பன்னாட்டு யோகா நாள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சர்வதேச யோகா தினம்
அதிகாரப்பூர்வ பெயர்சர்வதேச யோகா தினம்
பிற பெயர்(கள்)உலக யோகா தினம்
கடைபிடிப்போர்ஐக்கிய நாடுகள் அவை
கொண்டாட்டங்கள்சர்வதேச யோகா தின நிகழ்ச்சி, யோகப் பயிற்சி
நாள்21 June
Next time21 சூன் 2022 (2022-06-21)
காலம்1 நாள்
நிகழ்வுஆண்டுதோரும்
First time21 June 2015
தொடர்புடையனயோகா, உடல் நலத்தகுதி


பன்னாட்டு யோகா நாள் (International Yoga Day) ஆண்டுதோறும் சூன் 21 ஆம் நாள் கொண்டாடப்படும் என ஐக்கிய நாடுகள் அவை அறிவித்துள்ளது.[1][2]

ஐயாயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த யோகா கலையின் பெருமையை உலகம் முழுவதும் பரவச் செய்யும் வகையில் சர்வதேச யோகா நாளாக ஆண்டின் ஒரு நாளை ஐக்கிய நாடுகள் சபை அறிவிக்க வேண்டும் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி ஐநா பொதுச்சபையில் 2014 செப்டம்பர் 27 அன்று வலியுறுத்தி உரையாற்றியிருந்தார்.[3][4][5][6] சூன் 21 ஆம் நாளை அவர் இதற்காகப் பரிந்துரைத்திருந்தார். இரண்டு கதிர்த்திருப்பங்களில் ஒன்று நிகழும் இந்நாள், வடக்கு அரைக்கோளத்தில் மிக நீண்ட நாளாகவும் உள்ளது. பல உலக நாடுகளில் இந்நாள் ஒரு குறிப்பிடத்தக்கதாகவும் உள்ளது என அவர் தெரிவித்தார்.[7] அமெரிக்கா, கனடா, சீனா உட்படப் பல உலக நாடுகள் நரேந்திர மோதியின் பரிந்துரையை ஆதரித்தன.[8][9][10][11]

2014 டிசம்பர் 11 அன்று 193-உறுப்பினர்கள் கொண்ட ஐக்கிய நாடுகள் பொதுச் சபை சூன் 21 ஆம் நாளை 'பன்னாட்டு யோகா நாளாக' அறிவிக்கும் தீர்மானத்தை நிறைவேற்றியது.[12]

முதல் சர்வதேச யோகா தினம்[தொகு]

முதல்முறையாக 2015 , சூன் 21-ம் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. இதற்காக இந்தியத் தலைநகர் தில்லியில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இந்நிகழ்ச்சிக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி தலைமை வகித்தார்[13]

மேற்கோள்கள்[தொகு]

 1. ஜூன் 21 சர்வதேச யோகா தினம்: ஐ.நா. அறிவிப்பு, தினமணி, டிசம்பர் 12, 2014
 2. What is International Yoga Day?
 3. UN should adopt an International Yoga Day: Modi
 4. "India leader proposes International Yoga Day". 2015-08-07 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2014-12-12 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
 5. PM Modi asks world leaders to adopt International Yoga Day
 6. Narendra Modi asks world leaders to adopt International Yoga Day
 7. UN declares June 21 as 'International Day of Yoga'
 8. Gabbard to support International Yoga Day
 9. Impressed with Narendra Modi, Barack Obama expresses interest in yoga
 10. Modi's call for International Yoga Day gains pace, 50 nations including China, US support PM's call
 11. 50 nations, including China and US, back Modi's call for International Yoga Day
 12. "United Nations declares June 21 International Day of Yoga". 2015-01-08 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2014-12-12 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
 13. "பிரதமர் மோடி தலைமையில் முதல் சர்வதேச யோகா தினம் கொண்டாட்டம்: டெல்லியில் 35,000 பேர் பங்கேற்பு". தி இந்து. 21 சூன் 2015 அன்று பார்க்கப்பட்டது.
Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
International Day of Yoga
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பன்னாட்டு_யோகா_நாள்&oldid=3248860" இருந்து மீள்விக்கப்பட்டது