்றும் ஆன்மீக வளர்ச்சிக்கும், சமன்பாட்டிற்கும் உதவிடும் கலை ஆகும். யோகா என்னும் கலை வாழ்க்கை அறிவியல் மற்றும் வாழும் கலை ஆகும். பதஞ்சலி முனிவரால் இக்கலை இந்தியாவில் தோன்றி வளர்ந்து வழிவழியாய் வரும் ஓர் ஒழுக்க நெறியாகும். இது உடலையும் உள்ளத்தையும் நலத்துடன் வைத்துப் போற்றும் ஒழுக்கங்களைப் பற்றிய நெறி.[1]

யோகாவின் பல்வேறு மரபுகள் இந்து, புத்த மற்றும் சமண மதங்களில் காணப்படுகின்றன.[2][3][4] மேலும் யோகா வஜ்ரயான மற்றும் ​​திபெத்திய புத்த மத தத்துவங்களில் ஒரு முக்கிய பகுதியாக விளங்குகிறது.[5][6][7]

வரலாறு

[தொகு]

யோகம் என்ற சொல்லுக்கு இணைதல் அல்லது இணக்கமாக இருத்தல் என்று பொருள். யோகம் என்பது இந்தியாவில் உள்ள ஆறு தத்துவமுறைகளில் முக்கியமான ஒன்றாகும். யோகாவின் தோற்றம் விவாதத்திற்கு உட்பட்டு இருக்கின்றது. இது வேத காலத்திற்கு முன்பே தோன்றி இருக்கலாம் என்று கருதப்படுகிறது. [8]. சிந்து சமவெளி நாகரிகத்தின் தளங்களில் உள்ள சில முத்திரைகள் ஒரு பொதுவான யோகா அல்லது தியான நிலைகளை புள்ளிவிவரங்கள் காட்டி சித்தரிக்கின்றன.[9]. இந்து தத்துவத்தின் படி யோகம் என்பது சீவாத்மா, பரமாத்மாவுடன் இணைதலுக்கான வழி எனப்படுகிறது. யோகத்தின் பாதையில் செல்பவர் யோகி எனப்படுகிறார்.

சங்ககாலப் பயிற்சி

[தொகு]

நோன்பியர் எனப்படும் தவ முனிவர்கள் கைகளை ஊன்றிக்கொண்டு இருக்கையில் அமர்ந்திருந்தது பற்றி நற்றிணைப் பாடல் ஒன்று குறிப்பிடுகிறது. இதனை அது கையூண் இருக்கை என்று குறிப்பிடுகிறது [10] தினைப்புனத்தில் விளைந்திருக்கும் தினைக் கதிரைக் கிள்ளிச் சென்ற குரங்கு ஒன்று அதிலுள்ள தினைகளைக் கைகளால் ஞெமிடி வாயில் அடக்கிக்கொண்டிருந்த காட்சி நோன்பியர் கையூண் இருக்கை போல் இருந்ததாம். இதனை உயிர்ப்புப் பயிற்சி [11] எனக் கருதலாம்.[12]

யோகசூத்திரத்தின் வரலாறு

[தொகு]

பாகிஸ்தானில் உள்ள சில இடங்களில் சிந்து பள்ளத்தாக்கு நாகரிகத்தில் (சு. பொ.ஊ.மு. 3300–1700) இருந்த சில கண்டெடுக்கப்பட்ட உருவங்களின் அமர்ந்திருப்பது போன்ற நிலைகள் சாதாரண யோகா அல்லது தியான நிலைகளைக் காட்டுவது போல் உள்ளன மேலும் இது ஒரு வகையான சடங்கு முறையை, யோகாவின் ஆரம்பமாகக் காட்டுகிறது. இது க்ரெகொரி போஷ்செல் என்ற தொல் பொருள் ஆய்வாளரின் கூற்று.[13] இந்து பள்ளத்தாக்கு சின்னங்களுக்கும், பின்னாளில் வந்த யோகா மற்றும் தியானப் பயிற்சிகளுக்கும் இடையில் ஏதோ ஒரு வகை சம்பந்தம் உள்ளதை முடிவான சாட்சிகள் இல்லாவிட்டாலும் , அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.<சான்றாதாரம்>பார்க்கவும்:

  • ஜொனாத்தன் மார்க் கெனொயர் யோக நிலையில் அமர்ந்துள்ள ஒரு உருவத்தைப் பற்றி விளக்கியுள்ளார். Around the Indus in 90 Slides by Jonathan Mark Kenoyer
  • கரேல் வெர்னர் இப்படி எழுதுகிறார் ஆரியர்களுக்கு முந்தைய இந்திய கலாச்சாரத்தில் பல வகையான யோகா முறைகள் வழக்கத்தில் இருந்து வந்ததை ,தொல்பொருள் ஆய்வுக் கண்டுபிடிப்புகள் எங்களை எங்கள் கூற்றை நியாயப்படுத்துதலுக்கு அனுமதிக்கிறது. [26] பெலாரஸ்
  • ஹெயின்ரிச் ஜிம்மர் ஒரு சின்னத்தை யோகியைப்போல் அமர்ந்துள்ளது என்று வர்ணிக்கிறார்.

Zimmer, Heinrich (1972). Myths and Symbols in Indian Art and Civilization. Princeton University Press, New Ed edition. p. 168. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0691017785.

  • தாமஸ் மெக் எவில்லி எழுதுகிறார் ஆறு புதிரான சிந்து பள்ளத்தாக்குச் சின்ன உருவங்கள் எல்லாம் விதிவிலக்கில்லாமல் ஹத யோகாவில் அறியப்பட்டுள்ள முலபந்தாசனா , அல்லது ஏறக்குறைய உத்கதாசனா அல்லது பத்த கோணாசனாவை....

ஒத்த நிலையில் காணப்படுகின்றன.

McEvilley, Thomas (2002). The shape of ancient thought. Allworth Communications. pp. 219–220. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781581152036.

  • பஞ்சாப் பல்கலைகழக தொல்பொருள் ஆராய்ச்சித் துறைத் தலைவர் Dr.ஃபர்ஜந்த் மாசிஹ் , சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட "யோகிநிலையைக் குறிக்கும் விதத்தில் உள்ள உருவத்தைப் பற்றி விளக்குகிறார். Rare objects discovery points to ruins treasure
  • கவின் ஃப்லட் தன் வாதத்தில் சின்னங்களில் ஒன்றான பசுபதி சின்னத்தை /உருவத்தை பற்றிய எண்ணம் உண்டானதைப் பற்றி எழுதும்போது , அந்த வடிவம் மனித உருவமென்பது தெளிவாக இல்லை என்பதால் ஐயம் உள்ளது என்கிறார். Flood, pp. 28-29.
  • ஜியோஃப்ரெய் சாமுவேல் பசுபதி சிலையைப் பொறுத்தவரை அவர் நம்புவது, " அந்த உருவத்தை எப்படி வகைப்படுத்துவது என்று தெரியவில்லை மேலும் எங்களுக்கு அந்த ஆண் அல்லது பெண் உருவம் எதைக் குறிப்பிடுகிறது/ அடையாளம் காட்டுகிறது என்றும் தெரியவில்லை. என்பதுதான்.Samuel, Geoffrey (2008). The Origins of Yoga and Tantra. Cambridge University Press. p. 4. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780521695343.</சான்றாதாரம்>

ஷ்ரமனிக் பாரம்பரியமும், உபனிஷத பாரம்பரியமும் யோக நிலையின் உச்சத்தை தியானத்தின் மூலம் உணர வழி வகைகளை உருவாக்கியுள்ளது.[14]

புத்த மதத்துக்கு முந்தைய காலம் மற்றும் முன்னாள் பிராமணி நூல்களிலும் தியானத்தைப் பற்றிய தெளிவான சாட்சியங்கள் இல்லாவிட்டாலும் , வடிவம் முழுமை பெறாத தியான முறைகள்பிரஹ்மணிக் பாரம்பரியத்தில் இருந்து தொடங்கியதாக வாதிடுகிறார்.அது உபனிடத பிரபஞ்ச உரைகளுக்கும் மற்றும் பண்டைய புத்த நூல்களில் இரண்டு புத்த குருமார்களின் தியான லட்சியங்களுக்கும் சமாந்திரமான வலுவான அடிப்படையில் உருவானது.[15]

இவர் மிகக்குறைந்த சாத்தியக் கூறுகளைப் பற்றியும் விளக்குகிறார்.[16] உபநிடதங்களில் உள்ள பிரபஞ்ச அறிக்கைகள் தியானிக்கும்/ தியானிக்கின்ற பாரம்பரியத்தைப் பிரதிபலித்தது என வாதிட்டார். ரிக் வேத காலத்திற்கும் முன்னதாகவே , நாசதிய சுக்தாவில் தியானப் பாரம்பரியத்திற்கான சாட்சியங்கள் அடங்கியுள்ளதாக வாதிக்கிறார்.[17]

