சந்தஸ்
Appearance
தொடரின் ஒரு பகுதி |
இந்து புனித நூல்கள் |
---|
சந்தஸ் வேதாங்கங்களின் மூன்றாவது உறுப்பாகும். இது வேதத்தின் பாதமாக கருதப்படுகிறது. தமிழில் யாப்பிலக்கணம் என்பதே சமசுகிருத மொழியில் சந்தஸ் எனப்படும். சீக்ஷா சரியான உச்சரிப்புக்கான விதிமுறைகளைத் தொகுக்கிறது, வியாகரணம் அக்ஷரங்களின் (எழுத்துக்களின்) பொருத்தத்தைத் தீர்மானிக்கிறது, சந்தஸ் வேத மந்திரப் பிரயோகத்தின் ஒட்டுமொத்த ஒலி வடிவம் குலைவற்ற ஒழுங்கு கொண்டிருக்க உதவுகிறது. இவ்வகையில் வேத ஒலிகள் மற்றும் மந்திரங்களை சந்தஸ் காப்பாற்றிக் கொடுப்பதாகச் சொல்லலாம். வேத மந்திரங்களைத் தவறாக உச்சரிப்பது விரும்பத்தகாத எதிர்மறை விளைவுகளை அளிப்பது போலவே, மந்திரங்களில் உள்ள எழுத்துக்களை (அட்சரங்களை) கூட்டுவதும் குறைப்பதும் பிழையாக அமையும். சந்தஸ் குறித்த நூல்களில் பிங்கலரின் சந்தஸ் சாஸ்திரமே புகழ் பெற்றதாகும். [1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ http://www.kamakoti.org/tamil/Kural83.htm சந்தஸ் : வேதத்தின் பாதம்]