தேவிபிரசாத் சட்டோபாத்தியாயா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தேவிபிரசாத் சட்டோபாத்தியாயா
முழுப் பெயர்தேவிபிரசாத் சட்டோபாத்தியாயா
பிறப்புநவம்பர் 19, 1918
கல்கத்தா, இந்தியா
இறப்புமே 8, 1993(1993-05-08) (அகவை 74)
கல்கத்தா, இந்தியா
பகுதிஇந்திய மெய்யியல்
சிந்தனை மரபுகள்இந்திய மெய்யியல், பொருள்முதல்வாதம், மார்க்சியம்
முக்கிய ஆர்வங்கள்இந்தியப் பொருள்முதல்வாதத்தின் வரலாறு, அறிவியல், அரசியல் தத்துவம்

தேவிபிரசாத் சட்டோபாத்தியாயா (Debiprasad Chattopadhyaya, நவம்பர் 19, 1918 - மே 8, 1993) இந்திய மார்க்சியப் புலமையாளர்களில் மிகவும் குறிப்பிடத்தக்கவர். இந்திய மெய்யியல் மரபு குறித்து மிக முக்கியமான ஆய்வுகளை நிகழ்த்தியுள்ளார்.இவருடைய மிகவும் குறிப்பிடத்தக்க படைப்பு உலகாயதம்-பண்டை இந்தியப் பொருள்முதல் வாதம் பற்றிய ஓர் ஆய்வு.பண்டைய இந்திய அறிவியல், தொழில்நுட்ப வரலாற்றிலும் மிக முக்கியமான ஆய்வுகளை நிகழ்த்தியுள்ளார்.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

கொல்கத்தா பாவனிபூர் மித்ரா நிலையத்தில் தொடக்கப் பள்ளிக் கல்வியையும், கொல்கத்தா மாநிலக் கல்லூரி, கல்கத்தா பல்கலைக்கழகம் ஆகியவற்றில் மெய்யியலையும் கற்றார். 1939-1942 ஆகிய ஆண்டுகளுக்கிடையில் B.A. (Honours), M.A. ஆகிய பட்ட வகுப்புகளில் முதலிடம் பெற்றுத் தேர்ச்சியடைந்தார்.ஜார்ஜ் தாம்சனின் ஆய்வுமுறையைப் பின்பற்றி உலகாயதம் பற்றி ஆய்வு செய்தார்.கொல்கத்தா நகரக் கல்லூரியில்(city colleage)நெடுங்காலம் மெய்யியலைப் போதித்தார்.

தமிழில் வெளிவந்துள்ள இவருடைய நூல்கள்[தொகு]

  1. உலகாயதம்
  2. இந்தியத் தத்துவத்தில் நிலைத்திருப்பனவும் அழிந்தனவும்
  3. இந்தியத் தத்துவ இயல்-ஓர் எளிய அறிமுகம்

வெளி இணைப்புகள்[தொகு]

  1. தேவிபிரசாத் சட்டோபாத்தியாயா வாழ்வும் பணியும்