அர்த்தசாஸ்திரம்
தொடரின் ஒரு பகுதி |
இந்து புனித நூல்கள் |
---|
அர்த்தசாஸ்திரம் என்பது பண்டைய இந்திய நூலாகும். அது அரசாட்சி முறை, பொருளாதாரக் கொள்கை மற்றும் இராணுவ செயல்தந்திரம் போன்றவற்றைப் பற்றிக் கூறுகிறது. அதன் ஆசிரியராக கௌடில்யர்[1],விசுணுகுப்தர்,[2] ஆகிய பெயர்களைக் கொண்ட சாணக்கியர் என்பவர் அடையாளம் கொள்ளப்படுகிறார். (பொ.ஊ.மு. 350-283 வருடங்கள்).[3] அவர் முதலில் தட்சசீல பல்கலைகழகத்தில் ஓர் அறிஞராக இருந்தார். பின்னர் மௌரியப் பேரரசின் பிரதமராகப் பதவி வகித்தார்.
காலமும் நூலாசிரியரும்
[தொகு]விசுணுகுப்தர் அல்லது கௌடில்யர் என்பவரை மௌரிய அமைச்சரான சாணக்கியருடன் ஒப்பிடுவது அர்த்தசாஸ்திரத்தை பொ.ஊ.மு. நான்காம் நூற்றாண்டு காலத்தோடு தொடர்புபடுத்தும்.[4][5]
நூலானது 12 ஆம் நூற்றாண்டுவரை செல்வாக்குடன் நிலைத்திருந்தது; அப்போது முதல் மறைந்துவிட்டது. 1904 ஆம் ஆண்டில் ஆர். ஷாமாசாஸ்திரியால் கண்டெடுக்கப்பட்டது. அதனை அவர் 1909 ஆம் ஆண்டில் பதிப்பித்தார். 1915 ஆம் ஆண்டில் அதன் முதல் ஆங்கில மொழியாக்கத்தையும் பதிப்பித்தார்.[6]
தலைப்பின் மொழியாக்கம்
[தொகு]வேறுபட்ட அறிஞர்கள் "அர்த்தசாஸ்திரம்" எனும் சொல்லை பல்வேறான வழிகளில் மொழியாக்கம் செய்துள்ளனர்.
- ஆர்.பி. காங்ளே – "அரசியல் அறிவியல்" அரசனுக்கு "பூமியைக் கைக்கொள்ளவும் காப்பாற்றவும் உதவும் ஒரு நூல்".[7]
- ஏ.எல். பாஷம் – "நிர்வாகமுறைப்பற்றிய நூல்"[8]
- டி.டி. கோசாம்பி – "பொருள் ஆதாயத்திற்கான அறிவியல்"[8]
- ஜி.பி. சிங் – "நிர்வாகமுறை அறிவியல்"[8]
- ரோஜர் போஷ்ச் – "அரசியல் பொருளாதாரத்தின் அறிவியல்"[8]
ரோஜர் போஷ்ச் அர்த்தசாஸ்திரத்தை " ஒரு அரசியல் நடைமுறைப் புத்தகம், அரசியல் உலகம் எவ்வாறு வேலை செய்கிறது என்பதை ஆராயும் ஒரு புத்தகம், மேலும் அரசியல் உலகம் எவ்வாறு வேலை செய்ய வேண்டும் என்பதை பலமுறை சொல்லாத புத்தகம், அரசனுக்கு எவ்வாறு திட்டமிட்டு செயலாற்றுவது என்பதை அடிக்கடி வெளிக்காட்டும் ஒரு புத்தகம், சில நேரங்களில் அரசைக் காப்பாற்றவும் பொது நலத்தைப் பேணவும் கொடுமையான வழிமுறைகளை அவன் கைக்கொள்ள வேண்டும் எனப் போதிக்கும் ஒரு புத்தகம்," என்று விவரிக்கிறார்.[9]
மையமாக, அர்த்தசாஸ்திரம் திறமையான மற்றும் உறுதியான பொருளாதாரத்தை நிர்வகிக்க சர்வாதிகார அமைப்பு ஒன்றிற்காக வாதிடுகிறது. அது பொருளிலியலின் அறநெறிகளை விவாதிக்கிறது. அத்தோடு அரசனின் கடமைகளையும் பொறுப்புகளையும் விவாதிக்கிறது.[10] இருப்பினும், அர்த்தசாஸ்திரத்தின் நோக்கம் ஆட்சிக் கலையை விட பரந்தகன்றது. அது ஓர் இராச்சியத்தை நிர்வகிப்பதற்கான முழுமையான சட்ட மற்றும் அதிகார இனத்திற்குரிய வரைச்சட்டங்களின் சுருக்கத்தையும் அளிக்கிறது. அத்துடன் கனிம இயல், சுரங்கம் மற்றும் உலோகங்கள், வேளாண்மை, பிராணி வளர்ப்பு, மருத்துவம் மற்றும் காட்டு விலங்குகளின் பயன்பாடு போன்ற தலைப்புக்களில் கலைச் சார்ந்த விவரங்களை பொருள் வளத்துடன் விரிவாகக் கொண்டுள்ளது.[11] அர்த்தசாஸ்திரம் நலப் பொருளாதாரம் சார்ந்த விஷயங்களிலும் (ஒரு உதாரணத்திற்கு, பஞ்சத்தின் போது செல்வத்தை மறு விநியோகிப்பது போன்றது) சமூகத்தை ஒன்றிணைத்து வைக்கும் பொதுவான அறநெறிகளின் மீதும் கூட கவனம் குவிக்கிறது.
