உள்ளடக்கத்துக்குச் செல்

கேன உபநிடதம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கேன உபநிடதம்சாமவேதத்தில் அமைந்துள்ள இந்த உபநிடதம் ”கேன” என துவங்குவதால் இதற்கு கேன உபநிடதம் என்று பெயர் ஆயிற்று. ’கேன’ என்பதற்கு சமஸ்கிருதத்தில் ’கேள்வி’ என்று பொருள். இவ்வுபநிடதம் கேள்வியுடன் துவங்குவதால் இதற்கு கேன உபநிடதம் பெயராயிற்று. இந்த உபநிடதம் 35 மந்திரங்களுடன், நான்கு பகுதிகள் கொண்டது. இந்த உபநிடதத்திற்கு ஆதிசங்கரர், மத்வர் ஆகிய மகான்கள் விளக்க உரை எழுதி உள்ளனர்.[1].[2]

சாந்தி மந்திர விளக்கம்

[தொகு]

எனது உடல் உறுப்புக்கள் ஆற்றல் பெறட்டும்.வாக்கு, பிராணன், கண், செவி, மற்றும் அனைத்து உடல் உறுப்புகளும் ஆற்றல் பெறட்டும். உபநிடதங்களால் மட்டும் அறியப்படும் பிரம்மம் அனனத்துமாக உள்ளது. நான் பிரம்மத்தை மறுக்காமல் இருப்பேனாக. பிரம்மம் என்னை மறுக்காமல் இருப்பாராக. அந்த ஆத்மாவை அறியும் வழியில் முழு ஈடுபாடுடைய என்னிடத்தில் உபநிடதங்களில் கூறப்பட்டுள்ள தகுதிகள் எவையோ அவைகள் என்னிடத்தில் இருக்கட்டும். ஓம் சாந்தி சாந்தி சாந்தி.

உபநிடத சாரம்

[தொகு]

உடல் எப்படி சடமோ, அதுபோல் மாற்றத்தை அடைந்து கொண்டிருக்கும் மனமும் சடம் என உணர்ந்து, இவற்றுக்கு வேறான , மாறாத, நிலையான மெய்ப்பொருள் உள்ளதா? என்ற சீடனின் கேள்வியுடன் இவ்வுபநிடதம் துவங்குகிறது.

அதற்கு குருவின் பதில்: எந்த பொருளை, வாக்கு, மனம், கண்கள் முதலியவைகளை விளக்காதோ, ஆனால் எந்த மெய்ப்பொருளால் மனம், பொருள், வாக்கு முதலியவைகளை விளக்குகின்றனவோ, அந்த மெய்ப்பொருளான பிரம்ம தத்துவத்தை அறிந்துகொள் என்று சீவனும் - பரமாத்மாவும் ஒன்றே (ஐக்கியம்) தத்துவத்தை கூறி , இதுவரை நீ எவற்றை வழிபட்டு வந்தாயோ, அவை அனைத்தும் உனக்கு உதவிய படிகளே தவிர மெய்ப்பொருள் அல்ல என்று உபதேசம் செய்கிறார்.

குருவின் அறிவுரையை புரிந்துகொண்ட சீடன், நான் பிரம்மத்தை அறிந்தும் உள்ளேன், அதே நேரத்தில் அறியவும் இல்லை. இதை யார் உணர்கிறார்களோ அவர்களே உண்மையை உணர்கிறார்கள். பிரம்ம தத்துவத்தை ஒரு பொருளாக அறியவில்லை. அந்த மெய்ப்பொருள் நானே என்று உணர்ந்துள்ளேன் என்று கூறினான்.

பிரம்மத்தை ஒரு பொருளாக அறிந்தவர்கள் உண்மையில் பிரம்மத்தை அறியவில்லை. பிரம்மத்தை பொருளாக அறியாதவர்கள் பிரம்மத்தை அறிகிறார்கள். எல்லா சீவராசிகளுக்குள்ளும், தீரர்கள்தான் இந்த பிரம்மத்தை அறிந்து, அகங்காரம், மமகாரத்திலிருந்தும் விலகி மரணமற்ற மேலான சீவ முக்தி நிலையை அடைகிறார்கள். புலனடக்கம், கர்ம யோகம், வாய்மை ஆகிய வழிகள் மூலம் பிரம்ம ஞானத்தை அடையலாம். மேலும் இந்த ஞானத்தின் பலனாக ஒருவன் மேலான சீவ முக்தி மற்றும் விதேக முக்தி அடைகிறான்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. https://ia700704.us.archive.org/14/items/UpanishadsTamil/03_Kena_Upanishad.pdf
  2. https://archive.org/details/EssenceOfKenaUpanishad

உசாத்துணை

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கேன_உபநிடதம்&oldid=3913602" இலிருந்து மீள்விக்கப்பட்டது