அக்னி ஹோத்திரம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
அக்னி ஹோத்திரம் (Agnihotra) என்பது வீட்டின் ஒரு பகுதியில், சிறு அக்னி குண்டம் அமைத்து, அக்னி வளர்த்து அதனை அணையாமல் காத்து, நாள்தோறும் காலை மற்றும் மாலை வேளையில் (சூரியோதயம் மற்றும் சூரிய அஸ்தமனம்) ஒரு இல்லறத்தான், காயத்ரி மந்திரம் ஓதி செய்யும் வேதகால சிறு வேள்வியாகும். இவ்வேள்வியை யார் உதவியின்றி தனிமனிதன் செய்ய வேண்டியது.
அக்னி ஹோத்திரம் செய்ய வேண்டிய பொருட்கள்: சிறு அக்னி குண்டம், சாண வறாட்டிகள், பசு நெய் மற்றும் முனை உடையாத பச்சரிசி.
அக்னி ஹோத்திரம் வேள்வியை செய்பவருக்கு ”அக்னி ஹோத்திரி” எனும் சிறப்பு பெயரிட்டு அழைக்கின்றனர். அக்னி ஹோத்திரி இறப்பின், அவன் அக்னி ஹோத்திரத்திற்காக வளர்த்த அக்னி குண்டத்திலிருந்து நெருப்பு எடுத்து அவனின் சவ உடலை எரிப்பர். பின்னர் அவன் வளர்த்த அக்னி குண்டத்தின் நெருப்பு அணைக்கப்பட்டுவிடும்.
இந்த இவ்வேள்வி குறித்து அதர்வண வேதத்தில் (11:7:9)-இல் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும் இவ்வேள்வியை செய்முறை குறித்து யசூர் வேத சம்ஹிதையிலும், சதபத பிராமணத்திலும் (12:4:1) விளக்கப்பட்டுள்ளது. சாம வேதத்தின் இறுதிப் பகுதியில் அக்னி ஹோத்திரம் செய்முறை விளக்கப்பட்டுள்ளது. தற்போது அக்னி ஹோத்திரம் எனும் வேள்வி மிகச் சிலரால் மட்டுமே செய்யப்படுகிறது.