பேச்சு:வர்ணம் (இந்து சமயம்)

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வர்ணம் (இந்து சமயம்) என்னும் கட்டுரை இந்து சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்து சமயம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


வேண்டுகோள்[தொகு]

இது ஆங்கில கட்டுரையின் மொழியாக்கம் இன்னும் நிறையத் தொகுக்கலாம் அதிக சமஸ்கிருத சொற்கள் உள்ளன அவற்றிற்கு பொருள் கண்டுபிடிக்க கடினமாக உள்ளது. இதை தொகுக்கும் வேறு கட்டுரைகளை எளிதில் தொகுக்கலாம். இருப்பினும் என்னுடைய ஐயங்களைத் தீர்த்துக் கொள்ள இப்பக்கம் சென்றேன் அப்படியேத் தொகுத்தேன். சில சமஸ்கிருத சொற்கள் சரியான உச்சரிப்பா என்று பார்க்கவும். அவை பற்றி என்க்குத் தெரியாது. மூட நம்பிக்கைகள் (தனிப்பட்டக் கருத்து-விமர்சனம் வேண்டாம்) நம்நாட்டில் மற்றும் பிற நாடுகளில் பின்பற்றப்பட்டன என்பதை அறிந்துக் கொள்ள உதவி புரிந்த்து.அவ்வளவுதான்.--செல்வம் தமிழ் 03:15, 2 மார்ச் 2009 (UTC)

வர்ணம் பிறப்பாலேயே பெரும்பாலும் நிர்ணயிக்கப்படுகிறது, யூத படுகொலை நடக்கவில்லை[தொகு]

"4 வர்ணங்களாக பிரிக்கின்றது. இவைகள் அவர்களின் தொழில் சமூகத்தைச் சார்ந்து தொழிலுக்கேற்ப வர்ணங்களாகப் பிரிக்கப்படுகின்றது." ...நடைமுறையிலும், சமய நூலகள் பலவின் அடிப்படையிலும் வர்ணம்/சாதி பிறப்பின் அடிப்படையிலேயே அமைகிறது. தற்காலத்தில் தமிழ்நாட்டு அரசு சட்டம் இயற்றும் வரை பிராமணராக பிறக்காதவர் சிதம்பரத்தில் பூசை செய்ய முடியுமா? இப்படி அப்ப பொய்யை எழுதுவது 6 மில்லியன் யூத மக்களின் படுகொலை நடக்க வில்லை என்பதற்கு இணையானதாகும். அதாவது வரலாற்றின் ஒரு பெரும் இழிவை பூசி மொழுகுவதாகும். --Natkeeran 03:29, 2 மார்ச் 2009 (UTC)

"The Indian caste had hereditary membership. Marriage was only permitted within the same caste. There were restrictions on the choice of occupation and on personal contact with members of other castes. Central to the caste system were the ideas of samsara (reincarnation) and karma (quality of action). The belief is that if one obeys the rules of caste, reincarnation into a higher caste is possible, but women may only have the privilege of coming back as an animal if they are good enough." [1]

அடிமைத்தனத்தையும் நியாப்படுத்தி எழுதலாம்...மக்களை "பொறுப்புணர்வுடன்"....இத்துதத்துவ பரப்புரை...--Natkeeran 03:34, 2 மார்ச் 2009 (UTC)


நல்ல வாதம் நானும் உடன்படுகின்றேன். என் நிலையே விளக்கிவிட்டேன். யாமொன்றும் அறியேன் பராபரமே--செல்வம் தமிழ் 03:49, 2 மார்ச் 2009 (UTC)

இதன் ஆங்கில கட்டுரையையும் நடுவு நிலைமைக்கு உட்படுத்துங்கள்.--செல்வம் தமிழ் 02:00, 3 மார்ச் 2009 (UTC)

அனைத்து நடுநிலை பயனர்களின் ஆதரவு வேணடி உங்கள் நடுநிலை கருத்துக்களை தயவு செய்து தெரிவிக்குமாறு விண்ணப்பிக்கின்றேன்[தொகு]

நக்கீரன் கருத்துக்கள் கூறியபோதே கருத்துக் கூறி இருக்கவேண்டும் மற்ற பயனர்களின் கருத்துக்காக காத்திருந்தேன்.

கட்டுரையின் தலைப்பை தவறுதாலாக புரிந்திருக்கின்றார் அது மட்டுமில்லாமல் நடுநிலைக் கொள்கைக்கு பொது விவாதத்திற்கு விடுவதற்கு முன் பயன்படுத்தியருக்கின்றார். இது ஒரு தலைபட்சமானது விக்கியின் அதிகாரம் படைத்தவர் என்ற செயலை வெளிப்படுத்துகின்றது.

இவர் மட்டும்தான் கருத்துக்கள் வெளியிடுவார் என்று எதிர் பார்த்தேன் அதே போல் நடந்தும் இருக்கின்றது.

