உள்ளடக்கத்துக்குச் செல்

ஆபஸ்தம்ப தர்மசூத்திரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆபஸ்தம்ப தர்மசூத்திரம் பொ.ஊ.மு. முதல் ஆயிரமாண்டு முதல் தற்போது வரை இந்து சமயத்தில் பின்பற்றப்படும் சமஸ்கிருத மொழியில் உள்ள தர்மசாத்திர நூல்களில் ஒன்றாகும்.[1] இது கிருஷ்ண யசூர் வேதத்தின் தைத்திரியக் கிளையில் அமைந்த மூன்று தர்மசாத்திர நூல்களில் ஒன்றாகும். பிற தர்மசாத்திர நூல்கள் பௌதயான தர்ம சூத்திரம் மற்றும் ஹிரண்யகேச தர்ம சாத்திர நூல்கள் ஆகும்.[2]

ஆபஸ்தம்ப தர்மசூத்திர நூலில் ஒரு பகுதியே கௌதம தர்ம சூத்திரம் ஆகும். ஆபஸ்தம்ப தர்மசூத்திரம், ஆபஸ்தம்ப சிரௌதசூத்திரம் மற்றும் ஆபஸ்தம்ப கிரகாயசூத்திரம் என இரண்டு பகுதிகளைக் கொண்டது.[2] தர்ம சாத்திர நூல்களில், ஆபஸ்தம்ப சூத்திரம் தற்போதும் இந்துக்களின் சமயம் மற்றும் திருமணச் சடங்குகளில் நடைமுறையில் உள்ளது.[3]

Duties of a teacher

Next the teacher's conduct towards his pupil.
Loving him like a son and totally devoted to him,
the teacher should impart knowledge to him,
without holding anything back,
with respect to any of the Laws.
Except in emergency, moreover,
he should not employ a pupil,
for purposes to the detriment of the pupil's studies.

Apastamba Dharmasutras 1.8.23-25
Translator: Patrick Olivelle[4]

கிருஷ்ண யஜூர் வேத சாகையைக் கொண்டு, ஆபஸ்தம்ப முனிவர் இந்த தர்மசூத்திர நூலை இயற்றியதால் இதற்கு ஆபஸ்தம்ப தர்ம சூத்திரம் எனப்பெயர் பெற்றது. [2] இரண்யகேசின் மாணவரான பௌதயானரின் மாணவரே ஆபஸ்தம்பர் ஆவார். இந்த மூவரும் கிருஷ்ண யசூர் வேதத்தை மையமாகக் கொண்டு கல்பம் சூத்திரங்களை இயற்றினர்.[2]

Who doesn't pay taxes?

The following are exempt from taxes:
vedic scholars, women of all classes,
pre-pubescent boys,
all students studying with a guru,
ascetics, sudras who work as personal servants,
people who are blind, dumb, deaf and sick,
anyone excluded from acquiring property.

Apastamba Dharmasutras 2.26.10-17 [5]

சிலர் இதன் காலம் பொ.ஊ.மு. 600 மற்றும் பொ.ஊ.மு. 300 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலம்[6] என்றும், சிலர் பொ.ஊ. 450–350 க்கும் இடைப்பட்ட காலம் என்றும் கணித்துள்ளனர்.[7]

ஆபஸ்தம்ப தர்மசூத்திரங்கள்
அத்தியாயம் தலைப்புகள் மொழிபெயர்ப்பு
விளக்கம்
நூல் 1 குருகுல வாழ்க்கை (ஆபஸ்தம்ப கல்ப சூத்திரம், நூல் 28)
1.1.1-3 தர்ம சூத்திரத்தின் விதிகள் [8]
1.1.4-1.7.30 குரு குலத்தில் மாணவன், உடை, தூய்மை, குடியிருப்பு, நடத்தை நெறிகள், உணவு, சமூக வகுப்புகள், பொதுவான விதிகள், ஆசிரியர் மற்றும் ஆசிரியரின் குடும்பத்தினருடன் எவ்வாறு மாணவன் நடந்து கொள்தல், பள்ளி பருவம் முடிதல் [9]
1.7.31-1.19.15 குருவின் பொறுப்பு, வேதக் கல்வி, குருவின் கடமைகள், தூய்மைப்படுத்தல், உணவு குறித்த விதிகள் [10]
1.20.1-1.32-29 சட்டம், வணிகம், சாதி விலக்கம் செய்தல் (தீச்செயலுக்கான தண்டனை), தவங்கள், பட்டறிவு, படிப்பு முடிந்ததற்கான விழாக்கள் [11]
நூல் 2. இல்லறத்தானின் வாழ்க்கை முறை (ஆபஸ்தம்ப கல்ப சூத்திரம் நூல் 29)
2.1.1-2.14.20 திருமணம், சடங்குகள், பாலியல் உறவு, உணவு, விருந்தோம்பல், பள்ளிக்கூடத்திற்கு பிந்தைய படிப்புகள், தானம், சட்டபூர்வமான தொழில்கள், மறு திருமணம், குழந்தைகளை பராமரித்தல், மகன்கள்/மகளின் பொறுப்புகள், வாரிசுரிமை [12]
2.15.1-2.20.23 குடும்ப பழக்கங்கள், வட்டாரப் பழக்கங்கள், குடும்பத்தில் இறப்பு, இறந்த முன்னோருக்க்கு செய்ய வேண்டிய கடமைகள், மாதந்திர தர்ப்பணங்கள் [13]
2.21.1-2.24.14 வாழ்க்கையின் 4 படிநிலைகள்:பிரம்மச்சர்யம், கிரகஸ்தம், வானப்பிரஸ்தம், சந்நியாசம் [14]
2.25.1-2.26.17 மன்னர், மன்னரின் கடமைகள், அரசாங்கம், வரி வசூல் முறை, நீதிமுறை [15]
2.26.18-2.29.15 தவறான பாலியல் நடத்தைகள், கற்பழிப்பாக்கான தண்டனை, திருமண பந்தத்திற்கு மீறிய உடலுறவுகள், இறந்த கணவனின் சகோதரனை மணத்தல் விதிகள், குற்றங்களும் தண்டனைகளும், சொத்துரிமை, நீதிமன்ற நடைமுறைகள், சாட்சி & சாட்சியங்களுக்கான விதிகள், சட்டங்கள் தொடர்பாக இறுதி முடிவு எடுத்தல் [16][17]

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Patrick Olivelle 2006, ப. 178 with note 28.
  2. 2.0 2.1 2.2 2.3 Robert Lingat 1973, ப. 20.
  3. Patrick Olivelle 1999, ப. xxvi-xxvii with note 5.
  4. Patrick Olivelle 1999, ப. 17.
  5. Patrick Olivelle 1999, ப. 70.
  6. Robert Lingat 1973, ப. 22.
  7. Patrick Olivelle 1999, ப. xxxi.
  8. Patrick Olivelle 1999, ப. 7.
  9. Patrick Olivelle 1999, ப. 7-16.
  10. Patrick Olivelle 1999, ப. 16-31.
  11. Patrick Olivelle 1999, ப. 31-43.
  12. Patrick Olivelle 1999, ப. 43-58.
  13. Patrick Olivelle 1999, ப. 58-65.
  14. Patrick Olivelle 1999, ப. 65-68.
  15. Patrick Olivelle 1999, ப. 68-70.
  16. Patrick Olivelle 1999, ப. 70-73.
  17. Ludo Rocher 2014, ப. 361-386.

உசாத்துணை

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆபஸ்தம்ப_தர்மசூத்திரம்&oldid=3872705" இலிருந்து மீள்விக்கப்பட்டது