தியான நுட்பங்களை விளக்கிய பழம் பெறும் நூல்கள் பெரும்பாலும் புத்த மத நூல்களே![18] அவை தியான பயிற்சி முறைகளை விளக்கியுள்ளன.மற்றும் புத்தருக்கு முன் வந்தது , மேலும் புத்த மததிற்குள் முதல் முதலாக உருவாக்கபட்டவை பற்றியும் விளக்குகின்றன.[19] இந்து இலக்கியத்தில் , யோகா என்ற சொல் முதலில் கதா உபநிடதத்தில் வருகிறது, அங்கு அது ஐம்புலன்களை அடக்கி, மற்றும் மனதின் ஓட்டத்தை நிறுத்தி யோக நிலையை அடைவதைபற்றிக் குறிப்பிடுகிறது.[20] யோகாவின் தத்துவத்திற்கான முக்கிய நூல் ஆதாரங்கள் மத்திய கால உபநிடதங்கள், (சு. பொ.ஊ.மு. 400), பகவத் கீதை உள்ளடங்கிய மஹாபாரதம் (சு. பொ.ஊ.மு. 200) மற்றும் பதஞ்சலியின் யோக சூத்திரங்கள் (பொ.ஊ.மு. 150). -->

பதஞ்சலி யோக சூத்திரம்

[தொகு]
டெல்லியிலுள்ள பிர்லாமந்திரில் இருக்கும் ஹிந்து யோகியின் சிலை

பதஞ்சலி மகரிஷி யோகாவை திட்டமிட்டு நடைமுறைப்படுத்தியுள்ளார். முறையான யோகசாஸ்திரத்தைக் கண்டுபிடித்த பெருமை பதஞ்சலியையே சாரும் என பெரும்பாலோர் கருதுகின்றனர். இவர் வழங்கிய பதஞ்சலி யோகசூத்திரம் 185 சுருக்கமான சூத்திரங்களை கொண்டுள்ளது.[21] அஷ்டாங்க யோகா (எட்டு-அங்கங்கள் யோகா) என்ற முறைக்கு பதஞ்சலியின் எழுத்துக்கள் அடிப்படையாக இருந்தன. இந்த எட்டு-அங்க யோகா தத்துவம் 29வது சூத்திரம் 2வது புத்தகத்தின் சூத்திரம் தான் இன்று நடைமுறையில் இருந்து வரும் ஒவ்வொரு ராஜ யோகத்தின் ஆழ்ந்த குணாதிசயத்தைக் காட்டுகிறது.

யோகத்தின் எட்டு அங்கங்கள்

[தொகு]
  1. இயமம் ( 5' பின்பற்றவேண்டியவை /எடுத்துக்கொள்ளத் தக்கவை) மிதவாதம், சாராதிருத்தல், பேராசை அற்ற தன்மை ,விவேக மற்ற தன்மை மற்றும் உரிமை கொண்டாடாதிருத்தல் .
  2. நியமம் (5 கவனிக்கவேண்டியவை) புனிதம், போதுமென்ற மனம் / திருப்தி, கண்டிப்பு/ எளிமை, கற்றல் மற்றும் கடவுளிடம் சரணாகதி.
  3. ஆசனம், இதன் பொருள் அமர்தல் அல்லது உடலின் நிலை.
  4. பிராணாயாமம் (மூச்சை அடக்குதல்)ப்ராணா , மூச்சு, அயமா, அடக்குதல் அல்லது நிறுத்துதல்.மேலும் வாழ்க்கை ஓட்டத்தைக் கட்டுபடுத்துதல் எனவும் பொருள்படும்.
  5. ப்ரத்யாஹரம்(தனியாக நீக்குதல்) புற உலக பொருள்களில் இருந்து ஐம்புலன்களையும் விலக்குதல்.
  6. தாரானை( மன ஒருமைப்பாடு/மனதை ஒரு நிலைப் படுத்துதல்) ஒரே பொருளின் மீது கவனத்தை நிலைப் படுத்துதல்.
  7. தியானம்(தியானம்) தியானதிற்கு எடுத்துக்கொண்ட பொருளின் உண்மைத்தன்மையை ஆழ்ந்து சிந்தித்தல்.
  8. சமாதி (பதஞ்சலி) (விட்டு விடுதலை ஆதல்) உணர்வுகளை தியானிக்கும் பொருளுடன் இணைத்துவிடுதல்.

யோகாவும் பகவத் கீதையும்

[தொகு]

பகவத் கீதை ("இறைவனின் பாடல்") , யோகா என்ற பதத்தை விரிவாக பல் வேறு வழிகளில் பயன்படுத்துகிறது. இத்தோடு ஒரு பாகம் முழுவதும் (அத்தியாயம் 6)பாரம்பரிய யோகா பயிற்சிகளுக்காக அர்ப்பணித்துள்ளது.[22] மேலும் இதில் மூன்று முக்கிய யோகா வகைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.[23]

மதுசூதன சரஸ்வதி (பிறப்பு, சுமார் 1490) கீதையை மூன்று பிரிவுகளாகப் பிரித்து , முதல் 6 பாகங்ககள் கர்ம யோகமாகவும், நடுவில் 6 பக்தி யோகமாகவும், மற்றும் கடைசி 6 ஞானமாகவும் வகைப்படுத்தியுள்ளார்.[24] பிற வர்ணனையாளர்கள் ஒவ்வொரு பாகத்திற்கும் வேறுபட்ட யோகாவைக் குறிப்பிட்டு ஆக மொத்தம் 18 மாறுபட்ட யோகாக்களாக வர்ணித்துள்ளனர்.[25]

ஆசனம் என்றால் உடலின் நிலை அல்லது தோரணை என்று பொருள். அஷ்டாங்க யோகாசனா செய்ய நான்கு வகையான நிலைகள் உள்ளன.

யோகா வேறுபாடுகள்

[தொகு]

ஹத யோகா

[தொகு]

15 ஆம் நூற்றாண்டு இந்தியாவில் வாழ்ந்த யோகி ஸ்வாத்மராமா, தன் ஹத யோக பிரதிபிகா தொகுப்பில், ஹத யோகா என்ற குறிப்பிட்ட வகை யோகாவைப் பற்றி விளக்கியுள்ளார். பதஞ்சலியின் ராஜ யோகத்தில் இருந்து, ஹத யோகா கருத்தில் மாறுபட்டுள்ளது, அது சத்கர்மாவை குறியாகக் கொண்டு, உடல் சுத்தம் மனத் தூய்மைக்கு (ஹா) மற்றும் ப்ராண அல்லது இன்றியமையாத சக்தி (தா) பெற வழி நடத்திச் செல்லும் என்கிறது.[26][27] மேலும் பதஞ்சலியின் ராஜ யோக முறையில், அமர்ந்து செய்யும் ஆசனத்தோடு அல்லது உட்கார்ந்து செய்யும் தியான நிலையை ஒப்பிடுகையில்,[28] இது இன்று பிரபலமாக வழக்கத்தில் இருக்கும் முழு உடல் நிலைகளின் ஆசனங்களின் வளர்ச்சியைக் குறிக்கிறது.[29] ஹத யோகா தன் நவீன மாற்றங்களைக் கொண்ட நடையில் பல வகைகளைத் தான் மக்கள் இன்று யோகா என்ற பதத்தோடு சம்பந்தப்படுத்துகிறார்கள்.[30]

தந்திரம்

[தொகு]

தனோதி, த்ராயதி என்ற இரண்டு சொற்களின் சேர்கையில் ஒருவான சொல் "தந்திரம்". தனோதி என்றால் விரிவடைதல் என்றும், த்ராயதி என்றால் விடுவிக்கப்படுதல் என்றும் பொருள். அதாவது, உணர்வு எல்லைகளை விரிவடையச் செய்து சக்தியினை விடுவிக்கத் தேவையான அறிவியலாம்.

உடலில் உயிர் இருக்கும்போதே "இகமதில் சுகம்" பெற தலைகளில் இருந்து விடுபட்டு இருப்பதற்கான உக்தியாம். நமது சரீரம் மற்றும் மனம் இரண்டிற்கும் சில வரம்புகள் அல்லது எல்லைகள் இருக்கின்றன. இவற்றைப் பற்றி புரிந்து கொள்வதே இந்த அறிவியலின் முதற் படியாகும். அதற்கு அடுத்ததாக உணர்ச்சி கோர்வை மண்டலத்தை விரிவடையச் செய்து, சக்தியினை தலைகளில் இருந்து விடுவிக்கத் தோதுவான உக்திகளைச் சொல்கிறது. இறுதியில் மனிதப் பிறவியின் எல்லைகளையும் வரம்புகளையும் தலைகளையும் கடந்தாற்பின், எல்லாமுமான பரம்பொருளோடு இரண்டற இணையும் அனுபவத்தினைத் தந்திடும் என்ற உறுதியினையும் தருகிறது. உடல் மற்றும் மனம் இவற்றின் உபாதைகளைக் களைந்து அவற்றை பேரின்ப பெருங்களிப்பிற்கு தயார் செய்திடும் முறைகளாக யோக சாஸ்திரங்கள் உரைக்கும் ஆசனம், பிரணாயாமம், முத்திரைகள் மற்றும் பந்தங்கள் ஆகிய பயிற்சிகள் இதிலிருந்து இருந்து உற்பத்தியானவைதான்.