மாக்கிவெல்லியுடன் ஒப்பீடு
[தொகு]அதன் கடுமையான அரசியல் கொள்கைப் பிடிப்பால் அர்த்தசாஸ்திரம் பலமுறை மாக்கிவெல்லியின் தி பிரின்ஸ் எனும் நூலுடன் ஒப்பிடப்படுகிறது.
Is there any other book that talks so openly about when using violence is justified? When assassinating an enemy is useful? When killing domestic opponents is wise? How one uses secret agents? When one needs to sacrifice one's own secret agent? How the king can use women and children as spies and even assassins? When a nation should violate a treaty and invade its neighbor? Kautilya — and to my knowledge only Kautilya — addresses all those questions. In what cases must a king spy on his own people? How should a king test his ministers, even his own family members, to see if they are worthy of trust? When must a king kill a prince, his own son, who is heir to the throne? How does one protect a king from poison? What precautions must a king take against assassination by one's own wife? When is it appropriate to arrest a troublemaker on suspicion alone? When is torture justified? At some point, every reader wonders: Is there not one question that Kautilya found immoral, too terrible to ask in a book? No, not one. And this is what brings a frightful chill. But this is also why Kautilya was the first great, unrelenting political realist.
— [12]
ஆகையால், மாக்ஸ் வெபர் இவ்வாறு கருத்துரையாய்க் கூறினார்
Truly radical 'Machiavellianism', in the popular sense of that word, is classically expressed in Indian literature in the Arthasastra of Kautilya (written long before the birth of Christ, ostensibly in the time of Chandragupta): compared to it, Machiavelli’s The Prince is harmless.
— Max Weber, Politics as a Vocation (1919)[13]
இருப்பினும், வழக்கமான மதிப்பீடுகளையும் கடந்து படைப்பின் நோக்கம் விரிவானது. அதனுள் ஏழைகள், அடிமைகள் மற்றும் பெண்கள் மீது இரக்க உணர்ச்சியையும் கூடக் காண இயலும். ஓர் எடுத்துக்காட்டாக, கௌடில்யர் நிலச் சீர்த்திருத்தம் என அறியப்பட்ட ஒன்றிற்காக வாதிடுகிறார், மற்ற இடங்களில் பெண் அடிமைகளின் கற்பு பாதுகாப்பிற்கு உறுதியளிக்கிறார்.[14]
அர்த்தசாஸ்திர புத்தகங்கள்
[தொகு]அர்த்தசாஸ்திரம் 15 புத்தகங்களாக பிரிக்கப்பட்டுள்ளது:
- ஒழுங்கு முறைப் பற்றி
- அரசு கண்காணிப்பாளர்களின் கடமைகள்
- சட்டம் பற்றி
- தொல்லைகளைக் களைவது
- அரசவையினரின் நடத்தை
- தனியுரிமை அரசுகளின் தோற்றுவாய்
- ஆறு வழிமுறைக் கொள்கையிñன் முடிவு (அயல் நாட்டு உறவு)
- குற்றங்கள் மற்றும் இன்னல்கள் குறித்து
- படையெடுப்பவரின் செயல்பாடு
- போருடன் தொடர்புடையவை
- கூட்டவைகளின் நடத்தை
- சக்திவாய்ந்த பகைவனைக் குறித்து
- கோட்டையைக் கைப்பற்றுவது குறித்த போர்த்தந்திர வழிமுறைகள்
- இரகசிய வழிமுறைகள்
- ஒரு நூலை எழுதுவதற்கானத் திட்டம்
குலகுரு அல்லது ராஜரிஷி
[தொகு]அர்த்தசாஸ்திரம் ஒரு அறிவார்ந்த மற்றும் நற்றிறம் வாய்ந்த அரசனின் குலகுருவிற்குத் தேவைப்படும் தகுதிகள் மற்றும் தற்கட்டுப்பாடுகள் ஆகியவற்றைப் பற்றி விரிவாகக் கூறுகிறது.
- "அரசனின் மகிழ்ச்சி குடிகளின் மகிழ்ச்சியில் உள்ளடங்கியுள்ளது, அவனது நலம் அவர்களின் நலத்துடன் பொருந்தியுள்ளது. அவன் தனக்கு திருப்தியளிக்கக்கூடிய ஒன்றை மட்டும் நல்லதென்று கருதக்கூடாது ஆனால் குடிகளுக்கு எது திருப்தியளிக்கக்கூடுமோ அதை அவனுக்குச் நன்மையளிப்பதாகக் கருத வேண்டும் " - கௌடில்யர்.
