சாதுர்மாசிய விரதம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சாதுர்மாஸ்ய விரதம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

இந்து சமயத்தில் சாதுர்மாசிய விரதம் என்பது துறவிகள் மழைக்காலமான ஆடி மாத பௌர்ணமி முதல் கார்த்திகை மாத பௌர்ணமி வரை, நான்கு மாதங்கள் ஒரே இடத்தில் தங்கி, வேத வேதாந்தங்களை மக்களுக்கு எடுத்துச் சொல்வார்கள். இந்த மாதங்களில் துறவிகள் உணவு முறையில் சில கட்டுப்பாடுகளை வகுத்துக் கொள்வார்கள். முதல் மாதம் உணவில் காயும் பழங்களும் இருக்கும். இரண்டாம் மாதம் பால் தவிர்ப்பார்கள். மூன்றாம் மாதம் தயிரை தவிர்ப்பார்கள். நான்காம் மாதம் பருப்பு வகைகளைச் சேர்த்துக் கொள்ள மாட்டார்கள்.[1]

2023ம் ஆண்டில் சாதுர்மாசிய விரதம் சூன் 30ல் துவங்கி நவம்பர் 23ம் நாளில் முடிவடைகிறது. [2]

குருபூர்ணிமா[தொகு]

இந்த சாதுர்மாஸ்ய காலத்தில் கடைபிடிக்கும் விரதத்தை, வேதம் மற்றும் வேதாந்தக் கல்வியை கற்பித்த குருமார்களை நினைவு கூறும் வகையில் ஆடி மாத பௌர்ணமி அன்று துறவிகள், வேதவியாசரை வழிபட்டுத் துவக்குவார்கள். குரு பூர்ணிமா என்று அழைக்கப்படும் வியாச பௌர்ணமி நாளில் (ஆடிப் பௌர்ணமி) எங்கிருந்தாலும் குருவை மனதார வணங்கினால், தாங்கள் பெற்ற வேதாந்தக் கல்வி மேன்மேலும் சிறப்பாக வளரும் என்பது நம்பிக்கை.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

உசாத்துணை[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சாதுர்மாசிய_விரதம்&oldid=3748696" இலிருந்து மீள்விக்கப்பட்டது