தாந்த்ரியம் என்பது ஒரு நடைமுறை இது, இதனைப் பயிற்சி செய்பவர்களின் சாதாரண சமூக, மத/ சமய, மற்றும் பிரதட்சியமான நிஜ வாழ்க்கையில் உள்ள தொடர்பை / உறவு முறையை மாற்றுவதாகக் கருதப்படுகிறது. இந்த தாந்த்ரீகபயிற்சியால் ஒரு தனி நபர் இந்த நிஜ உலகம் ஒரு மாயை, ஒரு தோற்றம் என்ற கருத்தை அடைந்து மற்றும் தனிமனிதன் அதில் இருந்து முக்தியும் அடைகிறான்.[31] முக்தி அடைவதற்கான இந்த குறிப்பிட்ட பாதை இந்து சமயத்தில் அளிக்கப்பட்டுள்ள பல வகைகளில் தாந்த்ரீகத்தோடு தொடர்புடைய மற்ற இந்து சமயங்களின் பிற முறைகளான யோகா, தியானம் மற்றும் சமூக பரிச்சியம் அதாவது தற்காலிக அல்லது நிரந்தரமான ,சமூக உறவுகள் மற்றும் வாழ்வியலில் இருந்து விடுதலை அடையும் வழியைக் காட்டுகின்றன.[31] தாந்த்ரீகப் பயிற்சிகளையும் மற்றும் ஆய்வுகளையும் கற்கும்போது மாணவர் மேற்கொண்டு தியான முறைகள் ,குறிப்பாக சக்ரா தியானம் கற்க அறிவுறுத்தப்படுகிறது. பிற யோகிகளை சீர்தூக்கி பார்க்கும்போது, தாந்த்ரீக பயிற்சியாளர்கள் கடைபிடிக்கும் பயிற்சி முந்தையதை விட மிக விரிவாக உள்ளது.தியானிப்பதற்கும், வணங்குவதற்கும் இதயத்திற்குள் உள்ள சக்கரத்துக்குள் கடவுளைக் கொண்டு வரும் நோக்குடன் செய்யப்படும் ஒரு வகை தான் குண்டலினி யோகா.[32]

பிற பாரம்பரியங்களின் யோகா வழக்கங்கள்

[தொகு]

புத்த மதம்

[தொகு]
ஜப்பான் நாட்டிள் காமகுராவிலுள்ள யோகநிலையில் அமர்ந்திருக்கும் புத்தர் சிலை

பண்டைய புத்த மதம் தியான நிலைகளை தன்னகத்தே கொண்டுள்ளது. மிகப் பழமையான தாங்கக்கூடிய யோக வெளிப்பாடுகள் /விவரங்கள் புத்தரின் பண்டைய சொற்பொழிவுகளில் காணப்படுகின்றன. [33] புத்தரின் மிக முக்கிய வித்தியாசமான , புதுமையான பாடம் புகட்டுதல் , தியான நெறிகள் மனப் பயிற்சிகளோடு இணைக்கப்பட வேண்டும் என்பதே.[34] புத்தரின் பாடம் புகட்டுதலுக்கும் , மற்றும் பண்டைய பிராமணிக் நூல்களில் தரப்பட்டுள்ள யோகாவிற்குமிடையில் உள்ள வேறுபாடுகள் கவனிக்கத்தக்கவை. புத்தரைப் பொறுத்தவரை தியான நிலைகள்/ உள்வாங்குதல் மட்டும் முடிவல்ல ,அவை மட்டும் போதாது, ஏனெனில் தியானத்தின் உயர்ந்த நிலையை அடையும்போது கூட விடுதலை கிடைப்பதில்லை. எண்ணங்களில் இருந்து முற்றிலும் விடுபடுவதற்கு பதிலாக சில வகையான மன நடவடிக்கைகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன: [35] சாவின் மூலம் விடுதலை கிடைக்கும் என்ற பண்டைய பிராமணிக் யோக கருத்தை புத்தரும் ஒதுக்கியுள்ளார். [36] பிராமணிக் யோகினைப் பொறுத்தவரை விடுதலை என்பது இறந்த நிலையில் உணரப்படும் ஒரு சுயத்தை அறிதல் அதாவது வாழ்வில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆழ்ந்த தியான நிலை. உண்மையில், மூத்த பிராமணிக் வல்லுனர்கள் சாவில் கிட்டும் விடுதலையை யோக தத்துவமாக கூறியதற்கு புத்தர் புது அர்த்தம் தருகிறார். அவர்கள் குறிப்பிட்ட உதாரணம் வாழ்வில் முக்தி பெற்ற துறவிகள். [37]

யோகசார புத்த மதம்

[தொகு]

யோகச்சார(சமஸ்கிருதம் : யோகப் பயிற்சி[38]) , யோகாச்சாரா என்றும் உச்சரிக்கப்படுகிறது. இது 4 முதல் 5 ஆம் நூற்றாண்டுகளில் இந்தியாவில் இந்த தத்துவ மற்றும் மனோதத்துவப்பள்ளிகள் உருவாக்கப்பட்டன. இது யோகா மற்றும் போதிசத்துவ வழிக்கு நடத்திச் செல்லும் பயிற்சிகளை அளிக்கும் ஒரு அமைப்பு.[39] யோகாச்சாரப் பிரிவு யோகாவை முக்தி அடைதலை சென்றடைய பயிற்றுவிக்கிறது.[40]

சான் (சியோன்/ ஜென் )புத்த மதம்

[தொகு]

ஜென்(சீனர்களின் சியான் வழியாக சமஸ்கிருத பதமான த்யான் என்பதில் இருந்து இந்த சொல் வந்துள்ளது.[41]) இது மஹாயான புத்த மதத்தின் ஒரு வடிவமாகும். இந்த மஹாயான புத்த மத பாடசாலை இதன் யோகா சிறப்பிற்காக பெயர்பெற்றது.மேலை நாடுகளில், ஜென் என்ற பதம் பெரும்பாலும் யோகாவோடு சேர்த்துப் பார்க்கப்படுகிறது; இரண்டு தியானப் பள்ளிகளும் குடும்ப ஒத்திருத்தலை உறுதியாகக் காட்டுகின்றன.[42] ஜென் புத்த மத தியானப் பள்ளிகள தங்கள் வேர்களை யோகப் பயிற்சிகளில் வைத்திருப்பதால் இந்த நடப்புகள் பெருமைமிக்க சிறப்பு கவனம் பெற்றுள்ளன.[43] யோகாவின் சில அத்தியாவசிய மூலக் கூறுகள் புத்த மதத்திற்குப் பொதுவாகவும் , ஜென் நிற்கு குறிப்பாகவும் முக்கியமாகின்றன. [44]

இந்தோ- திபெத் புத்த மதம்

[தொகு]

திபெத்திய புத்த மதத்திற்கு யோகா நடுவாந்திரம் ஆகும். நியிங்காமா பாரம்பரியத்தில் ,தியானப் பயிற்சிகளின் பாதை 9 யானாக்களாக அல்லது வாஹனங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது., இவைகள் அதிக அளவில் அசாதாரணமானவையாகக் கூறப்பட்டுள்ளது.[45] கடைசி 6 யோக யானாக்கள் என விவரிக்கப்பட்டுள்ளன . க்ரியா யோகா , உப யோகா , யோக யானா , மஹா யோகா , அனு யோகா மற்றும் கடைசி பயிற்சியாக அதி யோகா .[46] சர்மா பாரம்பரியம் க்ரியா, உபா ( சர்யா என்று அழைக்கப்படுகிறது) ஆகியவற்றை உள்ளடக்கியது. அனுத்தர யோகா பிரிவு யோகாவுடன் மஹாயோகா மற்றும் அதி யோகாவுக்கு பதிலாக உள்ளது.[47] பிற தந்த்ர யோகா பயிற்சிகள் 108 உடல் நிலை முறை பயிற்சிகளை மூச்சு மற்றும் இதயத்தை தாள கதியுடன் வைத்துக் கொண்டு செய்யும் , முறையை பயிற்றுவிப்பதை உள்ளடக்கியது. ந்யிங்காமா பாரம்பரியம் யந்த்ர யோகாவையும்( திபெத். ட்ருல் கொர் ) பின்பற்றுகிறது. இந்த வகை மூச்சுப் (ப்ராணாயாமா) பயிற்சியை உள்ளடக்கியது.தியானத்தை எதிர் நோக்கி அதற்கு முன்னால் அசைவுகளை நிறுத்தி பயிற்சி எடுப்பவரை மையப்படுத்துதல்.[48] தலை லாமவின் கோடைகாலக் கோவிலான லுகாங்கின் சுவர்களில் பண்டைய திபெத்து யோகிகளின் உடல் அமைப்புகள் வடிவக் காட்சிகள் வரையப்பட்டுள்ளன. சாங்கின் ,கண்டலீ எனப்படும் திபெத்து யோகாசன முறை (௧௯௯௩) ஓரளவு பிரபலமடைந்துள்ளது.,ஒருவரின் உடலில் இருந்து உற்பத்தியாகும் குண்டலி (திபெத்தில்:டம்மோ )உஷ்ணம் , ஒட்டுமொத்த திபெத்து யோகாவின் அடிக்கல் ஆக கருதப்படுகிறது[49] திபெத்தின் யோக சாஸ்திரம் போலியான கருத்து வேறுபாடுகளை சரிசெய்வதாக அதாவது ப்ரானா மற்றும் மனது, இந்த இரண்டையும் ஒன்றுபடுத்தி தந்திரத்தின் பாடத்திட்ட அணுகுமுறைகளை வகுத்துள்ளதாக சேங் கூறுகிறார்.