கௌடில்யருக்கு இணங்க குலகுரு என்பவர்:
- சுயக் கட்டுப்பாடுடையவர், புலன்களின் சாதகமற்றத் தூண்டுதல்களை வென்றவர்.
- பெரியோருடன் இணைவது மூலம் அறிவினைப் சேகரிப்பவர்.
- ஒற்றர் மூலம் தனது மனக்கண்களைத் திறந்து வைத்துள்ளவர்.
- மக்களின் பாதுகாப்பு மற்றும் நலனை மேம்படுத்துவதில் எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பவர்.
- மக்கள் தங்களது அறங்களைப் பின்பற்றுவதை அதிகாரத்தின் மூலமும் உதாரணங்கள் மூலமும் உறுதியாக்குபவர்.
- தனது சொந்த கல்விப் புலத்தை தனது தொடர்ச்சியான கற்றலின் மூலம் அனைத்து அறிவுப் பிரிவுகளிலும் மேம்படுத்திக் கொள்பவர் மற்றும்
- தனது மக்களிடம் தன்னை விருப்பமுள்ளவராக அவர்களை செல்வச் செழிப்பாக்குவதன் மூலமும் அவர்களுக்கு நல்லது செய்வது மூலமும் ஆக்கிக்கொள்பவர்.
ஒழுக்கமுடைய அரசன் ஒருவன்:
- மாற்றான் மனைவியினரின் உறவை விலக்க வேண்டும்.
- மாற்றானின் சொத்திற்கு துராசை கொள்ளக் கூடாது.
- அகிம்சையைக் கடைபிடிக்க வேண்டும் (அனைத்து உயிரினங்களிடமும் வன்முறையைக் கைக் கொள்ளாமை).
- பகல் கனவு காணல், மனம் போன போக்கில் செயல்படுவது, வஞ்சகம் மற்றும் ஊதாரித்தனம் ஆகியவற்றைத் தவிர்த்தல்
- தீங்கிழைக்கும் நபர்களுடன் இணைதலைத் தவிர்த்தல் மற்றும் தீங்கான செயல்களில் ஈடுபடலைத் தவிர்த்தல் ஆகியவற்றைக் கொண்டவன் ஆவான்.
கௌடில்யர் அர்த்தம் (வலுவான பொருளாதாரங்கள்) என்பதே மிக அவசியமானது; அதனைச் சார்ந்தே தர்மம் மற்றும் காமம் ஆகிய இரண்டும் உள்ளது என்கிறார். குலகுருவானவர் நன் நடத்தையின் விளிம்புகளை கடப்பதைப் பற்றி எச்சரிக்கைச் செய்யும் அரசவை உறுப்பினர்கள் மற்றும் புரோகிதர்கள் ஆகியோரை எப்போதும் மதிக்க வேண்டும். அவர்கள் குலகுருவை செயலூக்கம் செய்யும் பொருட்டு பல்வேறு கடன்களுக்காகப் பரிந்துரைக்கப்பட்ட நேரங்களைத் தெளிவாக நினைவுபடுத்துவர். அவர்கள் குலகுரு தனிப்பட்டமுறையில் தவறிழைத்தாலும் அவரை எச்சரிப்பர்.
அரசனின் கடமைகள்
[தொகு]அரசன் ஆற்றலுயுடையவனாக இருப்பின் குடிகளும் அதே அளவிற்கு ஆற்றலுடையவராக இருப்பர். அவன் மந்தமாக இருப்பின் (மற்றும் அவன் கடமையில் சோம்பலாக இருந்தால்) குடிகளும் கூட தளர்ச்சியுடனிருந்து அதன் மூலம் அவனது செல்வத்தை உண்டு வாழ்வர். அது தவிர, ஒரு சோம்பல் அரசன் எளிதாக பகைவரிடம் வீழ்வான். ஆகையால், குலகுரு தன்னை ஆற்றலுடையவராக வைத்திருக்க வேண்டும். அரசன் பகல் இரவு ஆகிய ஒவ்வொன்றையும் ஒன்றரை மணி நேரமுடைய எட்டுப் பருவங்களாகப் பிரித்துக் கொண்டு அவனது கடமைகளைக் கீழ்க் கண்டவாறு நிகழ்த்த வேண்டும்:
ஞாயிறு உதித்தப் பிறகான முதல் 1½ மணி நேரங்களில் | பாதுகாப்பு, வருவாய் மற்றும் செலவினம் பற்றிய அறிக்கைகளைப் பெற வேண்டும். |
ஞாயிறு உதித்தப் பிறகான இரண்டாம் 1½ மணி நேரங்களில் | பொது மக்களைக் காணுதல், நகர மற்றும் நாட்டு மக்களிடம் குறைகளைக் கேட்டல் |
ஞாயிறு உதித்தப் பிறகான 1½ மணி நேரங்கள் மற்றும் நண்பகலிற்கு முந்தைய கடைசி 1½ மணி நேரங்கள் | வருவாய்களையும் கப்பம் மற்றும் திறைகளையும் பெறுதல். அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளை நியமித்தல். அவர்களுக்கு பணி ஒதுக்கீடு செய்தல் |
நண்பகலுக்குப் பிறகான முதல் 1½ மணி நேரங்கள் | கடிதம் எழுதுதல் மற்றும் அனுப்புதல். அரசவை உறுப்பினருடன் கலந்தாலோசித்தல், ஒற்றர்கள் மூலம் இரகசியத் தகவல்களைப் பெறுதல் |
நண்பகலுக்குப் பிறகான இரண்டாம் 1½ மணி நேரங்கள் | அரசனின் தனிப்பட்ட நேரம்; மனமகிழ மற்றும் ஆழ்ந்து சிந்திப்பதற்கான நேரம். |
நண்பகலுக்குப் பிறகான மூன்றாம் 1½ மணி நேரங்கள் மற்றும் ஞாயிறு மறைவதற்கு முன்னதான 1½ மணி நேரங்கள் | படைகளை மேற்பார்வையிடுதல் மற்றும் மீள்பார்வை செய்தல். தளபதியுடன் ஆலோசித்தல் |
நாள் பொழுது மாலை இறை வணக்கங்களுடன் முடிவடைய வேண்டும்.
