வியாகரணம்
Appearance
தொடரின் ஒரு பகுதி |
இந்து புனித நூல்கள் |
---|
வியாகரணம் வேதாங்கங்களின் இரண்டாம் உறுப்பான வியாகரணம் இலக்கண விதிகள் வகுத்தளிக்கிறது. வியாகரணம் வேதத்தின் வாய் என்று கருதப்படுகிறது. பரம்பொருள் சொரூபங்களில் மிக முக்கியமானது ஒலி வடிவே. சீக்ஷையும் வியாகரணமும் ஒலி வடிவை மேம்பட்ட, தெளிவான வகையில் உணர உதவுகிறது. வியாகரணங்களில் பாணினியின் இயற்றிய அஷ்டாத்தியாயீ எனும் இலக்கண நூலே மிகப் பரவலாய் அறியப்பட்டுள்ளது. நடராஜர் நடனம் செய்தபோது, அவரது உடுக்கையிலிருந்து கிளம்பிய 14 சூத்திரங்களை ஆதாரமாகக் கொண்டு, பாணினி அவற்றை எட்டு அத்தியாயங்களாக எழுதினார். காத்யாயனர் என்பவர் அதற்கு ஒரு அமைப்பினை வகுத்தார். அதற்கு பதஞ்சலி முனிவர் மற்றும் பலராலும் விளக்கவுரைகள் இயற்றப்பட்டிருக்கின்றன.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ http://www.sangatham.com/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D