சமணம்

[தொகு]
கயோட்சர்க நிலையில் யோக தியானம் புரியும் திர்தங்கர பர்சவா
முலபந்தனா நிலையில் மஹாவீராவின் கேவல ஞானா

இரண்டாம் நூற்றாண்டின் CE சமண நூலில் , தத்வார்த்த சூத்ராவின்படி யோகா என்பது மனது, பேச்சு மற்றும் உடலின்ஒட்டுமொத்த நடவடிக்கைகளாகும்.[4] உமாஸ்வதி யோகாவை அஸ்ரவா அல்லது கர்மத்தின் விளைவு [50] மற்றும் காரணமாகவும் , மேலும் மிக அத்தியாவசியமான-சம்யக் கரித்ர - முக்தி அடைவதற்கான பாதையில் இவை மிக அவசியமானவற்றில் ஒன்று என்று கூறுகிறார்.

[50] அவருடைய நியம்சாராவில் , ஆச்சார்ய குண்டகுண்டா, யோக பக்தியை பற்றி அதாவது - முக்தி பெற பக்தி வழி/ மார்க்கம் - உயர்ந்த வகை அர்ப்பணிப்பு என்று விளக்குகிறார். [51] ஆச்சாரிய ஹ்ரிபத்ரா மற்றும் ஆச்சார்ய ஹேமச்சந்த்ரா இருவரும் யோகாவின் கீழ் வரும் 5 முக்கிய துறவர உறுதி மொழிகள், மற்றும் 12 சிறிய உறுதி மொழிகளைப் பற்றி விரிவாக விளக்கியுள்ளார்கள். இது பேராசிரியர். ராபெர்ட் . ஜெ . ஜைடென்பாஸ் போன்ற மத ஆய்வாளர்களை, யோகிக் ஆலோசனையுடன் வளர்ந்த ஒரு முழுமை பெற்ற மதமாக சமண மதத்தைக் கருதுகின்றனர்.[52] Dr.ஹெய்ன்ரிச் ஜிம்மர் ,இந்த யோகா முறை ஆரியர்கள் காலத்திற்கு முந்தையது மேலும் இது வேதங்களின் ஆளுமையை ஒத்துக்கொள்ளுவதில்லை, மற்றும் இது பல் வேறுபட்ட தத்துவவிளக்கங்களைக் கொண்ட சமண மதத்தை போல் இருப்பதாகக் கணக்கிடப்படுகிறது.[53] சமணர்களின், சமண தீர்த்தங்கரர்களின் அடையாள சிற்பங்கள் ,ஓவியங்கள், அவர்கள் பத்மாசனம் அல்லது கயோத்சர்கா என்ற யோகா நிலைகளில் தியானம் செய்யும் நிலையில் காணப்படுகிறது. மஹாவீரர், முலபந்தாசனா என்ற நிலையில் அமர்ந்தவாறு கேவல ஞானா முக்தி பெற்றதாகக் கூறப்படுகிறது.இது முதன் முதலில் எஃஜுத்து வடிவில் அசரங்க சூத்திரத்தில் விளக்கப்பட்டுள்ளது பின்னர் கல்பசூத்திரத்திலும் எழுதப்பட்டுள்ளது.[54] பதஞ்சலியின் யோக சூத்திரத்தில் உள்ள 5 தடைகள் அல்லது பதஞ்சலியின் யோக சூத்திர்தின் புரியாத புதிரான விதத்தில் சமணர்களின் முக்கியமான 5 உறுதி மொழிகளுடன் ஒத்துப்போகிறது.இது சமண மதத்தின் வலுவான தாக்கத்தைக் காட்டுகிறது.[55][56] யோக தத்துவம் மற்றும் சமணமதம் இரண்டுக்கும் தங்களுக்குள் உள்ள ஒருவருக்கு மற்றவர் மீதான தாக்கத்தை விவியன் வொர்த்திங்க்டன் ஏற்றுக்கொண்டு இப்படி எழுதுகிறார்: யோகா, சமண மதத்திற்கு, முழுவதுமாகக் கடன் பட்டிருப்பதை ஒத்துக்கொள்கிறது சமண மதம் யோகப்பயிற்சியை அன்றாட வாழ்வின் நித்திய கடமையாக்கி பதிலளிக்கிறது[57] சிந்து பள்ளத்தாக்கு சின்னங்களும் மற்றும் சிலைகள், கல்வெட்டுக்கள் ஓரளவிற்கு சமணமதத்தில் யோக முறை பாரம்பரியம் இருந்ததற்காண சாட்சியங்களை அளிக்கிறது.[58] மிகக் குறிப்பாக , அறிஞர்களும், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களும் பல் வேறு தீர்த்தங்கரர்களின் சின்னங்களின் யோகாசன நிலைகள் மற்றும் தியானநிலைகளின் ஒற்றுமையை வைத்து உறுதியுடன் கூறுகிறார்கள்: கயோத்சர்கா நிலையில் உள்ள ரிசபா மற்றும் முலபந்தாசனா நைிலயில் உள்ள மஹாவீரர் உருவங்கள் இன்னும் சில தியான நிலையில் உள்ள பாம்புக் குடையுடன் காணப்படும் பார்ஸ்வா உருவங்களுடன் ஒத்துபோகின்றன.இவை எல்லாம் இந்துப் பள்ளத்தாக்கு நாகரிகத்திற்கும்,சமண மதத்திற்கும் உள்ள தொடர்பை மட்டும் காட்டாமல் , சமண மதத்தின் பல வித யோகா பயிற்சி முறைகளில தன் பங்களிப்பையும் காட்டுகிறது.[59]

சமண மத நூலில் மற்றும் இலக்கியங்களில் உள்ள குறிப்புகள்
[தொகு]

பண்டைய சமண மத/ சட்ட நூலில் /இலக்கியங்களான அகரங்கசூத்ரா, நியமசாரா போன்ற நூல்கள், தத்வார்த்த சூத்ரா போன்ற இன்ன பிறவற்றில், யோகா மிகச் சாதாரணமான மனிதன் முதல் மிக உயர்ந்தவர்கள் வரை அன்றாட வாழ்வினை எப்படி ஒரு அங்கமாக விளங்குகிறது எனக் குறிப்புகள் உள்ளன. கீழே தரப்பட்டுள்ள , பின்னாளில் வந்த நூல்கள் யோகாவைப் பற்றிய சமண தத்துவங்களை மேலும் விரிவாக விளக்கின:

  • பூஜ்ய பாதா (5 ஆம் நூற்றாண்டு CE)
    • இஷ்டோபதேஷ்
  • ஆச்சார்ய ஹரிபத்ர சூரி ( 8 ஆம் நூற்றாண்டு CE )
    • யோகபிந்து
    • யோட்ரிஸ்டிசாமுக்கயா
    • யோகசடகா
    • யோகவிமிசிகா
  • ஆச்சாரிய ஜொய்ந்து ( 8 ஆம் நூற்றாண்டு CE )
    • யோகசாரா
  • ஆச்சாரிய ஹேமச்சந்த்ரா ( 11 ஆம் நூற்றாண்டு CE )
    • யோகசாஸ்த்ரா
  • ஆச்சார்ய அமிதகதி ( 11 ஆம் நூற்றாண்டு CE )
    • யோகசாரப்ரபற்றா

இஸ்லாம்

[தொகு]