ஞாயிறு மறைந்தப் பின்னரான முதல் 1½ மணி நேரங்கள் | உளவாளிகளுடன் நேர்முகம் |
ஞாயிறு மறைந்தப் பிறகான இரண்டாம் 1½ மணி நேரங்கள் | அரசனின் தனிப்பட்ட நேரம்; குளிக்க, உணவருந்த மற்றும் வாசிக்கும் நேரம். |
ஞாயிறு மறைந்தப் பிறகான மூன்றாம் மற்றும் நான்காம் 1½ மணி நேரங்கள் மற்றும் நள்ளிரவிற்குப் பிறகான முதல் 1½ மணி நேரங்கள் | படுக்கையறைக்குத் திரும்பி இசை ஒலிகளைக் கேட்டபடி உறங்கப் போதல் |
நள்ளிரவிற்குப் பிறகான இரண்டாம் 1½ மணி நேரங்கள் | இசையின் ஒலி கேட்டு எழுந்தப் பிறகு, அரசியல் மற்றும் செய்ய வேண்டிய பணிகள் குறித்து ஆழ்ந்து சிந்தித்தல் |
நள்ளிரவிற்குப் பிறகான மூன்றாம் 1½ மணி நேரங்கள் | அரசவை உறுப்பினர்களுடன் ஆலோசித்தல், ஒற்றர்களை அனுப்புதல் |
ஞாயிறு எழுவதற்கு முந்தைய கடைசி 1½ மணி நேரங்கள் | மதம் சார்ந்த, இல்லம் சார்ந்த மற்றும் தனிப்பட்டக் கடமைகளைச் செய்தல். குருவைச் சந்தித்தல், சடங்கு ஆலோசகரைச் சந்தித்தல், புரோகிதர்களைச் சந்தித்தல், தனிப்பட்ட மருத்துவரைச் சந்தித்தல், தலைமை சமையற்காரர் மற்றும் ஆரூடக்காரரைச் சந்தித்தல். |
இத்தகைய அல்லது அரசருக்குப் பொருந்தும் வேறு ஏதேனும் நிகழ்ச்சி நிரலைக் கைக்கொள்ளலாம்.
ஆகையால், அரசர் எப்போதும் பொருளாதாரத்தை நிர்வகிப்பதில் சுறுசுறுப்புடன் இருப்பார். செல்வத்தின் வேர் (பொருளாதார) நடவடிக்கையாகும் மற்றும் அது இல்லாமலிருப்பது பொருளின் கொடுவறுமையைத் கொண்டுத் தரும். நடவடிக்கை ஏதுமற்றிருப்பது (நன்மையளிக்கும் பொருளாதார நடவடிக்கை) தற்போதைய செழிப்பு மற்றும் எதிர்கால வளர்ச்சி ஆகிய இரண்டையும் அழிக்கும். அரசன் விரும்பிய நோக்கங்களையும் ஏராளமான செல்வச் செழிப்பையும் (பலனளிக்கிற) பொருளாதார நடவடிக்கையை மேற்கொள்வதன் மூலம் அடைய முடியும்.
உயர் செயல் திட்டமுள்ள ஓர் அரசன் என்பவன் உயர்ந்தபட்ச தகுதிகளாக தலைமைப்பண்பு, அறிவாற்றல், உடலாற்றல் மற்றும் அந்தரங்க தனியியல்புகளைக் கொண்டவன் ஆவான்.
