குங்குமம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
குங்குமம்

குங்குமம் இந்துப்பெண்கள் நெற்றியில் பொட்டு வைத்துக்கொள்ள பயன்படுத்தும் ஒரு பொடி. இயற்கை முறையில் விரலி மஞ்சள், வெண்காரம், படிகாரம், கஸ்தூரி மஞ்சள் ஆகியன சேர்ந்து அரைக்கபட்ட பொடியுடன் நல்லெண்ணய் கலக்கி குங்குமம் தயாரிக்கப்படுகிறது. மஞ்சளும் காரமும் வேதிவினையாற்றி சிவப்பு நிறம் கிடைக்கிறது. அம்மன் கோவில்களில் பிரசாதமாக குங்குமம் தரப்படுகிறது. செயற்கையாகத் தயாரிக்கப்படும் குங்குமம் இடுவதால் சிலருக்கு ஒவ்வாமை ஏற்படுகிறது. தவிர தற்காலத்தில் ஒட்டுப்பொட்டுக்கள் பயன்படுத்த எளிதாகவும் மலிவாகவும் கிடைப்பதால் குங்குமம் கோவில்களிலும் இந்து சமய சடங்குகளின் போதும் பயனாகிறது.

வேறு நாட்டு இந்துக்களை விடவும் நேபாள் நாட்டு இந்து பெண்கள். குங்குமத்தை மதிப்பது அதிகம் என்றே சொல்லலாம். இன்றளவும் நேபாளத்தில் குங்குமத்துக்கு தனி மதிப்பு உள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=குங்குமம்&oldid=3200426" இருந்து மீள்விக்கப்பட்டது