இந்திய யோகா பயிற்சி முறைகளின் தாக்கம் ஓரளவு சூஃபிசத்தின் வளர்ச்சிக்குக் காரணமாயிருந்தது, அங்கு அவர்கள் ஆசனங்கள், மூச்சுப்பயிற்சி (பிராணாயாமா) இரண்டையும்வழக்கப்படுத்திக்கொண்டார்கள்.[60] 11 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பண்டைய இந்திய யோக சாஸ்திர நூலான , அமிர்தகுண்டா( தேன் குளம்) அராபிய மற்றும் பாரசீக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது.[61] மலேசிய நாட்டின் தலையாய இஸ்லாமிய அங்கம் 2008 இல் ஒரு தடையாணை ஃபட்வா விதித்தது , இது எந்த வகையிலும் அரசியல் சட்டத்தில் சேராது, இது இஸ்லாமியர்கள் யோகா முறைகளைப் பின்பற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தது, இதன் கூற்று, யோகாவில்இந்து மதத்தைப் புகட்டும் கல்விக்கான சாத்தியக் கூறுகள் இருப்பதால் இது ஹராம் எனக் கூறின. இஸ்லாமிய யோகா ஆசிரியர்கள் இது தங்களை நோகடிப்பதாக விமரிசித்தனர்.[62] மலேசியாவின் பெண்ணுரிமை இயக்கமான இஸ்லாமில் உள்ள சகோதரிகள் - தாங்கள் ஏமாற்றபட்டதாகக் கூறினர். மேலும் அவர்கள் தங்கள் யோகா வகுப்புகளை தொடரப்போவதாகக் கூறுகின்றனர்.[63] ஃபட்வா , யோகாவை வெறும் உடல்பயிற்சியாக மட்டும் அனுமதிக்கிறது, ஆனால் அந்த சமயங்களில் மந்திரங்கள் சொல்வதை எதிர்க்கிறது,[64] மற்றும் மனிதனைக் கடவுளோடு ஐக்கியபடுத்துதல் போன்ற போதனைகள் இஸ்லாமியத் தத்துவங்களில் இருந்ததில்லை [65] இதே வகையில், உலேமாஸ் சபை என்ற இந்தோனேசிய இஸ்லாமிய அங்கம் , ஃபட்வா என்ற மத சட்டத்தின் மூலம் யோகவிற்கு அதில் இந்து கருத்துக்கள் அடங்கியிருப்பதாகத் தடை விதித்தது.[66] இந்த வகை ஃபட்வாக்களை , இந்தியாவில் உள்ள டியோபாந்தி இஸ்லாமிய அங்கத்தைச் சேர்ந்த ,டாருல் உலூம் டியோபாந்த் என்பவர் விமரிசித்துள்ளார்.[67] 2009 மேயில், துருக்கியின் ,மத சம்பந்தமான இயக்கத்தின் தலைவர், அலி பர்டாகோகுலு, யோகாவை தீவிரவாதத்தை வளர்த்துவிடும் ஒரு வணிக உத்தி ஏனெனில் யோகாவில் உள்ள பயிற்சி கருத்துகள் இஸ்லாமிய மதத்துடன் போட்டியிட்டு மக்கள் அதில் பங்கு கொள்வதைக் குறைத்துவிடும் என்கிறார்.[68]

கிறித்தவம்

[தொகு]

சில கிறித்தவர்கள் யோகாவை தங்களின் மன்றாட்டுகளிலும், தியானங்களிலும் பயன்படுத்துகின்றனர். இது கடவுளை தேடும் ஒரு வழியாக இவர்களால் பார்க்கப்படுகின்றது.[69] ஆயினும் கத்தோலிக்க திருச்சபையும் மற்ற பிற கிறித்தவ சபைகளும் யோகாவையும் மற்ற சில கிழக்கத்திய பழக்கங்களையும் ஏற்க மறுத்துள்ளன. இவை குறிப்பாக புது யுக இயக்கத்தினரால் பயன்படுத்தப்படுவதாலும்[70], இதனால் மக்கள் கிறித்தவ நெறியினையும் பிற நெறிகளையும் குழப்பிக்கொள்ள நேரிடும் என்பதாலும் இதனை பயன்படுத்துவதை தவிர்க்க பரிந்துரைக்கப்பட்டது.[71][72][73]

1989இலும், 2003இல் வத்திக்கானில் வெளியிடப்பட்ட ஆவணங்களான Aspects of Christian meditation மற்றும் "A Christian reflection on the New Age" ஆகியன இக்கருத்துகளையே எடுத்தியம்புகின்றன. 2003இல் வெளியான கையேடும் இதுகுறித்த வழிகாட்டுதல்களைக் கொண்டிருந்தது.[74] இதில் உடலினைபேணும் உடற்பயிற்சிகள் தியானத்தோடு கலக்கும்போது உடல் கட்டுப்பாடே மிக உயரிய தியானத்தின் வெளிப்பாடு என்று தவறாக மக்கள் புரிந்து கொள்ள வழி உள்ளது எனவும், பிற சமயங்களின் வழக்கங்கள் கிறித்தவ இறை வேண்டலை மேம்படுத்த இயலும் என்றாலும்,[75] கிறித்தவ அடிப்படைக்கோட்பாடுகளுக்கு அவை முரணாக இருக்கும் இடத்தில் அவற்றை பயன்படுத்தக்கூடாது எனவும் எச்சரித்தது.[69]

மற்றும் சில கிறித்தவ பிரிவுகளின்படி, குறிப்பாக, Interdenominational association of Christians என்னும் பிரிவு யோகாவை பயன்படுத்துவது எல்லா சமயங்களும் சமமானவை (religious pluralism) என்னும் வெளித்தோற்றமளிக்கும் என்றும் கருதுகின்றன.[76]

யோகத்தின் பலன்கள்

[தொகு]

யோகப்பயிற்சி மிகப்பழங்காலத்திலிருந்தே பாரதநாட்டில் யோகிகளால் பின்பற்றப்பட்டு வருகிறது. இதனால் இயற்கைக்கு அப்பாற்பட்ட சில சக்திகளை கிடைக்கும் என்பது யோகம் எனும் தத்துவத்தின் கருத்து.

பதினெட்டு யோகஸித்திகளும் பலன்களும்

[தொகு]
குண்டலினி யோகா குறியீடு
  • பஞ்ச மகாபூதங்களின் வடிவத்தை ”தன்மாத்திரை” என்பர். இதையே சூட்சும வடிவாகக் கொண்டு பிரம்மத்தில், மனதை நிலைநிறுத்தி தியானிப்பதால் ‘அணிமா’ என்ற சித்தி கிடைக்கிறது. இந்த சித்தி மூலம் தன் உடலை அணுவைபோல் மிகமிகச் சிறிய வடிவத்தை எடுக்கலாம்.
  • ’மஹத்’ எனும் தத்துவரூபமாக விளங்கும் இறைவனிடம் மனதை நிலைநிறுத்தி தியானிக்கும் யோகிக்கு ‘மஹிமா’ எனும் சித்தி கிடைக்கிறது. இந்த சித்தி மூலம் தன் உடலை மலைப் போல் மிக மிகப் பெரிதாக்கிக் கொள்ள முடியும்.
  • பகவானை ‘பரமாணுவாக’ தியானிக்கும் யோகிக்கு ‘லகிமா’ எனும் சித்தி கிட்டுகிறது. இந்த சித்தி மூலம் உடலை காற்றைப் போல் இலேசான எடையுடன் மாற்றிக் கொள்ள முடியும்.
  • பரப்பிரம்மத்தின் அஹங்கார தத்துவத்தில் தன் மனதை நிலைநிறுத்தும் யோகிக்கு, ’பிராப்தி’ எனும் சித்தியால் ஐம்புலன்களைத் தன் ஆளுகைக்கீழ் கொண்டு வரும் ஆற்றல் பெறுகிறார்.
  • பிறப்பு இறப்பு இல்லாத பகவானின் ’மஹத்’ எனும் தத்துவமே ‘சூராத்மா’. ஆகும். சூராத்மாவில் மனதை நிலைபெறச் செய்பவர்கள் ‘பிராகாம்யம்’ எனும் சித்தி பெற்ற யோகி பிரம்மாண்டம் முழுமைக்கும் தலைமை தாங்குகிறார்.
  • முக்குணமயமான மாயைக்கு அதிபதியும், படைத்தல், காத்தல், அழித்தல் சக்தியும் கொண்ட பகவானிடத்தில் மனதை இலயிக்கும் யோகிக்கு ‘ஈசித்வம்’ எனும் சித்தி கிடைக்கிறது. இந்த சித்தியினால் நான்முகன் முதலான தேவர்களுக்கு ஆணையிடும் தகுதி பெறுகிறார்.
  • பகவான் எனும் சொல்லிற்கு பொருளாக இருக்கும், விராட், இரண்யகர்பன், அந்தக்கரணம் எனும் மூன்று நிலைகளை கடந்து, நாலாவது நிலையான துரிய நிலையில் பிரம்மத்தில் மனதை செலுத்தும் யோகிக்கு ‘வசித்துவம்’ எனும் சித்தி கிட்டுகிறது. இதன் மூலம் யோகிக்கு அனைத்தையும் வசப்படுத்தும் ஆற்றல் உண்டாகிறது.
  • நிர்குணபிரம்மத்தில் (அருவ நிலை) மனதை நிலை நிறுத்தும் யோகிகள் மிக உயர்ந்த பேரானந்தத்துடன் விருப்பங்களின் இறுதி எல்லையை அடைந்து “காமா வஸாயிதா” என்ற சித்தி அடைந்த யோகி, இதனையே தன் விருப்பங்களின் இறுதி எல்லை (காமா வஸாயிதா) என்ற சித்தியாக கூறுகிறார்கள்.