தலைமைப் பண்பின் தகுதிகள் (பின்பற்றுபவர்களை ஈர்ப்பது) என்பன: பிரபுக் குலத்தில் பிறந்திருப்பது, செல்வ வளத்துடன் இருப்பது, அறிவாற்றல் மற்றும் வீரத்தைக் கொண்டிருத்தல், பெரியோர்களுடன் இணைந்திருப்பது, நேர்மையுடன், உண்மையுடன், மன உறுதிமிக்க, ஆர்வம் நிறைந்த மற்றும் நல்லொழுக்கத்துடன் கூடியிருத்தல், நன்றி காட்டுவது (அவனுக்கு உதவுபவர்க்கு), மேம்பட்ட நோக்கங்களை வைத்திருப்பது, காலங்கடத்தாமலிருப்பது, அண்டை தேசத்து அரசர்களை விட வலுவாக இருத்தல் மற்றும் உயர் தகுதியுடைய அமைச்சர்களைக் கொண்டிருப்பது ஆகியனவாகும்.
அறிவின் தகுதிகள் என்பன: கற்பதில் ஆர்வம், பிறர்க் கூறுவதைக் கேட்டல், புரிந்துகொள்ளுதல், தக்கவைத்துக் கொள்தல், முழுமையாக புரிந்து கொள்ளல் மற்றும் அறிவைப் பிரதிபலித்தல், தவறானப் பார்வைகளை நிராகரித்தல் மற்றும் உண்மையான ஒன்றைக் கடைப்பிடிப்பது ஆகியனவாகும். ஆற்றலுடைய அரசன் என்பவன் வீரத்துடனும், உறுதிகொண்டவனாகவும், விரைவாக முடிவெடுப்பவனாகவும் செயற்திறம் வாய்ந்தவனாகவும் இருப்பவன் ஆவான். அந்தரங்கமான சிறப்பியல்புகளில் ஓர் உயர் செயல் திட்டமுள்ள அரசன் என்பவன், பேச்சுத் திறன் உள்ளவனாகவும், வெளிப்படைத்தன்மை மற்றும் கூரான அறிவுத் திறனைக் கொடையாகக் கொண்டவனாகவும், வலுவான நினைவாற்றல் மற்றும் நுண்ணர்வுள்ள புரிந்து கொள்ளும் திறனும் கொண்டவனாக இருத்தல் வேண்டும். அவன் வழிகாட்டுதலுக்கு இணங்கக்கூடியவனாக இருக்க வேண்டும். அவன் அனைத்துக் கலைகளிலும் நற்பயிற்சியினைக் கொண்டிருக்க வேண்டும் மேலும் இராணுவத்தை வழிநடத்தக் கூடியவனாக இருத்தல் வேண்டும். அவன் பரிசளிப்பதிலும் தண்டிப்பதிலும் நியாயத்துடன் இருக்க வேண்டும். அவன் சரியான நேரம், இடம் மற்றும் பொருத்தமான செயல் ஆகியவற்றால் (தேர்வு செய்து) சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தி தன்னைப் பயனடையச் செய்யும் முன் நோக்கும் திறனைக் கொண்டிருக்க வேண்டும். அவன் சாதாரண மற்றும் கடுஞ்சிக்கலான நேரம் ஆகியவற்றில் எவ்வாறு நிர்வாகம் செய்ய வேண்டும் என்பதை அறிந்திருக்க வேண்டும். அவன் எப்போது சண்டையிட, சமாதானம் செய்ய, காத்திருக்கச் செய்ய, உடன்படிக்கைச் செய்ய மற்றும் பகைவனின் பலவீனத்தைத் தாக்கச் செய்ய வேண்டும் என்பதை அறிந்திருக்க வேண்டும். அவன் தனது கண்ணியத்தை எக்காலத்திற்கும் பராமரிக்க வேண்டும். கண்ணியமற்ற முறையில் நகைக்கக் கூடாது. அவன் இனிமையாக பேச வேண்டும், மக்களை நேர்க் கொண்டு காண வேண்டும். அச்சுறுத்துகிற தோற்றத்தைத் தவிர்க்க வேண்டும். அவன் காமம், கோபம், பொறாமை, மூர்க்கத்தனம், நிலையற்றத்தன்மை மற்றும் புறங்கூறுதல் ஆகியவற்றை விலக்கியிருக்க வேண்டும். அவன் பெரியோர்களது ஆலோசனைப்படி தன்னை நடத்திக் கொள்வதற்கு இணங்க வேண்டும்.
உள்நாட்டு சண்டை
[தொகு]கௌடில்யர் கூறுகிறார் : மக்களின் மத்தியில் காணப்படும் மோதல்கள் தலைவர்களை வெற்றி கொள்வதன் மூலம் தீர்க்கப்படலாம் அல்லது மோதலின் காரணத்தை நீக்குவதன் மூலம் தீர்க்கப்படலாம். தங்களிடையே போரிடும் மக்கள் அவர்களது பரஸ்பர பகையின் மூலம் அரசனுக்கு உதவுகிறார்கள். வேறொரு வகையில் அரச குடும்பத்தினுள் இருக்கும் (பதவிக்கான) சண்டைகள் தர்மசங்கடத்தைக் கொண்டு வரும் மற்றும் மக்களுக்கு அழிவையும் கொண்டு வரும். மேலும் அத்தகைய சண்டைகளை முடிவுக்கு கொண்டுவர கடுமையான முயற்சிகள் தேவைப்படும். ஆகையால் அரச குடும்பத்தின் அதிகாரச் சண்டை மக்களிடையே காணப்படும் பூசல்களை விட அதிக பாதிப்பினைத் தருவதாகும். அரசன் மதி நுட்பத்தில் கை தேர்ந்தவனாக இருக்க வேண்டும். கணிப்பதில் திறமையுள்ளவனாக இருக்க வேண்டும்.
