யோனி, இந்து சமயம்


யோனி (Yoni); தேவநாகரி:"vulva", "abode", or "source") இந்து சமயத்தில் சக்தியை வழிபடும் சாக்த சமயத்தவர்களின் சின்னமாகும்.[1][2] பொதுவாக பெண் பிறப்புறுப்பை, வட மொழியில் யோனி என்றும் அழைக்கின்றனர்.
சைவ சமயத்தில், சிவபெருமானின் துணைவியாக சக்தி கருதப்படுகிறார்.
யோனி மற்றும் லிங்கத்தின் ஒன்றிப்பே படைப்பு, இருப்பு, மற்றும் மீளுருவாக்கம் ஆகியவற்றின் நித்திய செயல்முறையை பிரதிபலிக்கிறது.
இந்திய இந்துச் சிற்பக் கலையில், உமிழும் கிண்ணம் (யோனி) போன்ற அமைப்பின் மீது உருளை வடிவ இலிங்கம் பொருத்தப்பட்டிருக்கும். யோனி மீதான இலிங்கத்தையே சிவ-சக்தியாக சைவர்கள் வழிபடுகின்றனர்.

இந்தியச் சமயங்களில்
[தொகு]
இந்து சமயத்தில் அனைத்துப் பிரபஞ்சங்களின் இயக்கத்திற்கும், உயினரினங்களின் படைப்பிறகும் காரணமாக யோனி, சக்தியின் பிரதிநிதியாக கருதப்படுகிறது. இந்து தத்துவத்தும் கூறும், தாந்திரீகத்தின்படி, யோனியே அனைத்து உயினக்களின் தோற்றத்திற்கு காரணமாகும்.[3]
இந்து தொன்மவியல் கூற்றின்படி, பிரபஞ்சத்தில் உள்ள 8.4 மில்லியன் யோனிகளில், மனித யோனியும் ஒன்றாகும்.
நற்கர்மம் செய்தவர்களே மனித யோனியில் பிறக்கின்றனர். பிறர் விலங்குகள், தாவரங்கள் மற்றும் இராட்சத யோனியில் பிறக்கின்றனர். பிறவிச்சுழற்சியிலிருந்து விடுதலை பெற்றவர்களே பிறவாப்பெருநிலை அடைகிறார்கள்.[4]
யோனி வழிபாடு
[தொகு]அசாம் மாநிலத்தில் சூன் மாதத்தில் சாக்தர்கள், பூமியின் வளமைக்காக நான்கு நாட்கள் கொண்டாடப்பட்ம் அம்புபச்சி திருவிழாவின் போது காமாக்கியா அம்மனை யோனி வடிவத்தில் வழிபடுகின்றனர்.
தொல்லியலில்
[தொகு]கிமு 1600 ஆண்டுகளுக்கு முந்தைய அரப்பா – மொகெஞ்சதாரோ தொல்லியல் களங்களில், இலிங்கம் - யோனி வடிவச் சிற்பங்கள் கண்டுபிடிக்கப்பட்டதால், சிந்து வெளி நாகரீக மக்கள் இலிங்க வழிபாட்டுடன், யோனி வழிபாட்டினை மேற்கொண்டனர் என அறியப்படுகிறது.[5]
பிற பயன்பாடுகள்
[தொகு]
- ஆரம்ப காலத்தில் தியானப் பயிற்சியின் போது, கவனச் சிதறலை தடுக்க யோனி முத்திரை பயன்படுத்தப்படுகிறது.[6]
- கலைஞர் தாங்கள் வரைந்த பெண்மையைச் சித்தரிக்கும் ஓவியங்களில் யோனிச் சின்னத்தை பயன்படுத்துவர்.[7]
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Johnson, W.J. (2009). A dictionary of Hinduism (1st ed.). Oxford: Oxford University Press. ISBN 978-0-19-172670-5. Retrieved 21 October 2016.
- ↑ "yoni (Hinduism) -- Encyclopaedia Britannica". britannica.com. Retrieved 2014-07-28.
- ↑ Jones, Constance; Ryan, James D. (2006). Encyclopedia of hinduism. Infobase publishing. p. 156 & 157. ISBN 0-8160-7564-6.
- ↑ Sivkishen (2015). Kingdom of Shiva. Diamond publishing. p. 426. ISBN 8128830287.
- ↑ Lal, B.B. (2002). The Sarasvati Flows On: The Continuity of Indian Culture. Aryan Books International. ISBN 81-7305-202-6.
- ↑ "Practice Pranayama to Access Higher Energies" (in en-US). American Institute of Vedic Studies. 2013-03-27 இம் மூலத்தில் இருந்து 2015-07-09 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150709180242/http://vedanet.com/2013/03/27/practice-pranayama-to-access-higher-energies-2/.
- ↑ [1], Controversial Madonna Painting Opens Magnet HIV Clinic Art Show, Edge on the Net, McCoy, Winnie, Retrieved 30 October 2013.