இதர யோகசித்திகள்

[தொகு]
பதஞ்சலி முனிவர் சிலை, ஆதிசேஷனின் மறு அவதாரம்
  • ஆகாயத்தை இறைவனாக தியானிப்பவனுக்கு, பறவைகளின் பேசும் சக்தி கிடைக்கும்.
  • தன் கண்களில் சூரியனையும், சூரியனில் தன் கண்களையும் இணைத்து மனதில் இறைவனை தியானம் செய்பவனுக்கு, உலகம் முழவதையும் கண்ணால் பார்க்கும் சக்தி அடைகிறான்.
  • மனதை உபாதான காரணமாகக் கொண்டு, எந்தெந்த வடிவத்தை அடைய விரும்பி பகவானை தியானிக்கும் யோகிக்கு, தான் விரும்பும் வடிவத்தை அடைகிறான்.
  • தான் விரும்பும் காலத்தில் மரணமடைய விரும்பும் யோகி, குதிகாலை, மலத்துவாரத்தை அடைத்துக்கொண்டு, பிராணசக்தியை, இருதயம்-மார்பு-கழத்து-தலை என்ற வரிசைப்படி மேல் நோக்கி கொண்டு வந்து, பின்னர் ’பிரம்மரந்திரம்’ என்ற கபாலத்தில் உள்ள துவாரம் வழியாக உயிரை வெளியேற்றி துறக்க வேண்டும். இச்சக்திக்கு கபால மோட்சம் என்பர்.
  • மனம், உடல், அதில் உறையும் வாயுக்களுடன் சேர்ந்து பகவானை தியானிப்பவனுக்கு, ’மனோஜவம்’ என்ற ஆற்றல் கிடைத்து அதன் மூலம் யோகி தான் விரும்பும் இடத்திற்கு அந்த விநாடியே சென்றடைகிறான்.
  • தான் விரும்பும் உடலில் நுழைய விரும்பும் யோகி, தான் அவ்வுடலில் இருப்பதாகச் தியானித்துக் கொண்டு, பிராணன் சூட்சும வடிவாக, வெளியிலிருக்கும், வாயுவுடன், தன் உடலை விட்டு விட்டு வேறு உடலில் நுழைகிறான். இதனை ’கூடு விட்டு கூடு பாய்தல்’ என்பர்.

யோக தத்துவத்தின் சிறப்பு

[தொகு]

யோகம் எனும் தத்துவம் கடவுள் இருப்பதை ஏற்றுக்கொண்டதை தவிர, இது பிற்கால சாங்கியம் போன்றதே. எனவே பதஞ்சலியின் யோக தத்துவம் கடவுளுடன் கூடிய சாங்கியம் எனப்படுகிறது.

  • சமண சமய நிறுவனரான மகாவீரர் பன்னிரெண்டு ஆண்டுகள் யோகப்பயிற்சிகளைச் செய்தார். சமண சமயத்தில் யோகப்பயிற்சி யோகாசனம் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
  • பௌத்த சமயத்தை நிறுவிய கௌதம புத்தர் கூட, முழு ஞானோதயம் அடைவதற்கு முன்னாள் ஆறு ஆண்டு காலம் தொடந்து யோகப்பயிற்சிகள் செய்தார். பௌத்த நூல்களும் யோக பயிற்சிகளுக்கு முக்கியத்துவம் அளித்துள்ளன. புத்தரால் கூறப்பட்ட நான்கு உண்மைக்களை அறிய யோகம் பயன்படும் என்று பெளத்த அறிஞரும் தர்க்கவாதியும் தர்மோத்தரா கூறியுள்ளார்.
  • பிற்கால தத்துவவாதிகள் குறிப்பாக அத்வைதிகளும் மற்றும் மகாயான பெளத்தர்களும் யோக சூத்திரத்தை தங்களது தத்துவங்களில் தாராளமாக சேர்த்துக் கொண்டனர்.

நியாய தத்துவத்திலும், வைசேடிகம் தத்துவத்திலும், வேதாந்த தத்துவத்திலும் யோகம் எனும் தத்துவத்திற்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது. பிரம்ம சூத்திரம் மூன்றாம் அத்தியாத்தில் சாதனைகள் எனும் தலைப்பில் யோகத்தின் முக்கிய பகுதிகளான தியானம், ஆசனம் ஆகியவைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டு விவாதிக்கப்பட்டுள்ளது. யோக சூத்திரத்தின் தொடர்புள்ள பல தத்துவங்களில் சாங்கியமும் ஒன்று என்று யோக சூத்திரமே குறிப்பிட்டுள்ளது.

யோக சூத்திரத்தின் எதிர்ப்பாளர்கள்

[தொகு]
  • கி. பி. எழாம் நூற்றாண்டில் வாழ்ந்த குமாரில பட்டர் மற்றும் பிரபாகரர் எனும் பூர்வமீமாம்சை தத்துவவாதிகள் மட்டும், யோக சூத்திரத்தினை கடுமையாக எதிர்த்தார். யோகம் என்பது அகம் சார்ந்த கற்பனையே, அது தத்துவத்தின் தகுதியை தீர்மானிக்காது என்றனர்.
  • தற்காலத்தில் மேற்குலகநாடுகளிலும் யோகம் எனும் தத்துவம் ஒரு கலையாகவே பரவியுள்ளது. சில கிறித்தவநாடுகளிலும், இசுலாமிய நாடுகளிலும், யோகக்கலையால் தங்கள் சமயக்கோட்பாடு திரிக்கப்படும் என்பதால் யோகக்கலையை மக்கள் பயிலத் தடைசெய்துள்ளனர்.[சான்று தேவை]

யோகாவின் குறிக்கோள்

[தொகு]

யோகாவின் குறிக்கோள் ஆரோக்கியத்தை முன்னேற்றுவதில் தொடங்கி, மோட்சத்தை அடைவது வரை பல வகைப்படும்.[77] சமண மதத்திலும் மற்றும் தனித்த அத்வைத வேதாந்தப் பள்ளிகளில் மற்றும் சைவசமயத்திலும் யோகாவின் குறிக்கோள் மோட்சம்.அதாவது உலகியல் துன்பங்களில் இருந்து, பிறப்பு, இறப்பு (சம்சாரம்) என்ற சுழற்சியில் இருந்து விடுதலை, இந்தக் கட்டத்தில் மிக உயர்ந்த பிரம்மத்தில் ஐக்கியம் என்ற கருத்து. மஹாபாரத்தத்தில், யோகாவின் லட்சியம் பலவிதமாக பிரம்ம லோகத்தில் பிரம்மனாக நுழைவது, அல்லது எல்லாவற்றிலும் உள்ள பிரம்மம் அல்லது ஆத்மாவை உணர்தல் என்று பலவாறாக விளக்கப்பட்டுள்ளது .[78]

பக்தி பள்ளிகளான வைணவம் , பக்தி அல்லது ஸ்வயம் பகவானுக்கான சேவை/கைங்கரியம் செய்வது யோகாவின் முறைகளின் ஆணித்தரமான / இறுதியான இலக்கு. இங்கு இலக்கு என்பது முடிவில்லாத ஒரு தொடர்பை பகவான் விஷ்ணுவுடன் அனுபவிப்பதாகும்.[79]

உங்கள் உடல் உங்களுடன் ஒரு நிரந்தர/ நிலையான உறவை பேணி வர வேண்டும் , எப்படி என்றால் ஒரு அமைதியான , நடுநிலையான மனஅமைதி பெற்று விளங்கவேண்டும் என்பதே!.

சில யோக ஆசனங்கள்

[தொகு]
  1. உட்கடாசனம்
  2. பத்மாசனம்
  3. வீராசனம்
  4. சவாசனம்
  5. மயூராசனம்
  6. சிரசாசனம்
  7. யோகமுத்ரா
  8. உத்திதபத்மாசனம்
  9. ஜானுசீரானம்
  10. பக்ஷிமோத்தாசனம்
  11. உத்தானபாத ஆசனம்
  12. நாவாசனம்
  13. விபரீதகரணி
  14. சர்வாங்காசனம்
  15. மச்சாசனம்−மத்யாசனம்
  16. சுப்தவஜ்ராசனம்
  17. புஜங்காசனம்
  18. சலபாசனம்
  19. தணுராசனம்
  20. வச்சிராசனம்
  21. மகாமுத்ரா
  22. உசர்ட்டாசனம்
  23. அர்த்த மத்ச்யேந்திராசனம்
  24. அர்த்த சிரசானம்
  25. நின்ற பாத ஆசனம்
  26. பிறையாசனம்
  27. பாதஹஸ்தாசனம்
  28. திரிகோணசனம்
  29. கோணாசனம்
  30. உட்டியானா
  31. நெளலி
  32. சக்கராசனம்
  33. பவனமுத்தாசனம்
  34. கந்தபீடாசனம்
  35. கோரசா ஆசனம்
  36. மிருகாசனம்
  37. நடராசா ஆசனம்
  38. ஊர்த்துவ பத்மாசனம்
  39. பிரானாசனம்
  40. சம்பூரண சபீடாசனம்
  41. சதுரகோனாசனம்
  42. ஆகர்சன தனூராசனம்
  43. ஊர்த்துவ பரவிசுடிர ஏகபாத ஆசனம்
  44. உருக்காசனம்
  45. ஏக அத்த புசங்காசனம்
  46. யோகா நித்திரை
  47. சாக்கோராசனம்
  48. கலா பைரவ ஆசனம்
  49. அர்த்தபாத பச்சி மோத்தாசனாம்
  50. கவையாசனம்
  51. முக்த அர்த்த சிரசாசனம்
  52. ஏகபாத சிரசாசனம்

இதனையும் காண்க

[தொகு]

இதனையும் கேட்க

[தொகு]

