வர்ணங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(வர்ணம் (இந்து மதம்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Mergefrom.svg
இக்கட்டுரையுடன் (அல்லது இதன் பகுதியுடன்) வர்ணாசிரமம் என்ற கட்டுரையை இணைக்கப் பரிந்துரைக்கப்படுகிறது. (கலந்துரையாடவும்)

வர்ணங்கள் (Varna (Hinduism) சமசுகிருத சொல்லான வர்ணா என்ற சொல்லிற்கு அடைத்து வை என்று பொருள். வரலாற்றையொற்றி வழிவழியாய் வந்த கூற்றின்படி வர்ணமும், சாதியும் வெவ்வேறானவை அல்ல அவை ஒன்றொக்கொன்று தொடர்புடையவை என்று கூறப்பட்டுள்ளது.

இந்து மக்களை அதன் இறையியல் கூற்றுப்படி மனிதனை குறிக்கும் புருஷா எனும் சொல் (ரிக் வேதக் 10.90 கூற்றுப்படி) மனிதர்களை நான்கு வர்ணங்களாக பிரிக்கின்றது. இவைகள் அவர்களின் தொழில் சமூகத்தைச் சார்ந்து தொழிலுக்கேற்ப வர்ணங்களாகப் பிரிக்கப்படுகின்றது.

இது பிறப்பினால் நிர்ணயிக்கப்படுவதில்லை என்றும் உதாரணத்திற்கு இராமாயணம் எழுதிய வால்மீகி பிறப்பினால் ஒரு வேடர் மற்றும் மீனவரான வேதவியாசர் மகாபாரதத்தையும் எழுதி, வேதங்களை தொகுத்தார் என்று கூறப்படுகின்றது. ஆகையால் அவரவர் அறிவுத்திறனாலும், தெய்வாதீனத்தாலும் முயல்பவர்கள் எவராயினும் மகரிஷி ஆகலாம் என்றும் கூறப்படுகின்றது.

பின்னணி[தொகு]

இந்த மரபுவழியாக ஏற்படுத்தப்பட்டக் குழுவால் அல்லது குழுவின் மேல் அமைக்கப்பெற்றவைத்தான் இராச்சியங்களும் இதர அமைப்புகளும் இவற்றின்படி மக்களை குழுக்களாகப் பயன்படுத்த , பொறுப்புணர்வுடன் அவரவர் செயல்பட வழிவகுக்கும் என நம்பப்பட்டது.

இம்மாதிரி வர்ண பிரிவுகளால் பிராமணர்களே அதிக முக்கியத்துவம் வாய்ந்தவர்களாக, சமயப் பற்றுள்ளவர்களாக, மேம்பட்ட நிலையில் உள்ளவர்களாக காட்டப்பட்டது. வர்ணம் ஒரு புதிதாகப் பிறந்த குழந்தைக்கு அவருடைய தந்தையைக் கொண்டும் அவரின் சாதியைக் கொண்டும் நிர்ணயிக்கப்பட்டது..

பிராமணர், சத்திரியர், வைசியர் இவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு உபநயனம் என்ற சடங்கின் மூலமும் அதை ஒரு விழாப் போன்ற நிகழ்வாக நடத்தி வர்ணங்களை சூட்டினர்.

உடல் அங்கங்களை வைத்துப் பிரித்தல்[தொகு]

வர்ணம் ரிக்வேதகாலத்திற்குப் பிறகும், யசூர் வேதம் மற்றும் பிராமண காலத்திலும் முக்கிய சமய செயலாக கருதப்பட்டது. அதற்குப்பின் இந்திய சமூகத்தில் இது ஒரு குழுக்களாக சாதி வாரியாக மாறியது. மேலும் ரிக்வேதத்தில் 10.90.12 ல் புருச சூக்தத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

 • பிராமணர்களின் வாய் புருஷா என்றும் அவர்களுடைய இரு கைகள் இராச்சியத்தையும் அதனை இராச்சியம் புரிபவர்களையும் உருவாக்கும் என்றும்,
 • அவர்களின் இரண்டு கால்கள் சூத்திரர்களை உருவாக்கும் என்று குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

பின்னாளில் வர்ணாசிரம தர்மம் என்ற கோட்பாட்டின்பாடி இனம் பிரித்து அழைக்க பிரிவுகாளாக வகுத்தனர்.