குற்றங்களைப் பற்றிய திறனாய்வு
[தொகு]குற்றங்கள் அறியாமையாலும் ஒழுங்கின்மையாலும் விளையும் ஒழுக்கக்கேடுகளாகும். கற்காத மனிதன் தனது குற்றங்களினால் ஏற்படும் கெடுதலான விளைவுகளை புரிந்து கொள்ள மாட்டான். கௌடில்யர் சுருக்கமாகக் கூறுகிறார்: பதவிக்குரிய தகுதிகளின் கீழ் சூதாடுதல் அதிக ஆபத்துடையதாகும். குறிப்பாக அரசுரிமையானது பங்கிடப்பட்டு இருக்கும் சூழல்களில் பெரும் ஆபத்தானதாகும். கடுமையான விளைவுகளைக் கொண்ட பெரும் தீங்கு குடிப்பழக்கத்திற்கு அடிமையாதல் ஆகும். அதைத் தொடர்ந்து பெண் மோகம், சூதாடுதல் மற்றும் இறுதியாக வேட்டையாடுதல் ஆகியன இடம் பெறுகின்றன.
எதிர்கால அரசனைப் பயிற்றுவித்தல்
[தொகு]தன் ஒழுக்கத்தின் முக்கியத்துவம் ஒழுக்கம் என்பது இரு வகையானது. ஒன்று உடன் பிறந்தது மற்றொன்று கைக்கொள்ளப்பட்டது. (கீழே கொடுக்கப்பட்டுள்ள காரணங்களுக்காகத் தன் ஒழுக்கத்தினைப் பெறுவதற்கு இயற்கையானத் தகுதி இருக்க வேண்டும்). கற்பித்தல் மற்றும் பயிற்சி ஒழுக்கத்தினால் பயனடையும் தகுதியுடைய நபர்களிடமே ஒழுக்கத்தை மேம்படுத்த இயலச் செய்யும். தன் ஒழுக்கத்தினால் (இயற்கையான) பயனடையும் தகுதியற்ற நபர்கள் பலனடைய மாட்டார்கள். பின்வரும் மன அளவிலான செயல் திறம் உடையவர்களுக்கு மட்டுமே கற்பித்தல் ஒழுக்கத்தை அளிக்கிறது: ஆசிரியருக்கு கீழ்படுதல், கற்பதற்கு ஆசையும் திறனும் இருத்தல், கற்றதைத் தக்க வைக்கும் திறன், கற்றதை புரிந்து கொள்ளும் திறன், அதனை பிரதிபலிக்கும் திறன் (இறுதியில்) கைக்கொள்ளப்பட்ட அறிவைக் கொண்டு ஆழ்ந்து ஊகித்தறியும் திறன். இத்தகைய மன அளவிலான செயல் திறம் சிறிதுமற்றவர்கள் பலனடைவதில்லை (எந்தளவிற்கு பயிற்சி பெற்றாலும்). அரசனாகக்கூடிய ஒருவன் ஒழுக்கத்தினைக் கைக்கொள்ள வேண்டும். மேலும் வாழ்வில் நம்பகமான ஆசிரியர்களிடமிருந்து அறிவியலைக் கற்று அதனைக் கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும்.
இளவரசனைப் பயிற்றுவித்தல்
[தொகு]அவனது தன் ஒழுக்கத்தினை மேம்படுத்த அவன் கற்றறிந்த மூத்தோர்களுடனேயே இணைந்திருக்க வேண்டும், அவர்களிடத்திலேயே ஒழுக்கம் அதன் உறுதியான வேர்களைக் கொண்டுள்ளது. பயிற்சிப் பெற்ற அறிவாளியை யோகா பயிற்சி பின் தொடரும் (வெற்றிகரமாகப் பயன்படுத்தல் மூலம்). யோகாவிலிருந்து தற் கட்டுப்பாடு வருகிறது. இதுவே அறிவினைப் பெறுதலில் திறன் எனும் பொருளில் வழங்கப்படுவதாகும். அறிவுடைய, ஒழுக்கமுடைய, மக்களை நியாயமாக ஆள்வதில் அர்ப்பணித்துக் கொண்ட மற்றும் அனைவரது நலன்களை உணர்ந்த ஓர் அரசன் மட்டுமே புவியில் எதிர்ப்பற்ற நிலையை அனுபவிப்பான்.