விக்கி அறிவுறுத்தலின் படி இது வரை ஆங்கிலத்தில் உள்ள கட்டுரைகளை ஒரு வரியும் மாறாமல் தமிழாக்கம் செய்கின்றேன். அதுவும் பகுதி தான் இன்னும் நிறைய பகுதிகள் உள்ளன. அவற்றை வேறுயாராவது தொகுக்க வேண்டும் இது ஒரு கூட்டு முயற்சி.

என் சொந்த கருத்துக்கள் எதுவும் உள்ளிடுவதில்லை. கட்டுரையின் கருத்துக்கள் ஆங்கிலத்தில் உள்ளனவா என்று ஆராய்கின்றார்கள் அதுவும் எனக்குத் தெரியும்.

ஆங்கிலத்தில் வேதங்களில் உள்ளவைபற்றி மனுசாஸ்திரத்தில் உள்ளவைபற்றி, எழுதப்பட்டுள்ளது. அது தவரான கருத்துக்கள் அனைத்துலகமும் ஒத்துக் கொண்டிருக்கின்றன. இங்கே தமிழில் வெளியிடப்பட்டுவிட்டதே என்று நினைத்தால் இது ஒருதலைப்பட்சமா இல்லையா. உள் நோக்கம் கொண்ட செயலாக வெளிப்படுகின்றது.


வேதங்களில் உண்மையில் சொல்லியிருக்கின்றனவா என்று ஆய்ந்து அதை நடுவு நிலைக்கு விட வேண்டும் அல்லது ஆங்கிலத்தில் உள்ளவற்றையும் நடுவுநிலைமக்கு விட வேண்டும் என்பது, அப்படி நடைபெற வில்லை,


இது ஒருதலைபட்சமான் செயலா இல்லையா தாங்களே கூறுங்கள்.


ஆங்கிலத்தில் இருந்தால் குற்றம் இல்லை (முதலில் குற்றமே இல்லை) தமிழில் எழுதினால் குற்றம் என்றால் தமிழில் அனைவருக்கும் உண்மை தெரிந்து விட்டது என்ற வருத்தத்திலா?

இவருக்கு பிடித்த சார்ந்த கருத்துக்கு ஆதரவான் கட்டுரைகளை எழுத வேண்டும் நினைப்பது என்றால் அவருக்கு எந்த எந்த கட்டுரைகள் பிடிக்கும் எப்படி மொழிபெயர்க்க வேண்டும் என்று வெளியிட்டால் அதன் படி கட்டுரை எழுத ஒரு வேளை முனையலாம்.

மேலும் பயனர் குறிப்பிட்டிருக்கின்றார் பிராமணர் அல்லாதவர் சிதம்பரத்தில் பூசை செய்யமுடியுமா அது தான் வேதத்தில் எழுதப்பட்டுள்ளதே அதன் பொய்த்தனைமையை விளக்குவதுதான் இக்கட்டுரை. பயனர் இதை தனிக்கட்டுரையாக எழுத வேண்டும் வேதத்தில் மனிதர்களை பிரித்தாலும் தன்மைகள் உள்ளது. ஒரு சாராரை பிராமணர்களை பெருமைப்படுத்த, ஆதாயம் அடைய சூழ்ச்சியாக எழுதப்பட்டுள்ளது.

இதைத்தான் பெரியார் எதிர்த்தார். தாங்கள் இது குறித்து எந்த கருத்துமே கூறவில்லை. பெரியாரின் வர்ணாசிரம தர்ம எதிர்ப்பு என்று வருகின்றபொழுது வர்ணாசிரம தர்மம் என்றால் என்ன கேள்வி எழும் பொழுது இங்கு வந்து பயனர்கள் மற்றும் வாசகர்கள் பார்த்து அறிந்து கொள்வர்.

இது என்ன நான் உருவாக்கியதா? நான் எற்றுக்கொண்டாலும் ஏற்காவிட்டாலும் இந்த நாலு மற்றும் ஐந்து தர்மங்களில் ஒருவராக பிறந்தவன்தான். (ஆதாயம் பெரும் சமுதாயமல்ல ஒடுக்கப்பட்ட சமுதாயம்). அதற்காக நான் வருத்தப்படவில்லை நான் ஐந்திலும் இல்லை என்னை அவர்கள் யார் பிரிப்பதற்கு. நாம் அனைவரும் அப்படித்தான்.

நீங்கள் இந்த கருத்தை கூறியிருந்தால் நடுநிலைமைவதி அப்படி எதுவுமே கூறவில்லை. கட்டுரைக்கு உள்நோக்கம் கற்பிக்க முனைந்திருக்கின்றீர். தமிழர்கள் திராவிடர்கள் அறிவாளியாக மாறுவதை விரும்பாத செயலாகத்தான் உள்ளது.

