சம்ஹிதைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

சம்ஹிதைகள் ஒரு வகை இந்து சமய நூல்கள் ஆகும். இவற்றின் துணையால் அக்கால மக்களின் அரசியல், பொருளாதார, சமூக, சமய வாழ்க்கை முறைகளை அறிய முடிகிறது. ஒவ்வொரு வேதத்திற்கும் தனித்தனியே சம்ஹிதைகள் உள்ளன. இவற்றுள் ரிக் வேத சம்ஹிதைகள் மிகப் பழமையானவை. ரிக் வேத சம்ஹிதையைக் கொண்டு முற்கால வேத கால பண்பாட்டை விரிவாக அறியலாம். பிற வேதங்களின் சம்ஹிதைகள் வாயிலாக பிற்கால வேதகால மக்களின் வாழ்க்கை நிலை மற்றும் பண்பாட்டுச் சிறப்பினை அறியலாம்.

சம்ஹிதைகள் என்பன துதிப்பாடல்கள், வழிபாட்டு முறைகள், வேள்விகளுக்கான சூத்திரங்கள், ஆகியவற்றைக் கொண்ட தொகுப்பாகும். வேள்விக் காலங்களில் இவை முழுமையாக பயன்பட்டன. அதர்வண வேத சம்ஹிதை மட்டும் பில்லி, சூனியம், பிசாசு, மந்திரக் கட்டு என்பனவற்றைக் கூறுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சம்ஹிதைகள்&oldid=1962403" இருந்து மீள்விக்கப்பட்டது