அண்டை நாட்டாரை எதிர்கொள்ளச் செய்வதற்கான ஏழு வழிகள்
[தொகு]கௌடில்யர் அண்டை நாட்டாருடன் உறவு கொள்ள ஏழு செயல் தந்திரங்களைச் சந்திர குப்த மௌரியருக்குப் பரிந்துரைத்தார்.[15]
அத்தகைய செயல் தந்திராகளாவன:
- சன்மானம் - அமைதிப்படுத்தல், ஆக்கிரமிப்பு செய்யா உடன்படிக்கை
- தண்டம் - வலு, தண்டனை
- தானம் - அன்பளிப்பு, லஞ்சம்
- பேதம் - பிரித்தல், உடைத்தல் மற்றும் எதிர்ப்பை துண்டாடுதல்
- மாயம் - மாயத் தோற்றம், சூழ்ச்சி
- உபேக்ஷம் - எதிரியைப் புறக்கணித்தல்
- இந்திரஜாலம் - இராணுவ பலத்தைப் பொய்யாய் உருவாக்குதல்[15]
சட்டம் ஒழுங்கைப் பராமரித்தல்
[தொகு]நாட்டின் பொருளாதாரம் தழைத்தோங்க உகந்த சூழல் ஒன்று அவசியம் தேவை. இது நாட்டின் சட்டம் ஒழுங்கு பராமரிக்கப்படுவதைத் தேவைப்படுத்துகிறது. அர்த்தசாஸ்திரம் சட்டங்களைக் கடுமையாக அமலாக்க உதவ அபராதங்களையும் தண்டனைகளையும் குறிப்பிடுகிறது. சட்டத்தை அமல்படுத்தும் அறிவியல் தண்ட நீதி எனவும் கூட அழைக்கப்படுகிறது.
வன உயிரிகளும் வனங்களும்
[தொகு]மௌரியர்களே முதன்முதலில் வனங்களை வள ஆதாரமாகக் கண்டனர். அவர்கட்கு, மிக முக்கிய வன விளைப் பொருள் யானையேயாகும். அக்காலத்தில் இராணுவ வலிமை குதிரைகளையும் காலாட்படைகளையும் மட்டுமே சார்ந்திருக்கவில்லை, போர்க்கள யானைகளையும் கூட சார்ந்துள்ளது. இந்த யானைகள் அலெக்ஸாண்டரின் பஞ்சாப் ஆளுநரான செலுக்கஸ் நிகேடாரை தோற்கடித்ததில் பங்கொன்றினை ஆற்றின. மௌரியர்கள் யானைகளுக்குத் தனியிடம் அமைத்துக் கொடுத்தனர். அவற்றை வளர்ப்பதை விட, யானைகளை பிடிக்க, பழக்க மற்றும் பயிற்சியளிக்க பெரும் நேரச் செலவு, பொருட் செலவு ஏற்படும் எனும் காரணத்தினால் அவ்வாறு செய்தனர். கௌடில்யரின் அர்த்தசாஸ்திரம் வன யானைகளின் காப்பாளர் போன்ற அதிகாரிகளின் பொறுப்புக்களைத் தெளிவாகக் குறிப்பிடுகிறது:[16]
On the border of the forest, he should establish a forest for elephants guarded by foresters. The Superintendent should with the help of guards...protect the elephants whether along on the mountain, along a river, along lakes or in marshy tracts...They should kill anyone slaying an elephant.
— Arthashastra
அர்த்தசாஸ்திரம் மௌரியர்கள் மரத்துண்டுகளின் அளிப்பைக் காப்பாற்றி வர குறிப்பிட்ட வனங்களைப் பெயர் குறிப்பிட்டு வைத்தனர் என்றும்; அதே போல சிங்கங்கள் மற்றும் புலிகளையும் அவற்றின் தோல்களுக்காக வனத்தினை பெயர் குறிப்பிட்டு வைத்தனர் என்றும் கூட வெளிப்படுத்தியது. மற்ற இடங்களில் விலங்குகளின் காப்பாளர்களும் கூட வனத்தில் புல் மேயச் செல்லும் ஆவினங்களைத் திருடர்கள், புலிகள் மற்றும் இதர கொடிய விலங்குகளிடமிருந்து விலக்கி பாதுகாக்க இயங்கினர்.[16]
பொருளாதார யோசனைகள்
[தொகு]அர்த்தசாஸ்திரத்தில் பதிக்கப்பெற்ற பொருளாதார யோசனைகளைப் பற்றிய பூரணமான விவரங்கள் சென் & பாசு[17] ஆகியோரால் தொகுக்கப்பட்ட நூலில், ரத்தன் லால் பாசு[18] மற்றும் பல புகழ்வாய்ந்த அர்த்தசாஸ்திர வல்லுனர்களால் கொடுக்கப்பட்டுள்ளது. இப் புத்தகமானது 1902 ஆம் ஆண்டு இந்தியாவின் மைசூரில் ஓரியண்டல் ரிசர்ச் இன்ஸ்ட்டியூட்டில் (Oriental Research Institute) நடந்த சர்வதேச மாநாட்டில் உலகம் முழுதும் சேர்ந்த கட்டுரையாசிரியர்கள் அளித்த ஆய்வுக் கட்டுரைகளை உள்ளடக்கியுள்ளது. அம் மாநாடு ஆர்.ஷாமாசாஸ்திரியால் அர்த்தசாஸ்திரத்தின் கைப்பிரதி கண்டெடுக்கப்பட்டதின் நூற்றாண்டினைக் கொண்டாட நடத்தப்பட்டதாகும்.
