உள்ளடக்கத்துக்குச் செல்

ஆலகாலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்து தொன்மவியலின் அடிப்படையில் ஆலகாலம் என்பது மிகவும் கொடிய விசமாகும். இந்த விசமானது அமுதம் வேண்டி அசுரர்களும், தேவர்களும் பாற்கடலை கடையும் பொழுது, கயிறாக பயன்படுத்தப்பட்ட வாசுகி பாம்பு வலி தாங்காமல் கக்கிய விசமாகும்.

இந்த விசம் உலகில் உள்ள உயிர்கள் அனைத்தையும் அழிக்க வல்லதாகவும், அதனால் சிவபெருமான் அதை உண்டதாகவும் புராணங்கள் கூறுகின்றன. அவ்வாறு சிவபெருமான் ஆலகாலத்தினை அருந்திய போது, அது வயிற்றுக்குள் செல்லாமல் இருக்க உமையம்மை சிவபெருமான் கழுத்தினை பிடித்தாகவும், அதனால் விசம் கண்டத்திலேயே தங்கி நீல நிறமாக கண்டம் ஆகியதாகவும் புராணம் சொல்கிறது.

ஆலகாலம் அசுரர்களையும், தேவர்களையும், முனிவர்களையும் துரத்தி வந்த காலத்தினை பிரதோச காலம் என்று சைவர்கள் கூறுகிறார்கள். இந்நிகழ்வு சனிக்கிழமையன்று நிகழ்ந்ததால் சனி பிரதோசம் வெகு சிறப்பான நாளாக கருதப்படுகிறது.

காண்க[தொகு]

கருவி நூல்[தொகு]

மச்ச புராணம்

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆலகாலம்&oldid=3537925" இலிருந்து மீள்விக்கப்பட்டது