புது யுக இயக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

புது யுக இயக்கம் (‌new age movement) என்பது மேலை நாடுகளில் பரவி வரும் ஓர் ஆன்மீக இயக்கம் ஆகும். இது ஒரு மதமாக இன்னும் வடிவம் பெறவில்லை. இதைக் கடைப்பிடிப்போர் வாழ்வை எப்படி வாழ்வது என்று தாங்களே முடிவு செய்கின்றனர். இந்து மதம் உள்ளிட்ட கீழை நாடுகளின் கொள்கைகளை மேலை நாட்டுச் சித்தாந்தங்களுடன் கலந்து கொள்கைகளை இவர்கள் உருவாக்குகின்றனர். கீழை நாட்டினர் போல கடவுளுடன் தொடர்பு கொள்ள தியானத்தில் ஈடுபடுகின்றனர். கிறித்தவ சமயத்தினர் இவர்களின் கொள்கைகளைக் குறை கூறுகின்றனர்.[1]

புது யுகம் குறித்துப் பல புத்தகங்கள் எழுதப்பட்டுள்ளன. அத்துடன் புது யுக இசை என்ற மனதை அமைதிப்படுத்தும் இசை வடிவமும் உருப்பெற்று உள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "புது யுக இயக்கத்தைக் கண்டிக்கும் கட்டுரை". Archived from the original on 2013-01-28. பார்க்கப்பட்ட நாள் 2011-04-20.
"https://ta.wikipedia.org/w/index.php?title=புது_யுக_இயக்கம்&oldid=3564069" இலிருந்து மீள்விக்கப்பட்டது