குறிப்புகள்

[தொகு]
  1. இலக்கியத்தில் பாலி என்னும் சொல்லின் பயன்பாட்டினைத் தேட, தாமஸ் வில்லியம் ரைஸ் டேவிட்ஸ், வில்லியம் ஸ்டீட், பாலி_ஆங்கில அதராதியை பார்க்கவும். மேதிலால் பனார்சிதாஸ் பதிப்பகத்தின் மறு அச்சு., 1993, பக்கம் 558: [1]
  2. Denise Lardner Carmody, John Carmody, Serene Compassion. Oxford University Press US, 1996, page 68.
  3. Stuart Ray Sarbacker, Samādhi: The Numinous and Cessative in Indo-Tibetan Yoga. SUNY Press, 2005, pp. 1–2.
  4. 4.0 4.1 Tattvarthasutra [6.1], see Manu Doshi (2007) Translation of Tattvarthasutra, Ahmedabad: Shrut Ratnakar p. 102
  5. The Lion's Roar: An Introduction to Tantra by Chogyam Trungpa. Shambhala, 2001 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-57062-895-5
  6. Edmonton Patric 2007,pali and its sinificance p. 332
  7. Lama Yeshe. The Bliss of Inner Fire. Wisdom Publications. 1998, pg.135-141.
  8. Crangle 1994, ப. 4-7.
  9. Possehl (2003), pp. 144–145
  10. கொடிச்சி காக்கும் அடுக்கற் பைந்தினை
    முந்து விளை பெருங் குரல் கொண்ட மந்தி
    கல்லாக் கடுவனொடு நல் வரை ஏறி,
    அங்கை நிறைய ஞெமிடிக் கொண்டு, தன்
    திரை அணற் கொடுங் கவுள் நிறைய முக்கி, 5
    வான் பெயல் நனைந்த புறத்த, நோன்பியர்
    கை ஊண் இருக்கையின் தோன்றும் - நற்றிணை 22