உசாத்துணை
[தொகு]குறிப்புகள்
[தொகு]- ↑ Mabbett, I. W. (April 1964). "The Date of the Arthaśāstra". Journal of the American Oriental Society (Journal of the American Oriental Society, Vol. 84, No. 2) 84 (2): 162–169. doi:10.2307/597102. ISSN 0003-0279. http://jstor.org/stable/597102.
Trautmann, Thomas R. (1971). Kauṭilya and the Arthaśāstra: A Statistical Investigation of the Authorship and Evolution of the Text. Leiden: E.J. Brill. p. 10.while in his character as author of an arthaśāstra he is generally referred to by his gotra name, Kauṭilya.
- ↑ Mabbett 1964
Trautmann 1971:5 "the very last verse of the work...is the unique instance of the personal name Viṣṇugupta rather than the gotra name Kauṭilya in the Arthaśāstra . - ↑ Mabbett 1964 "References to the work in other Sanskrit literature attribute it variously to Viṣṇugupta, Cāṇakya and Kauṭilya. The same individual is meant in each case. The Pańcatantra explicitly identifies சாணக்கியர் with Viṣṇugupta."
- ↑ Mabbett 1964
- ↑ Sihag, Balbir S. "Kautilya on the Scope and Methodology of Accounting, Organizational Design and the Role of Ethics in Ancient India". The Accounting Historians Journal.
- ↑ Boesche 2002, ப. 8
- ↑ Boesche, Roger (January 2003). "Kautilya's Arthaśāstra on War and Diplomacy in Ancient India". The Journal of Military History 67 (1): 9–37. doi:10.1353/jmh.2003.0006. ISSN 0899-3718. https://archive.org/details/sim_journal-of-military-history_2003-01_67_1/page/9.
- ↑ 8.0 8.1 8.2 8.3 Boesche 2003
- ↑ Boesche 2002, ப. 17
- ↑ Sen, R.K. and Basu, R.L. 2006. Economics in Arthasastra . New Delhi: Deep & Deep Publications.
- ↑ Tisdell, C. 2005. Elephants and polity in ancient India as exemplified by Kautilya's Arthasastra (Science of Polity). Working papers in Economics, Ecology and the Environment , No. 120. School of Economics, University of Queensland: Brisbane, Queensland.
- ↑ Boesche|2002|p=1
- ↑ This translation is from Weber: Selections in Translation, ed. W. G. Runciman, trans. Eric Matthews (Cambridge: Cambridge University Press, 1978), pp. 212-25 (p. 220); see also this translation
- ↑ Reading About the World vol. 1. Washington State University. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-15-567425-0.
{{cite book}}
: Invalid|ref=harv
(help); Unknown parameter|editors=
ignored (help) - ↑ 15.0 15.1 "Seven Ways to Greet a Neighbor". AskAsia. 2009. பார்க்கப்பட்ட நாள் 3 May 2009.
- ↑ 16.0 16.1 Rangarajan, M. (2001) India's Wildlife History, pp 7.
- ↑ Raj Kumar Sen & Ratan Lal Basu (eds): Economics in Arthasastra , பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-7629-819-0, Deep& Deep Publications Pvt. Ltd., New Delhi, 2006.
- ↑ Ratan Lal Basu & Raj Kumar Sen, Ancient Indian Economic Thought, Relevance for Today , பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-316-0125-0, Rawat Publications, New Delhi, 2008
நூல் விவரத் தொகுப்பு
[தொகு]- Kautilya Arthashastra, R. P. Kangle, tr. 3 vols. Laurier Books, Motilal, New Delhi (1997) பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-208-0042-7
- Kautilya: The Arthashastra . L.N. Rangarajan (Ed., Rearranger & Translator), 1992, Penguin Classics, India. ஐஎஸ்பிஎன் 0-385-49062-3
- 'Ajnapatra' by Ramchandra Pant Amatya
- Boesche, Roger (2002). The First Great Political Realist: Kautilya and His Arthashastra. Lanham: Lexington Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7391-0401-2.
புற இணைப்புகள்
[தொகு]- Kautilya's Arthashastra பரணிடப்பட்டது 2010-01-12 at the வந்தவழி இயந்திரம் 1915 R. Shamasastry translation, of Oriental Research Institute of Mysore, divided into 15 books.
- Kautilya on the scope and methodology of accounting, organizational design and the role of ethics in ancient India பரணிடப்பட்டது 2010-04-07 at the வந்தவழி இயந்திரம் Sihag, Balbir S. Dec 2004 Accounting Historians Journal .
- Another work on the Arthasastra is that of R.P.Kangle. The 1st volume of his work is a Sanskrit text compiled from various manuscripts, the 2nd provides an English translation of the Arthasastra, and the final includes a commentary on the work.
- The Arthashastra பரணிடப்பட்டது 2009-12-27 at the வந்தவழி இயந்திரம் Online Videos