சூத்திரம்
சூத்திரம் என்னும் சொல் இலக்கண நூலிலுள்ள பாடலைக் குறிக்கும். இதனை நூற்பா என வழங்குகிறோம்.
நூல் என்னும் சொல் இலக்கண நூலை மட்டும் குறிக்கும்.[1] நூலில் உள்ள பாடல்கள் நூற்பா. சூத்திரம் என்னும் சொல்லைத் தமிழ்ச்சொல் எனலாம். [2]
சூத்திரம் சில எழுத்துக்களால் இயன்று செய்யுள் நடையில் இருக்கும். விரிவாகச் சொல்லவேண்டிய உரையை உள்ளே அடக்கிக்கொண்டிருக்கும். நுட்பமும் ஒட்பமும் கொண்டிருக்கும். அசைக்க முடியாத உண்மைகளைக் கூறும். அளக்க முடியாத அரும்பொருளைக் கொண்டிருக்கும். பலவகையான பயன்களை மொழிக்கு நல்கும். [3] கண்ணாடி நிழல்போல் மொழியின் இயல்பை உள்ளபடியே வெளிப்படுத்தும். [4] மொழிச் செய்திகளை விடுபடாமல் கூறும். காரணம் காட்டியும் எடுத்துக்காட்டுகள் தந்தும் விரித்துரைக்கும். [5] சூத்திரத்தில் சொல்லப்படுவதைக் காட்டுவது காண்டிகை-உரை. [6] சூத்திரம் வெளிப்படையாகச் சொல்லாமல் குறிப்பால் உணர்த்தும் செய்திகளும் உண்டு. (விருத்தி)உரை இதனை வெளிப்படுத்தும். [7]
கருவிநூல்
[தொகு]- தொல்காப்பியம் மூலம்
அடிக்குறிப்பு
[தொகு]- ↑ தொல்காப்பியம் மரபியல் 100, 101
- ↑ சூத்திரம் என்பதையும் தமிழ்ச்சொல்லாகக் கொள்ளலாம். 'இரம்' என்னும் பின்னொட்டு தமிழில் பழமையானதே. ஆயிரம். பாயிரம் போன்ற சொற்களில் அவற்றைக் காணலாம். கோத்து இருப்பது கோத்திரம், ஆர்த்து வருவது ஆத்திரம் ஆத்திரத்தை அடக்கினாலும் மூத்திரத்தை அடக்க முடியாது – என முண்டிக்கொண்டு மூர்த்து வருவது மூத்திரம். இவற்றைப் போலச் சூழ்ந்து, சூழ்த்து வருவது சூழ்த்திரம் > சூத்திரம்
- ↑ தொல்காப்பியம் மரபியல் 102
- ↑ தொல்காப்பியம் செய்யுளியல் 102
- ↑ தொல்காப்பியம் மரபியல் 104
- ↑ தொல்காப்பியம் மரபியல் 103
- ↑ தொல்காப்பியம் மரபியல் 105