  11. பிரணாயாமம்
  12. நோன்பியர் கையூண் இருக்கை
  13. பொஸெல்(2003), pp. 144-145
  14. ஃபிளட், pp. 94–95.
  15. அலெக்ஸாண்டர் வெய்ன், புத்த தியானத்தின் துவக்கம். ரௌட்லெட்ஜ் 2007, பக்கம் 51.
  16. அலெக்ஸாண்டர் வெய்ன், புத்த தியானத்தின் துவக்கம் ரௌட்லெட்ஜ் 2007, பக்கம்56.
  17. அலெக்ஸாண்டர் வெய்ன், புத்த தியானத்தின் துவக்கம். ரௌட்லெட்ஜ் 2007, பக்கம் 51.
  18. ரிச்சர்டு காம்ப்ரிச், "தேராவத புத்தமதம்: எ சோஷியல் ஹிஸ்டரி ஃபிரம் தி ஏன்சியன்ட் பெனாரஸ் டு மாடர்ன் கொலம்போ." ரெட்லட்ஜ் மற்றும் கேகன் பால், 1988, பக்கம் 44.
  19. அலெக்ஸாண்டர் வெய்ன், புத்த தியானத்தின் துவக்கம். ரௌட்லெட்ஜ் 2007, பக்கம் 50.
  20. ஃபிளட், ப. 95. ப்ரீபுத்திஸம் என்னு பாதுகாப்பாக விவரிக்கப்படுபவைகளில் பண்பாளர்கள் கதா உபனிஷத்தை சேர்க்கவில்லை. உதாரணம் Helmuth von Glasenapp அவர்களின் 1950- ன் "Akademie der Wissenschaften und Literatur,"செயல்முறைகள் [2]. சிலர் அதை போஸ்ட்_புத்திஸ்ட் என விவாதிக்கின்றனர். உதாரணத்திற்கு பார்கக்ளவும் அரவிந்தி ஷர்மா அவர்களின்ஹஜ்மீ நகாமுரா's மீள்பார்வை முந்தைய காலத்து தோந்த தத்துவங்களின் வரலாறு , தத்துவம் கிழக்கு மற்றும் மேற்கு, வால். 37, எண். 3 (ஜுலை., 1987), pp. 325-331. முந்தைய புத்த எழுத்துக்களில் “யோகா” என்னும் பாலி வார்த்தையின் பயன்பாடு குறித்த முழுமையாக சோதனைக்கு பார்க்கவும் தாமஸ் வில்லியம் ரைஸ் டேவிட்ஸ், வில்லியம் ஸ்டெடி, “பாலி_ஆங்கில அகராதி”. மோதிலால் பனார்சிதாஸ் பதிப்பகத்தின் மறு அச்சு, 1993, பக்கம் 558: [3]. வார்த்தையின் பயன்பாட்டினை "ஆன்மீக செயல்முறை" என்னும் அர்த்தத்தில் பார்க்க தம்மபடா, பார்க்கவும் கில் ஃபினாஸ்டல், "தி தம்மபடா," ஷம்பாலா 2005, பக்கங்கள் 56, 130.
  21. The Illustrated Light on Yoga, B K S Iyengar
  22. ஜேக்கப்சன், ப. 10.
  23. [64] ^ ஜால்லிஃபே, 31ஒரு முழு அத்தியாயம் (அத்தியாயம் 6) உட்பட பகவத் கீதை பாதம்பரிய யோக வழக்கங்களை வெளிப்படுத்துகிறது. "அறிவு" (ஞானம்), "செயல்" (கர்மா), மற்றும் "அன்பு (பக்தி) ஆகிய மூன்று பிரபல யோகா வகைளையும் கீதை அறிமுகப்படுத்துகிறது. ஃபிளட், ப. 96.
  24. கம்பீரானந்தா, ப. 16.
  25. ஜேக்கப்சன், ப. 46.
  26. வாழும் யோகா: ஒரு வாழ்க்கை பழக்கத்தை உருவாக்குதல் - பக்கம் 42 எழுதியவர் கிறிஸ்டி டர்லிங்டன்(பக்கம் 42)
  27. யோகாவின் ஒளிக்கு வழிகாட்டுதல்: யோகா ஆசிரயர்களுக்கான யோகா பாடங்கள் - பக்கம் 10 எழுதியவர் நான்சி கெர்ஸ்டீன்
  28. மனம்நிறைந்த யோகா: மூச்சு உடல் மற்றும் மனதின் விழித்தெழுந்த ஞானம் - பக்கம் 6 எழுதியவர் ஃபிராங்க் ஜுட் போக்கியோ
  29. ஹத யோகா: அதன் உள்ளடக்கம், பாடம் மற்றும் பழக்கம் எழுதியவர் மிக்கெல் புர்லே(பக்கம் 16)
  30. ஃப்யூர்ஸ்டீன், ஜியார்ஜ். மிஸ் வேர்ல்ட் 1996 தி ஷம்பலா கைடு டு யோகா . பாஸ்டன் & லண்டன்: ஷம்பாலா பதிப்பகம், இன்க்.
  31. 31.0 31.1 தலைப்பு:மெசோகாசம்: ஹிந்துயிஸம் அண்டு தி ஆர்கனைசேஷன் ஆஃப் எ டிரெடிஷனல் நியூவார் சிட்டி இன் நேபாள். ஆசிரியர்: ராபர்ட் I. லெவி. பதிப்பகம்: கலிஃபோர்னியா பல்கலைகழக அச்சகம், 1991. pp 313
  32. தலைப்பு:மெசோகாசம்: ஹிந்துயிஸம் அண்டு தி ஆர்கனைசேஷன் ஆஃப் எ டிரெடிஷனல் நியூவார் சிட்டி இன் நேபாள். ஆசிரியர்: ராபர்ட் I. லெவி. பதிப்பகம்: கலிஃபோர்னியா பல்கலைகழக அச்சகம், 1991. pp 317
  33. பார்பரா ஸ்டோலர் மில்லர், யோகா: சுதந்திர முறை: யோகா சுதந்திர முறை பதாஞ்சலியின் யோக சூத்திரம்; கருத்து,அறிமுகம்,மற்றும் கலைச்சொற்களுடன் எழுத்தின் மொழிபெயர்ப்பு. கலிஃபோர்னியா அச்சகம், 1996, பக்கம் 8.
  34. அலெக்ஸாண்டர் வெய்ன், புத்த தியானத்தின் துவக்கம். ரௌட்லெட்ஜ் 2007, பக்கம் 73.
  35. அலெக்ஸாண்டர் வெய்ன், புத்த தியானத்தின் துவக்கம். ரௌட்லெட்ஜ் 2007, பக்கம் 105.
  36. அலெக்ஸாண்டர் வெய்ன், புத்த தியானத்தின் துவக்கம். ரௌட்லெட்ஜ் 2007, பக்கம் 96.
  37. அலெக்ஸாண்டர் வெய்ன், புத்த தியானத்தின் துவக்கம். ரௌட்லெட்ஜ் 2007, பக்கம் 109.
  38. "Dan Lusthaus: "What is and isn't Yogacara"". Archived from the original on 2013-12-16. பார்க்கப்பட்ட நாள் 2013-09-19.
  39. டான் லுஸ்தஸ். புத்த நனவு அனுபவயியல்: யோகாகர புத்திசம் மற்றும் செங் வெய்_ஷிஹ் லன் _ ன் தத்துவார்த்த விசாரணை. பதிக்கப்பட்டது 2002 (ரௌட்லெட்ஜ்). ஐஎஸ்பிஎன் 0700711864. pg 533
  40. எளிதான திபெத்திய புத்த மதம்: C. அலெக்ஸாணடர் சிம்ப்கின்ஸ், அன்னெலென் M. சிம்ப்கின்ஸ் அவர்களின் தந்திர வாழ்க்கைக்கான வழிகாட்டி 2001 _ ல் பதிக்கப்பட்டது டூட்டல் பதிப்ப ஐஎஸ்பிஎன 9780071370486
  41. இந்தியா சீனா மற்றும் ஜப்பானில் புத்த பாரம்பரியம். வில்லியம் தியோடோர் டி பாரி அவர்களால் எடிட் செய்யப்பட்டது பக்கங்கள். 207-208. ஐஎஸ்பிஎன் 0-394-71696-5 - "தியான பள்ளி, சீனத்தில் சியான் என்று அழைக்கப்படும் ஸமஸ்கிருததியான் ஜப்பானிய உச்சரிப்பின் ஜென் மிக அறிந்த மேற்கத்திய உச்சரிப்பாகும்.
  42. ஜென் புத்தமதம்: இந்தியா மற்றும் சீனாவின் வரலாறு எழுதியவர் ஹெய்ன்ரிச் டுமௌலின், ஜேம்ஸ் W. ஹெய்சிக், பால் F. நிட்டர் (பக்கம் xviii)
  43. ஜென் புத்தமதம்: இந்தியா மற்றும் சீனாவின் வரலாறு எழுதியவர் ஹெய்ன்ரிச் டுமௌலின், ஜேம்ஸ் W. ஹெய்சிக், பால் F. நிட்டர் (பக்கம் 13). மொழிபெயர்த்தவர் மேம்ஸ் W. ஹெய்சிக், பால் F. நிட்டர். பங்களித்தவர் ஜான் மெக்ரே. பதிக்கப்பட்டது 2005 வோர்ல்டு விஸ்டம். 387 பக்கங்கள். ஐஎஸ்பிஎன் 0941532895 [சரியான வரி: "திஸ ஃபினாமினன் மெரிட்ஸ் ஸ்பெஷல் அட்டெண்ஷன் சின்ஸ் யோகிக் ரூட்ஸ் ஆர் டு பி ஃபவுண்ட் இன் தி ஜென் புத்திஸ்ட் ஸ்கூல் ஆஃப் மெடிடேஷன்."]
  44. ஜென் புத்தமதம்: இந்தியா மற்றும் சீனாவின் வரலாறு எழுதியவர் ஹெய்ன்ரிச் டுமௌலின், ஜேம்ஸ் W. ஹெய்சிக், பால் F. நிட்டர் (பக்கம் 13)
  45. தி லயன்ஸ் ரோர்: தந்திரத்திற்கான ஒரு அறிமுகம் எழுதியவர் சோக்யம் த்ருங்பா. ஷம்பாலா, 2001 ஐஎஸ்பிஎன் 1570628955
  46. வஜ்ர உலகின் ரகசியம்: திபெத்தின் தந்திர புத்த மதம் எழுதியவர் ரே, ரெகினால்டு A. ஷம்பாலா: 2002. ஐஎஸ்பிஎன் 157062917X pg 37-38
  47. வஜ்ர உலகின் ரகசியம்: திபெத்தின் தந்திர புத்த மதம் எழுதியவர் ரே, ரெகினால்டு A. ஷம்பாலா: 2002. ஐஎஸ்பிஎன் 157062917X pg 57
  48. யந்திர யோகா: தி திபெத்தியன் யோகா மூவமெண்ட் எழுதியவர் சோக்யால் நம்காய் நோர்பு. ஸ்நொ லயன், 2008. ஐஎஸ்பிஎன் 9780071370486
  49. சாங், G.C.C. (1993 பம்பாய் குண்டுவெடிப்புகள் திபெத்திய யோகா . நியூஜெர்சி: கரோல் பதிப்பகக் குழுமம் ஐஎஸ்பிஎன் 0-8065-1453-1, .7
  50. 50.0 50.1 [6.2]
  51. நியமசாரா [134-40]
  52. ஜிடென்பாஸ், ராபர்ட். ஜெய்னிஸம் தற்போது மற்றும் அதன் எதிர்காலம் முன்சென்: மன்யா வெர்லாக், 2006. டபுள்டே, p.35.மு
  53. ஜிம்மர், ஹீன்ரிச் இன் (ed.) ஜோசப் கேம்ப்பெல்: இந்தியாவின் தத்துவங்கள். நியூயார்க்: பிரின்ஸ்டன் பல்கலைகழக அச்சகம், 1969 ப.60
  54. சாப்பள், கிறிஸ்டோபர்.(1993) ஆசிய பாரம்பரியங்களில் மிருகங்கள், பூமி, மற்றும் சுயத்திற்காக அஹிம்சை. நியூயார்க்: சன்னி பிரஸ், 1993 ப. 7
  55. ஜிடென்பாஸ் (2006) p.66
  56. எ ஹிஸ்டரி ஆஃப் யோகா பை விவியன் வொர்திங்டன் (1982) ரூட்லெட்ஜ் ஐஎஸ்பிஎன் 071009258X ப. 29
  57. விவியன் வொர்திங்டன் (1982) ப. 35
  58. சாப்பள், கிறிஸ்டோபர்(1993), ப.6
  59. சாப்பள், கிறிஸ்டோபர்.(1993), pp.6-9
  60. "Situating Sufism and Yoga". Archived from the original on 2009-03-27. பார்க்கப்பட்ட நாள் 2013-09-19.
  61. "Carolina Seminar on Comparative Islamic Studies". Archived from the original on 2009-08-25. பார்க்கப்பட்ட நாள் 2013-09-19.
  62. Top Islamic body: Yoga is not for Muslims பரணிடப்பட்டது 2008-12-05 at the வந்தவழி இயந்திரம் - சிஎன்என்
  63. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2011-06-22. பார்க்கப்பட்ட நாள் 2021-08-26.
  64. "Malaysia leader: Yoga for Muslims OK without chant[தொடர்பிழந்த இணைப்பு]," அசோசியேட்டட் பிரஸ்
  65. [112][113]
  66. [4]
  67. [5]
  68. http://www.hurriyet.com.tr/english/domestic/11692086.asp?gid=244
  69. 69.0 69.1 Steinfels, Peter (7 January 1990). "Trying to Reconcile the Ways of the Vatican and the East". New York Times. http://query.nytimes.com/gst/fullpage.html?res=9C0CE1D61531F934A35752C0A966958260&sec=&spon=. பார்த்த நாள்: 5 December 2008. 
  70. Dr Ankerberg, John & Dr Weldon, John, Encyclopedia of New Age Beliefs, Harvest House Publishers, 1996
  71. "Vatican sounds New Age alert". BBC. 4 February 2003. http://news.bbc.co.uk/2/hi/europe/2722743.stm. பார்த்த நாள்: 27 August 2013. 
  72. Teasdale, Wayne (2004). Catholicism in dialogue: conversations across traditions. Rowman & Littlefield. p. 74. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7425-3178-3.
  73. Mohler, R. Albert Jr. "The Subtle Body – Should Christians Practice Yoga?". பார்க்கப்பட்ட நாள் 14 January 2011.
  74. Handbook of vocational psychology by W. Bruce Walsh, Mark Savickas 2005 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8058-4517-8 page 358
  75. "1989 Letter from Vatican to Bishops on Some Aspects of Christian Meditation". Ewtn.com. Archived from the original on 2 மே 2010. பார்க்கப்பட்ட நாள் 28 November 2012.
  76. Mermis–Cava, Jonathan (2009). "An Anchor and a Sail: Christian Meditation as the Mechanism for a Pluralist Religious Identity". Sociology of Religion. 
  77. ஜகோப்சென், ப. 10.
  78. ஜகோப்சென், ப. 9.
  79. பிரிட்டானிக்கா சுருக்கம் பரணிடப்பட்டது 2007-12-17 at the வந்தவழி இயந்திரம் "பக்தியின் வலுவூட்டத்தினால் குணவியல்புகளை மாற்றி, பிறப்பு மற்றும் இறப்பு சுழற்சியிலருந்து தப்பி விஷ்ணுவின் திருவடிகளை சேர்வதே லட்சியம்."

குறிப்புதவிகள்

[தொகு]
  • ஆர். கார்பே, சமயம் மற்றும் நீதி இயலின் கலைக்களஞ்சியம் xii, 831-2
  • ஆர். பி. சாந்தா, இந்தியத் தொல்பொருள் ஆய்வுத் துறை, நினைவுக் குறிப்புகள் Vols, ,1931, இலண்டன்I, 53-4
  • * சங்கவி சுக்லால்ஜி, தர்சனா மற்றும் சிந்தனா i, 251-2
  • `நியாயபிந்து` நூலைப்பற்றி தர்மோத்தரரின் விமர்சனம்

உசாத்துணை

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=யோகக்_கலை&oldid=4016047" இலிருந்து மீள்விக்கப்பட்டது