 • அந்தணர்-புலமை வாயந்த சமூகத்தவர்- அர்ச்சகர், புலவர், சட்ட ஆலோசர், அமைச்சர்கள், இராஜதந்திரிகள் இவர்களை உள்ளடக்கியது. சத்துவ குணம் மிக்கவர்கள்.
 • சத்திரியர்- உயர்வான குறை பண்புடையோர்-அரசர், மரியாதைக்குரியவர், வீரர்கள் மற்றும் ஆளுமையுடையோர்களை உள்ளடக்கியது.இராட்சத குணம் மிக்கவர்கள்.
 • வைசியர்- வணிகர் மற்றும் தொழில் முனைவோர் சமூகத்தார்-வணிகர், சிறு வியாபாரிகள், தொழிலதிபர் மற்றும் பண்ணையார் இவர்களை உள்ளடக்கியது. இராட்சத குணம் மற்றும் தாமச குணம் மிக்கவர்கள்.
 • சூத்திரர்- சேவகப் புரியும் சமூகத்தார்-கடின உழைப்பாளர், கூலித் தொழிலாளர்களை உள்ளடக்கியது. தாமச குணம் குணம் உடையவர்கள்.

வர்ணத்தின்படி குணங்கள்[தொகு]

வேத காலத்தில் வர்ணங்கைளை அடிப்படையாகக் கொண்டு முக்குணங்களும் வகுத்துக் கொண்டதாகக் கூறப்படுகின்றது. இதன்படி சத்துவ குணம்- அமைதி, இராட்சத குணம்- மூர்க்கம் மற்றும் ஆர்வமிக்கவர், கிளர்ச்சி குணம். தாமச குணம்-சிரத்தையற்ற, குறை குணமுள்ளவர்கள், மந்த குணம், சோம்பல் என்ற மூன்று குணங்களாகப் பிரித்துக் கொண்டனர்.

வாழ்க்கை பிரித்தல்[தொகு]

வேதாந்தக்காலத்திற்குப்பின் மனிதனின் வாழ்க்கையும் பிரிக்கப்பட்டது.

பின்பற்றுபவர்கள்[தொகு]

வர்ணம் மற்றும் சாதிகள் மிகவும் ஆழமாக இந்துக்களால் குறிப்பிடும்படியாக இந்தியா, பாலி மற்றும் நேபாளம் போன்ற நாடுகளில் பாரம்பரியமாக இந்த முறையை கடைப்பிடித்துக் கொண்டு வருகின்றனர். இதன் செயல்பாடுகளின் கூடுதலாக ஒரு வர்ணமும் சேர்க்கப்பட்டது அது ஐந்தாவது வர்ணமாக சாதியிலிருந்து ஒதுக்கப்பட்டவர்கள் , தீண்டப்படாதவர்கள் என்றவர்கள் சேர்க்கப்பட்டனர் இவர்களை பஞ்சமர்கள் எனப்பட்டனர். சப்பானில் புராகுமின் எனும் சமுகத்தவரை இன்றளவும் அரசுக்கு தெரியாமல் தீண்டத்தகாதவராக நடத்துகின்றனர்.

இதர பிரிவினர்[தொகு]

 • பிராமணர் தன்னில் தாழ்த்தப்பட்ட மூன்று வர்ணத்துப் பெண்களையும்,சத்திரியர் தன்னில் தாழ்ந்த இரண்டு வர்ணத்துப் பெண்களையும் வைசியர் தன்னில் தாழ்த்தப்பட்ட ஒரு பெண்ணையும் திருமணம் செய்து பெற்ற குழந்தை கள் அறுவரும் "அநுலோமர்" எனப்பட்டனர்.
 • சத்திரியர் தன்னில் உயர்ந்த ஒரு வர்ணத்துப் பெண்ணையும் , வைசியர் தன்னில் உயர்ந்த இரு வர்ணத்துப் பெண்களையும்,சூத்திரர் தன்னில் உயர்ந்த மூன்று வர்ணத்துப் பெண்களையும் கூடிப் பெற்ற பிள்ளைகள் அறுவரும் "பிரதிலோமர்" எனப்பட்டனர்.
 • பிராமணர் முதலிய நான்கு வர்ணத்தவர்களும் பிறர் மனைவியுடன் தவறுதலாகச் சேர்ந்து பெற்ற பிள்ளைகள் "அந்தராளர்" என்று அழைக்கப்பட்டனர்.
 • அநுலோமர் முதலாயினர் நான்கு வர்ணத்துப் பெண்கள் முதலியவர்களோடு பெற்ற பிள்ளைகள் "விராத்தியர்" என்றழைக்கப்பட்டனர்[1].

மேற்கோள்கள்[தொகு]

 1. யாழ்ப்பாணத்து நல்லூர் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் எழுதிய பாலபாடம் நான்காம் புத்தகம் (பதிப்பு எண்-32 (1998) (முதல் பதிப்பு ஆண்டு - 1865) - பக்:76, வெளியீடு: ஸ்ரீ ஆறுமுக நாவலர் சைவப்பிரகாச அறக்கட்டளை சிதம்பரம்-608 001)

உசாத்துணை[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

இவற்றையும் பார்க்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வர்ணங்கள்&oldid=2145463" இருந்து மீள்விக்கப்பட்டது