வேதங்களை நடுவுக்கு நிலைமைக்கு விடுங்கள். கட்டுரையை எதிர்ப்பதாலேயே முற்போக்குவாதியாக முடியாது. வேதங்களை எதிர்க்க வேண்டும். ஆங்கிலத்தில் எழுதினால் புண்ணியம் தமிழில் எழுதினால் பாவமா. மாற்றி எழுதினால் பாவம் இன்னும் முழுமையே அடையவல்லை அதற்கு மேலும் நீங்கள் முயன்றிருக்கவேண்டும். அதை செய்வதில்லை கட்டுரைக்கு களங்கம் கற்பிக்கும் செயல்மட்டுமே நடைபெறுகின்றது. இதனால் நாங்கள் அதிகாரம் பெற்றவர் நாங்கள் எதையும் செய்வோம் என்பது போல் செய்கிறீர்கள். விக்கியே அதிர்ச்சி அடையும் செயல்.


வேறு யாரும் செய்வதில்லை. இங்கேயும் வர்ணாசிரம தர்மம் பின்பற்றப் படுகின்றது என்று எடுத்துகொள்ளத் தோன்றுகின்றது. யாரவது கருத்து தெரிவித்திருக்கின்றார்களா எல்லாருக்கும் இதைப் பற்றித் தெரியும்.

ஆங்கில கட்டுரை சென்று எதாவது மாற்றியிருக்கின்றேனா என் சொந்த கருத்தை உள்ளிட்டிருக்கின்றேனா. இங்கு யாருடைய கட்டுரையும் அவர்கள் சொந்தக் கட்டுரை அல்ல. நான் ஏதாவது இது மாதிரி கருத்துக்கள் வெளியிடுவதும் இல்லை உங்கள் கட்டுரைகளை பார்ப்பதற்கு நேரமும் இல்லை. கட்டுரை முழுமையடையாத போது நடுநிலைக்கு உட்படுத்துவது உள்நோக்கம் கொண்ட செயல்

தமிழில் யாரும் அறிந்து கொள்ளக் கூடாது என்பதில் எச்சரிக்கையாக யாரும் தொகுக்க முன் வரக்கூடாது என்பதற்காக இந்த தன்னிச்சை நிலையை விக்கியின் அதிகாரம் பெற்றவராக விளையாடுகிறார்கள் என்ற சந்தேகத்தை எழுப்புகின்றது.


விக்கி தங்களுடைய கட்டுபாட்டில் இயங்கவேண்டும் என்ற செயலாக எண்ணத் தோன்றுகின்றது. இதே மாதிரி நடுவிநிலைமையை கனக் ஏற்படுத்தியிருக்கின்றீர்கள். இருவர் மட்டும் தான் செயல்படுகிறீர்கள் என்ற தோற்றத்தை உருவாக்குகிறீர்கள். கட்டுரையின் எண்ணிக்கை முக்கியம் அல்ல.

நடுநிலை பயனர்கள் கருத்து தெரிவிக்கவும். வேதத்தில் குற்றமா கட்டுரையில் குற்றமா அ ஆங்கில கட்டுரையில் குற்றமா. அப்படியென்றால் இன்னும் குற்றங்கள் நிறைய ஆங்கிலக் கட்டுரையில் உள்ளன. வேதத்திலும் உள்ளன எதை நடுவு நிலைமைக்கு விட வேண்டும். நடுவு நிலைமைக்கு விட்ட பயனர் செயல் ஒரு தலைபட்சமான செயலா? பாரபட்சமான செயலா? இருட்டடிப்பு செய்ய முனைகின்றாரா? என்ற அச்சம் எழுகின்றது.--செல்வம் தமிழ் 06:02, 5 மார்ச் 2009 (UTC)

செல்வம், நீங்கள் இதுபோன்ற சிக்கல்களை ஏதோ தனிநபர் சிக்கலாக எடுத்துக் கொள்ளக்கூடாது. {{POV}} வார்ப்புருவை முதலில் இட்டுவிட்டு பின்னர் மற்றவர்களின் கருத்தைக் கேட்பது வழக்கம். ஆங்கில விக்கியில் நடுநிலை தவறியிருந்தால் அங்கும் எவர் வேண்டுமானாலும் இந்த வார்ப்புருவை இட முடியும். ஆனால், விவாதத்திற்குப்பின் அது தேவையற்றது என்ற முடிவு ஏற்பட்டால் நீக்கிவிடுவர். ஒரு எச்சரிக்கை உணர்வில் இந்த வார்ப்புருவை நற்கீரன் இட்டிருக்கலாம். அதன்பிறகு கட்டுரையின் உள்ளடக்கமும் மாறியுள்ளது. இப்போது பார்த்து விவாதித்து முடிவு செய்யலாம். இதை இருட்டடிப்பு என்று கருதுவதற்கு இடமில்லை. கட்டுரையை நீக்கியிருந்தால் அதற்கு இடமுண்டு. இதுபோன்ற வார்ப்புருவைச் சேர்ப்பதற்கு சிறப்பு அதிகாரம் எதுவும் தேவையில்லை. -- சுந்தர் \பேச்சு 07:04, 5 மார்ச் 2009 (UTC)